சனவரி 28
Appearance
(ஜனவரி 28 இலிருந்து வழிமாற்றப்பட்டது)
<< | சனவரி 2024 | >> | ||||
ஞா | தி | செ | பு | வி | வெ | ச |
1 | 2 | 3 | 4 | 5 | 6 | |
7 | 8 | 9 | 10 | 11 | 12 | 13 |
14 | 15 | 16 | 17 | 18 | 19 | 20 |
21 | 22 | 23 | 24 | 25 | 26 | 27 |
28 | 29 | 30 | 31 | |||
MMXXIV |
சனவரி 28 (January 28) கிரிகோரியன் ஆண்டின் 28 ஆம் நாளாகும். ஆண்டு முடிவிற்கு மேலும் 337 (நெட்டாண்டுகளில் 338) நாட்கள் உள்ளன.
நிகழ்வுகள்
- 814 – முதலாம் புனித உரோமைப் பேரரசர் சார்லமேன் நுரையீரல் உறையழற்சி நோயால் இறந்தார்.
- 1077 – புனித உரோமைப் பேரரசர் நான்காம் என்றியின் திருச்சபைலிருந்தான வெளியேற்றத் தீர்மானம் இத்தாலியின் கனோசாவில் திருத்தந்தை ஏழாம் கிரகோரியின் முன்னால் அவர் தன்னைத் தாழ்த்திக் கொண்டபின் நீக்கப்பட்டது.
- 1393 – பல நடனக் கலைஞர்களின் உடைகள் தீப்பிடித்த நிலையில் பிரான்சிய மன்னர் ஆறாம் சார்லசு மயிரிழையில் உயிர் தப்பினார்.
- 1547 – எட்டாம் என்றியின் இறப்பை அடுத்து, அவரது 9 வயது மகன் ஆறாம் எட்வர்டு இங்கிலாந்தின் மன்னனாக முடிசூடினான்.
- 1573 – போலந்தில் சமயச் சுதந்திரம் வழங்கப்பட்டது.
- 1624 – கரிபியனில் முதலாவது பிரித்தானியக் குடியேற்ற நாடான செயிண்ட் கிட்சு சர் தொமஸ் வார்னர் என்பவரால் அமைக்கப்பட்டது.
- 1671 – பழைய பனாமா நகரம் தீக்கிரையானது.
- 1679 – சென்னை கோட்டைப் பகுதியில் சிறு நிலநடுக்கம் உணரப்பட்டது.
- 1724 – உருசிய அறிவியல் கழகம் சென் பீட்டர்ஸ்பேர்க் நகரில் முதலாம் பேதுரு மன்னரால் ஆரம்பிக்கப்பட்டது.
- 1754 – சேரந்தீவம் என்ற சொல்லை முதல் தடவையாக சேர் ஒராசு வால்போல் பயன்படுத்தினார்.
- 1846 – இந்தியாவில் அலிவால் என்ற இடத்தில் சீக்கியர்களுடன் இடம்பெற்ற போரில் சர் ஹரி சிமித் தலைமையிலான பிரித்தானியப் படைகள் வெற்றி பெற்றன.
- 1855 – பனாமா கால்வாய் வழியே தொடருந்து ஒன்று அத்திலாந்திக்குப் பெருங்கடலில் இருந்து பசிபிக்குப் பெருங்கடல் வரை முதல் தடவையாகச் சென்றது.
- 1871 – பாரிசு மீதான முற்றுகை புருசியாவின் வெற்றியுடன் முடிவுக்கு வந்தது.
- 1882 – சென்னையில் முதன்முதலாக தொலைபேசி அறிமுகப்படுத்தப்பட்டது.
- 1909 – எசுப்பானிய அமெரிக்கப் போர்: அமெரிக்கப் படைகள் குவாண்டானமோ விரிகுடாவைத் தவிர்த்து கியூபாவின் மற்றைய பகுதிகளில் இருந்து விலகின.
- 1918 – பின்லாந்தின் தலைநகர் எல்சிங்கியைப் புரட்சியாளர்கள் கைப்பற்றினர்.
- 1932 – சப்பானியப் படையினர் ஷங்காய் நகரைத் தாக்கினர்.
- 1933 – பாக்கித்தான் என்ற பெயரை சௌதுரி ரகுமாத் அலி கான் பரிந்துரைத்தார். இந்திய முசுலிம்கள் இதனை ஏற்றுக் கொண்டு பாக்கித்தான் இயக்கத்தை ஆரம்பித்து விடுதலைக்கான கோரிக்கையை முன்னெடுத்தனர்.
- 1935 – ஐசுலாந்து கருக்கலைப்பைச் சட்டபூர்வமாக்கிய முதல் மேற்கத்திய நாடானது.
- 1945 – இரண்டாம் உலகப் போர்: புதிதாக நிர்மாணிக்கப்பட்ட பர்மா வீதி ஊடாக சீனக் குடியரசுக்கு பொருட்கள் செல்ல ஆரம்பித்தன.
- 1958 – லெகோ நிறுவனம் தமது லெகோ கட்டைகளுக்கு காப்புரிமை பெற்றது.
- 1964 – பயிற்சியில் ஈடுபட்டிருந்த அமெரிக்க வான்படை வானூர்தி ஒன்று கிழக்கு செருமனியின் எர்பூர்ட் நகர் மீது பறந்த போது, சோவியத் மிக்-19 ஏவுகணையால் சுட்டு வீழ்த்தப்பட்டதில், அதில் பயணம் செய்த மூவரும் கொல்லப்பட்டனர்.
