தீவு
தீவு அல்லது கடலிடைக் குறை என்பது நான்கு புறமும் கடல், ஏரி, ஆறு போன்ற நீர்ப்பரப்புகளால் சூழப்பட்ட ஒரு நிலப்பகுதியைக் குறிக்கும். உலகில் உள்ள தீவுகளுள் கிரீன்லாந்து மிகப் பெரியதாகும். இலங்கை, அந்தமான் நிக்கோபர் போன்றவையும் தீவுகளாகும். பிற நிலப்பகுதிகளுடன் பாலங்கள் போன்ற செயற்கையான நிலத்தொடர்புகளை உருவாக்கினாலும், குறித்த நிலப்பகுதி தொடர்ந்தும் தீவு என்றே கருதப்படும். சிங்கப்பூர், புங்குடுதீவு போன்றவை இத்தகைய தீவுகள் ஆகும். உலகின் வெப்பமண்டலப் பகுதிகளில் மட்டும் 45,000 தீவுகள் உள்ளன.[1] தீவுகள் பொதுவாக கண்டத்தீவு, கடல் தீவு என இரு வகைப்படும். செயற்கையான தீவுகளும் உள்ளன.
வகைகள்
[தொகு]கண்டத் தீவுகள்
[தொகு]ஏதேனும் ஒரு கண்டத்தை அடுத்துள்ள தீவுகளுக்குக் கண்டத்தீவுகள் என்று பெயர். இத்தீவுகள் ஒரு காலத்தில் கண்டத்துடன் இணைந்திருந்தவையாகும். இலங்கை, பிரிட்டன், சப்பானியத் தீவுகள் இவ்வகையைச் சேர்ந்தவை.
கடல் தீவுகள்
[தொகு]கண்டத்துக்கு மிகத் தொலைவில் கடலில் காணப்படுபவை கடல் தீவுகள் ஆகும். கடலின் அடியிலுள்ள எரிமலையிலிருந்து வெளிப்படும் பாறைக் குழம்பு, மேலும் மேலும் படிவதன் காரணமாக வளர்ந்து, கடலுக்கு மேலே எழும்பி உருவானவை இத்தகைய தீவுகளாகும். ஹவாய்த் தீவு, டகீட்டித் தீவு, சமோவா தீவு ஆகியவை இத்தகைய தீவுகளாகும்.
பவளத் தீவு
[தொகு]கடலில் இறந்த பவளப் பூச்சிகளின் கூடுகள் ஒன்றன் மேல் ஒன்றாகப் படிந்து சிறிது சிறிதாக வளர்ந்து உண்டாவது பவளத் தீவு ஆகும். தென் பசிபிக் பெருங்கடலில் உள்ள 'வேக் தீவு' ஒரு பவளத் தீவு ஆகும்.
மண் தீவு
[தொகு]ஆற்றின் நடுவிலோ கழிமுகத்திலோ வண்டல் மண் படிந்து கொண்டே வந்து ஒரு தீவாக மாறுவதும் உண்டு.
அளவியல்
[தொகு]கிரீன்லாந்து 21 லட்சம் சதுர கிலோமீட்டர்கள் கொண்ட உலகின் மிகப்பெரிய தீவாகும்.[2] உலகின் சிறிய கண்டமான ஆத்திரேலியா 76 லட்சம் சதுர கிலோமீட்டர்கள் கொண்ட கண்டமாகும். இது நான்கு புறங்களும் கடலால் சூழப்பட்டிருந்தாலும் இதைத் தீவென்று அழைக்காமல் கண்டமென்றே அழைக்கின்றனர்.[3] இதிலிருந்து எது தீவு, எது கண்டம் என்பதற்கு அளவியல் வரைமுறை இல்லை என அறியலாம்.[4][5]
உலகில் பரவலாக அறியப்படும் சில தீவுகள்
[தொகு]தீவுகள் | அமைவிடம் | பரப்பளவு/ச.கி.மீ |
---|---|---|
கிரீன்லாந்து | வட அட்லாண்டிக் கடல் | 8.40,000 |
நியூ ஃபின்லாந்து | வட அட்லாண்டிக் கடல் | 42,031 |
பாபுவா நியூகினி | கிழக்கு இந்தியப் பெருங்கடல் | 3,06,000 |
இலங்கை | இந்தியப் பெருங்கடல் | 65,610 |
சாவா | இந்தியப் பெருங்கடல் | 48,900 |
செவிபசு | இந்தியப் பெருங்கடல் | 69,000 |
சுமத்திரா | இந்தியப் பெருங்கடல் | 1,65,000 |
போர்னியோ | கிழக்கு இந்தியப் பெருங்கடல் | 2,80,100 |
மடகாசுக்கர் | கிழக்கு இந்தியப் பெருங்கடல் | 2,26,658 |
டாஃபின் | ஆர்க்டிக் கடல் | 1,95,928 |
விக்டோரியா | ஆர்க்டிக் கடல் | 83,897 |
எலியசுமேர் | ஆர்க்டிக் கடல் | 75,767 |
பிரிட்டன் | வடகடல் | 84,200 |
கியூபா | கரீபியன் கடல் | 44,218 |
ஹான்ஷு | பசிஃபிக் பெருங்கடல் | 87,805 |
வடக்கு நியூசிலாந்து | பசிஃபிக் பெருங்கடல் | 44,035 |
இவற்றையும் பார்க்கவும்
[தொகு]வெளி இணைப்புகள்
[தொகு]மேற்கோள்கள்
[தொகு]- ↑ "The Tropical Islands of the Indian and Pacific Oceans". Epub.oeaw.ac.at. பார்க்கப்பட்ட நாள் 2009-01-05.
- ↑ "Joshua Calder's World Island Info". Worldislandinfo.com. பார்க்கப்பட்ட நாள் 2011-07-29.
- ↑ http://www.worldislandinfo.com/CONTISLAND.html
- ↑ Brown, Mike. How I Killed Pluto and Why It Had It Coming. New York: Random House Digital, 2010. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-385-53108-7
- ↑ Royle, Stephen A. A Geography of Islands: Small Island Insularity. Psychology Press, 2001. pp. 7-11 பன்னாட்டுத் தரப்புத்தக எண் 1-85728-865-3