தக்காளி
தக்காளி | |
---|---|
சந்தைப்படுத்தப்பட்ட தக்காளியின் குறுக்குவெட்டுத் தோற்றம் | |
உயிரியல் வகைப்பாடு | |
திணை: | |
துணைத்திணை: | |
பிரிவு: | |
வகுப்பு: | |
துணைவகுப்பு: | |
வரிசை: | |
குடும்பம்: | |
பேரினம்: | |
இனம்: | சோ. லைகோபெர்சிகம்
|
இருசொற் பெயரீடு | |
சோலானம் லைகோபெர்சிகம் லின்னேயஸ் | |
வேறு பெயர்கள் | |
Lycopersicon lycopersicum |
தக்காளி சமையலிற் காயாகவும் பழமாகவும் பயன்படும் ஒரு காய்கறிச் செடியினமாகும். இது கத்தரிக்காய், குடைமிளகாய் போன்றே சோலானேசியெ (Solanaceae ) அல்லது நிழல்சேர் (nightshade) செடிக் குடும்பத்தைச் சேர்ந்த செடியினமாகும். இதனை அறிவியலில் சோலானம் லைக்கோபெர்சிக்கம் (Solanum lycopersicum) அல்லது இணையாக லைக்கோபெர்சிக்கன் லைக்கோபெர்சிக்கம் (Lycopersicon lycopersicum) என்று அழைக்கிறார்கள்.[1][2] இதன் தாயகம் (தென் அமெரிக்கா, நடு அமெரிக்கா மற்றும் வட அமெரிக்காவின் தென் பகுதியாகும். குறிப்பாக பெரு, மெக்சிக்கோவில் இருந்து அர்ஜெண்டைனா வரையான பகுதியாகும்.[2][3] ஓராண்டுத் தாவரமான இது 1-3 மீ உயரமாக வளர்கிறது.
ஆங்கிலத்தில் இதற்கு வழங்கும் பெயரான டொமேட்டோ (அல்லது டொமாட்டோ) என்பது நஃகுவாட்டில் (Nahuatl) மொழிச்சொல்லான டொமாட்ல் (tomatl) என்பதில் இருந்து வந்ததாகும்.[3][4] இதனை அப்பகுதிகளை முன்னர் ஆண்ட ஆசுட்டெக் மக்கள் தங்கள் மொழியில் ஷிட்டோமாட்ல் (xitomatl, ஒலிப்பு shi-to-ma-tlh) என்று அழைக்கப்பட்டது. அறிவியல் பெயராகிய லைக்கோபெர்சிக்கம் (lycopersicum) என்பது ஓநாய்-பீச்பழம் ("wolf-peach") என்று பொருள்படுவது, ஏனெனில் இவற்றை ஓநாய்கள் உண்ணும்.
இந்தியாவில் தக்காளி
[தொகு]மணித்தக்காளி, பேத்தக்காளி என்னும் இனங்கள் இந்தியாவில் உள்ளவை.மேலே விளக்கப்பட்ட அமெரிக்கத் தக்காளியைத் தமிழர் சீமைத்தக்காளி எனக் கூறுவர்.
- மணித்தக்காளி மிளகு அளவு பருமன் கொண்டது. இதன் பழம் கருமையானது. காய்களைக் குழம்பு வைப்பர். பழங்களை உண்பர்.
- நுரைத்தக்காளி என்னும் பேத்தக்காளி குப்பைக் கூளங்களில் தோன்றி வளரும். இதனை நெய்த்தக்காளி எனவும் வழங்குவர். பழம் மூடாக்குத் தோலுடன் காணப்படும். மூடாக்குத் தோலை உரித்துவிட்டு உள்ளே இருக்கும் பசுமைநிறத் தக்காளியை உண்பர். இது காய்நிலையில் கசக்கும். எனவே உண்ணமாட்டார்கள். இந்த உள் தக்காளி பட்டாணி அளவு பருமன் கொண்டிருக்கும். காய்நிலையில் அளவு பருமன் கொண்டது. இதன் பழம் கருமையானது. மூடாக்குத் தோலை உரித்துவிட்டு காய்களைக் குழம்பு வைப்பர். பழங்களை உண்பர்.
தக்காளி உற்பத்தி
[தொகு]2020ஆம் ஆண்டில், தக்காளியின் உலக உற்பத்தி 187 மில்லியன் டன்களாக இருந்தது, இதில் சீனா 35% உற்பத்தி செய்தது. இதைத் தொடர்ந்து இந்தியா, துருக்கி மற்றும் அமெரிக்கா ஆகியவை முக்கிய உற்பத்தியாளர்களாக உள்ளன (அட்டவணை)
தக்காளி உற்பத்தி – 2020 | |
---|---|
நாடு | (மில்லியன் டன்கள்) |
சீனா | 64.8 |
இந்தியா | 20.6 |
துருக்கி | 13.2 |
ஐக்கிய அமெரிக்கா | 12.2 |
எகிப்து | 6.7 |
ஈரான் | 5.8 |
மெக்சிக்கோ | 4.1 |
உலக | 186.8 |
மூலம்: FAOSTAT ஐக்கிய நாடுகள்[5] |
தக்காளி வித்து பிரித்தெடுக்கும் முறை
[தொகு]நன்கு பழுத்த பழத்தில் இருந்து உட்கனியம் வித்துக்களுடன் வேறாக்கப்படும். இது இரு நாள் வரை நொதிக்கவிடப்படும். மறு வித்திக்களை சுற்றியுள்ள சளிப்படை நிங்கும் வகையில் நன்கு வித்துக்கள் கழுவப்பட்டு வித்துக்கள் வேறாக்கப்படும். பின் சுத்தமான துணியின் மீது ஏரலிப்பு வடியும் வரையில் வைக்கப்படும். அதன் பின் சில மணி நேரம் வரையில் வெயிலில் உலரவிடப்படும். பின் நிழலான இடத்தில் உலர்த்தி குளிரான சூழலில் சேமிக்க வேண்டும்.
படங்கள்
[தொகு]-
சான் மர்சனோ தக்காளி[6]
-
சீமைத் தக்காளியில் நாட்டுத் தக்காளி
-
பேத்தக்காளி, பூவும் காயும்
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Phylogeny".
Molecular phylogenetic analyses have established that the formerly segregate genera Lycopersicon, Cyphomandra, Normania, and Triguera are nested within Solanum, and all species of these four genera have been transferred to Solanum
- ↑ 2.0 2.1 "Garden Tomato. Solanum lycopersicum L." Encyclopedia of Life. பார்க்கப்பட்ட நாள் 1 January 2014.
- ↑ 3.0 3.1 "Tomato". Encyclopaedia Britannica. 4 January 2018. பார்க்கப்பட்ட நாள் 15 January 2018.
- ↑ "Tomato". Etymology Online Dictionary. 2018. பார்க்கப்பட்ட நாள் 15 January 2018.
- ↑ "Tomato production in 2020, Crops/Regions/World list/Production Quantity (pick lists)". UN Food and Agriculture Organization, Corporate Statistical Database (FAOSTAT). 2022. பார்க்கப்பட்ட நாள் 5 May 2022.
- ↑ "Regulations for obtaining the use of the collective trade mark 'Verace Pizza Napoletana'" (PDF). Associazione Verace Pizza Napoletana. பார்க்கப்பட்ட நாள் 12 ஏப்பிரல் 2024.