- 1984 – வெப்ப மண்டலச் சூறாவளி டொமொய்னா தெற்கு மொசாம்பிக்கைத் தாக்கியதில், 214 பேர் உயிரிழந்தனர்.
- 1986 – சாலஞ்சர் மீள்விண்கலம் புறப்பட்ட 73ஆவது வினாடியில் வானில் வெடித்துச் சிதறியதில் ஏழு விண்வெளிவீரர்கள் கொல்லப்பட்டனர்.
- 1987 – கொக்கட்டிச்சோலைப் படுகொலைகள், 1987: மட்டக்களப்பு கொக்கட்டிச்சோலை கிராமத்தில் இலங்கை இராணுவத்தினரால் 86 தமிழ் இளைஞர்கள் படுகொலை செய்யப்பட்டனர்.
- 2002 – கொலம்பியாவில் போயிங் விமானம் ஒன்று அந்தீசு மலையில் மோதியதில் 92 பேர் கொல்லப்பட்டனர்.
- 2006 – போலந்தில் பன்னாட்டு கண்காட்சி இடம்பெற்ற கட்டடம் ஒன்று இடிந்து வீழ்ந்ததில், 65 பேர் உயிரிழந்தனர், 170 பேர் காயமடைந்தனர்.
- 2016 – ஜிகா வைரசு பரவியுள்ளதாக உலக சுகாதார அமைப்பு அறிவித்தது.
பிறப்புகள்
- 1600 – ஒன்பதாம் கிளமெண்ட் (திருத்தந்தை) (இ. 1669)
- 1611 – யோகான்னசு எவெலியசு, போலந்து வானியலாளர், அரசியல்வாதி (இ. 1687)
- 1786 – நத்தானியேல் வாலிக், தென்மார்க்கு மருத்துவர், தாவரவியலாளர் (இ. 1854)
- 1832 – தி. முத்துச்சாமி ஐயர், பிரித்தானிய இந்தியாவின் சென்னை உயர்நீதிமன்றத்தின் முதலாவது இந்திய நீதிபதி (இ. 1895)
- 1853 – ஒசே மார்த்தி, கியூபா ஊடகவியலாளர், கவிஞர் (இ. 1895)
- 1865 – லாலா லஜபதி ராய், இந்திய எழுத்தாளர், அரசியல்வாதி (இ. 1928)
- 1899 – கரியப்பா, இந்தியத் தரைப்படையின் படைத்தலைவர் (இ. 1993)
- 1912 – ஜாக்சன் பாலக், அமெரிக்க ஓவியர் (இ. 1956)
- 1925 – இராஜா இராமண்ணா, இந்திய இயற்பியலாளர், அரசியல்வாதி (இ. 2004)
- 1931 – பேபி சரோஜா, 1930களின் குழந்தை நடிகை (இ. 2019)
- 1938 – தோமசு லின்டால், நோபல் பரிசு பெற்ற சுவீடன்-ஆங்கிலேய உயிரியலாளர்
- 1940 – கார்லொசு சிலிம், மெக்சிக்கோ தொழிலதிபர்
- 1945 – ஜான் பெர்க்கின்ஸ், அமெரிக்க எழுத்தாளர்
- 1950 – நைலா கபீர், வங்காளதேச-ஆங்கிலேயப் பொருளாதார அறிஞர்
- 1955 – நிக்கொலா சார்கோசி, பிரான்சின் 23வது அரசுத்தலைவர்
- 1976 – மாளவிகா அவினாஷ், தென்னிந்திய நடிகை
- 1981 – எலியா வுட், அமெரிக்க நடிகர், தயாரிப்பாளர்
- 1986 – சுருதி ஹாசன், தென்னிந்திய நடிகை, பாடகி
- 1992 – மியா, தென்னிந்தியத் திரைப்பட நடிகை
இறப்புகள்
- 814 – சார்லமேன், உரோமைப் பேரரசர் (பி. 742)
- 1547 – இங்கிலாந்தின் எட்டாம் ஹென்றி (பி. 1491)
- 1687 – யோகான்னசு எவெலியசு, போலந்து வானியலாளர், அரசியல்வாதி (பி. 1611)
- 1851 – இரண்டாம் பாஜி ராவ், மராத்தியப் பேரரசர் (பி. 1775)
- 1939 – டபிள்யூ. பி. யீட்சு, நோபல் பரிசு பெற்ற ஐரிய எழுத்தாளர் (பி. 1865)
- 1993 – எலன் சாயர் கோகு, கனடிய வானியலாளர் (பி. 1905)
- 1996 – ஜோசப் பிராட்ஸ்கி, நோபல் பரிசு பெற்ற உருசிய-அமெரிக்கக் கவிஞர் (பி. 1940)
- 1996 – தேவ காந்த பருவா, இந்திய அரசியல்வாதி (பி. 1914)
- 2002 – ஆஸ்ட்ரிட் லிண்ட்கிரென், சுவீடன் எழுத்தாளர் (பி. 1907)
- 2008 – செ. யோகநாதன், ஈழத்து எழுத்தாளர் (பி. 1941)
- 2018 – தர்மசேன பத்திராஜா, இலங்கை சிங்களத் திரைப்பட இயக்குனர், கல்வியாளர் (பி. 1943)
- 2021 – டொமினிக் ஜீவா, ஈழத்து எழுத்தாளர், இதழாசிரியர் (பி. 1927)