உள்ளடக்கத்துக்குச் செல்

கசுபாசோ

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கசுபாசோ
Gazpacho
மாற்றுப் பெயர்கள்Andalusian gazpacho, Gaspacho
பரிமாறப்படும் வெப்பநிலைபசியூக்கி
தொடங்கிய இடம்எசுப்பானியா, போர்த்துகல்
பகுதிஅந்தாலூசியா, Alentejo, Algarve
பரிமாறப்படும் வெப்பநிலைகுளிர்ச்சி
முக்கிய சேர்பொருட்கள்நீர், இடலை எண்ணெய், புளிங்காடி, வெள்ளைப்பூண்டு, தக்காளி, வெள்ளரி, பிற காய்கறிகள்
வேறுபாடுகள்Salmorejo, அசோபிலான்கோ
உணவு ஆற்றல்
(per பரிமாறல்)
வேறுபடுகின்ற கலோரி

கசுபாசோ (gazpacho, எசுப்பானியம்: [ɡaθˈpatʃo]) அல்லது gaspacho (Portuguese: [ɡɐʃˈpaʃu]), ஆங்கிலம்: Andalusian gazpacho) என்பது குளிர்ச்சி நிலையில் சுவைக்கக் கூடிய சூப் ஆகும். இதில் வேக வைக்காத காய்கறித் துண்டுகள் கலந்து இருக்கும்.[1] இந்த சூப், தெற்கு ஐபீரிய மூவலந்தீவு, அதனைச்சுற்றியுள்ள இடங்களில் இருந்து தோன்றியதென்பர். இந்த சூப் எசுப்பானியத்தில் பரவலாக உண்ணப்படுகிறது. போர்த்துக்கல் நாட்டில் இது வெயிற்காலத்தில் மிகவும் விரும்பி குளிர்ச்சிக்காக சுவைக்கப்படுகிறது. இதில் பல்வேறு வகைகள் தயாரிக்கப்படுகின்றன. அதில் ஒன்றாக அசோபிலான்கோவைச் சொல்லலாம்.

தயாரிப்பு முறை

[தொகு]

இதில் ரொட்டி, தக்காளி, வெள்ளரி, வெங்காயம், குடை மிளகாய், பூண்டு, இடலை எண்ணைய், புளிங்காடி, நீர், உப்பு ஆகிய கலந்து செய்யப்படுகிறது..[2] இந்தாட்டின் வடபகுதியில் சீரகம் கலந்தும் செய்வர்.

மேற்கோள்கள்

[தொகு]
  1. Oxford English Dictionary, 2nd. ed cites R. Ford Hand-bk. Travellers in Spain I. i. 69 (1845) "Gazpacho...is a cold vegetable soup composed of onions, garlic, cucumbers, pepinos, pimientas, all chopped up very small and mixed with crumbs of bread, and then put into a bowl of oil, vinegar, and fresh water."
  2. "gazpacho". Royal Spanish Academy.
"https://ta.wikipedia.org/w/index.php?title=கசுபாசோ&oldid=3955657" இலிருந்து மீள்விக்கப்பட்டது