1923
Appearance
ஆயிரமாண்டு: | 2-ஆம் ஆயிரமாண்டு |
---|---|
நூற்றாண்டுகள்: | |
பத்தாண்டுகள்: | |
ஆண்டுகள்: |
1923 | |
கிரெகொரியின் நாட்காட்டி | 1923 MCMXXIII |
திருவள்ளுவர் ஆண்டு | 1954 |
அப் ஊர்பி கொண்டிட்டா | 2676 |
அர்மீனிய நாட்காட்டி | 1372 ԹՎ ՌՅՀԲ |
சீன நாட்காட்டி | 4619-4620 |
எபிரேய நாட்காட்டி | 5682-5683 |
இந்து நாட்காட்டிகள் - விக்ரம் ஆண்டு - சக ஆண்டு - கலி யுகம் |
1978-1979 1845-1846 5024-5025 |
இரானிய நாட்காட்டி | 1301-1302 |
இசுலாமிய நாட்காட்டி | 1341 – 1342 |
சப்பானிய நாட்காட்டி | Taishō 12 (大正12年) |
வட கொரிய நாட்காட்டி | 12 |
ரூனிக் நாட்காட்டி | 2173 |
யூலியன் நாட்காட்டி | கிரகோரியன் நாட்காட்டி 13 நாட்கள் குறைக்கப்பட்டு |
கொரிய நாட்காட்டி | 4256 |
1923 (MCMXXIII) ஒரு திங்கட்கிழமையில் ஆரம்பமான ஒரு சாதாரண கிரிகோரியன் ஆண்டாகும்.
நிகழ்வுகள்
[தொகு]- மார்ச் 2 - டைம் இதழ் முதற்தடவையாக விற்பனைக்கு வந்தது.
- மார்ச் 9 - விளாடிமிர் லெனினுக்கு மூன்றாம் தடவையாக மாரடைப்பு ஏற்பட்டது.
- ஏப்ரல் - ஐரிஷ் உள்நாட்டுப் போர் முடிவுக்கு வந்தது.
- ஜூன் 9 - பல்கேரியாவில் இடம்பெற்ற இராணுவப் புரட்சியில் பிரதமர் அலெக்சாண்டர் ஸ்டாம்பொலீஸ்கி பதவியில் இருந்து அகற்றப்பட்டார். இவர் ஜூன் 14இல் கொல்லப்பட்டார்.
- ஜூன் 18 - எட்னா எரிமலை வெடித்ததில் 60,000 பேர் வீடற்றவராயினர்.
- செப்டம்பர் 1 - டோக்கியோ மற்றும் யொகோஹாமாவில் இடம்பெற்ற நிலநடுக்கம் சுமார் 142,807 பேரைக் கொன்றது.
- டிசம்பர் 12 - இத்தாலியில் போ ஆற்றின் அணைக்கட்டு வெடித்ததில் 600 பேர் கொல்லப்பட்டனர்.
பிறப்புகள்
[தொகு]- தருமபுரம் ப. சுவாமிநாதன், திருமுறை ஓதுவார் (இ. 2009)
- ஜனவரி 15 - ருக்மணி தேவி, இலங்கைத் திரைப்பட நடிகை
- மார்ச் 21 - பொள்ளாச்சி நா. மகாலிங்கம், தமிழகத் தொழிலதிபர், மக்கள் சேவையாளர் (இ. 2014)
- மே 28 - டி. எம். தியாகராஜன், கருநாடக இசைக் கலைஞர் (இ: 2007)
- ஆகத்து 29 - ரிச்சர்ட் ஆட்டன்பரோ, திரைப்பட இயக்குனர், நடிகர் (இ. 2014)
- செப்டம்பர் 16 - லீ குவான் யூ, சிங்கப்பூரின் நிறுவனரும், முதலாவது பிரதமரும் (இ. 2015)
- அக்டோபர் 20 - தொ. மு. சி. ரகுநாதன்
- நவம்பர் 20 - நதீன் கோர்டிமர், இலக்கியத்துக்கான நோபல் பரிசு பெற்ற தென்னாப்பிரிக்க எழுத்தாளர் (இ. 2014)
இறப்புகள்
[தொகு]- பெப்ரவரி 10 - வில்லெம் ரோண்ட்கன், செருமானிய இயற்பியலாளர், நோபல் பரிசு பெற்றவர் (பி. 1845)
- மார்ச் 26 - சாரா பேர்ண்ஹார்ட், பிரான்சிய நடிகை (பி. 1844)
- டிசம்பர் 27 - அலெக்சாந்தர் கஸ்டவ் ஈபல், பிரான்சியப் பொறியாளர், ஈபெல் கோபுரத்தை வடிவமைத்தவர் (பி. 1832)
நோபல் பரிசுகள்
[தொகு]- இயற்பியல் - ரொபேர்ட் மிலிக்கன்
- வேதியியல் - Fritz Pregl
- மருத்துவம் - Frederick Grant Banting, John James Richard Macleod
- இலக்கியம் - டபிள்யூ. பி. யீட்சு
- அமைதி - வழங்கப்படவில்லை