சூன் 30
Appearance
<< | சூன் 2024 | >> | ||||
ஞா | தி | செ | பு | வி | வெ | ச |
1 | ||||||
2 | 3 | 4 | 5 | 6 | 7 | 8 |
9 | 10 | 11 | 12 | 13 | 14 | 15 |
16 | 17 | 18 | 19 | 20 | 21 | 22 |
23 | 24 | 25 | 26 | 27 | 28 | 29 |
30 | ||||||
MMXXIV |
சூன் 30 (June 30) கிரிகோரியன் ஆண்டின் 181 ஆம் நாளாகும். நெட்டாண்டுகளில் 182 ஆம் நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் 184 நாட்கள் உள்ளன.
நிகழ்வுகள்
[தொகு]- 296 – மர்செல்லீனுசு திருத்தந்தையாகப் பதவியேற்றார்.
- 763 – பைசாந்தியப் படையினர் பேரரசர் ஐந்தாம் கான்ஸ்டன்டைன் தலைமையில் பல்கேரியப் படையினரை அங்கியாலசில் நடந்த சமரில் வென்றனர்.
- 1521 – நோவாயின் போரில் பிரெஞ்சு மற்றும் நவார் படைகளை எசுப்பானியப் படைகள் தோற்கடித்தன.
- 1688 – இங்கிலாந்தின் ஏழு உயர் குடியினர் ஆட்சியைப் பிடிக்க வற்புறுத்தி இளவரசர் வில்லியத்துக்குக் கடிதம் எழுதினர். இது மாண்புமிகு புரட்சிக்கு வழிவகுத்தது.
- 1737 – உருசியப் படைகள் இராணுவத் தலைவர் மியூனிச் தலைமையில் துருக்கியப் படைகளைத் தாக்கி 4,000 துருக்கியர்களைச் சிறைப்பிடித்தனர்.
- 1859 – பிரெஞ்சுக் கழைக்கூத்தாடி சார்லசு புளொந்தீன் நயாகரா அருவியை கயிறு ஒன்றின் மீது நடந்து கடந்தார்.
- 1882 – அமெரிக்க அதிபர் ஜேம்ஸ் கார்பீல்ட்டை சுட்டுக் கொன்ற "சார்ல்ஸ் கைட்டோ" தூக்கிலிடப்பட்டான்.
- 1886 – முதலாவது கண்டம் கடக்கும் தொடருந்து சேவை மொண்ட்ரியாலில் இருந்து புறப்பட்டது. இது சூலை 4 இல் பிரிட்டிசு கொலம்பியாவின் மூடி துறையை அடைந்தது.
- 1905 – சிறப்புச் சார்புக் கோட்பாட்டை அறிமுகப்படுத்தும் ஐன்ஸ்டீனின் இயங்கும் பொருட்களின் மின்னியக்கவியல் ஆய்வுக் கட்டுரை வெளிவந்தது.
- 1908 – துங்குசுக்கா நிகழ்வு: புவியில் மாபெரும் உந்த நிகழ்வு சைபீரியாவில் இடம்பெற்றது. எவரும் உயிரிழக்கவில்லை.
- 1910 – இலங்கையில் ஐந்து சத செப்பு நாணயம் பயன்பாட்டில் இருந்து விலக்கப்பட்டது.[1]
- 1912 – கனடாவில் ரெஜைனா என்ற இடத்தில் சூறாவளி தாக்கியதில் 28 பேர் உயிரிழந்தனர்.
- 1922 – டொமினிக்கன் குடியரசில் அமெரிக்க ஆக்கிரமிப்பை முடிவுக்குக் கொண்டு வர இரு நாடுகளுக்கும் இடையில் வாசிங்டன், டி. சி.யில் ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டது.
- 1934 – நீள் கத்திகளுடைய இரவு: இட்லரின் அரசியல் எதிரிகளுக்கு எதிரான வன்முறை செருமனியில் நிகழ்ந்தது.
- 1936 – எத்தியோப்பியா மீது இத்தாலியின் படையெடுப்பை அடுத்து அபிசீனியப் பேரரசர் முதலாம் ஹைலி செலாசி உலக நாடுகள் சங்கத்திடம் நிவாரண உதவி கோரினார்.
- 1937 – உலகின் முதலாவது அவசரத் தொலைபேசி எண் (999) லண்டனில் அறிமுகப்படுத்தப்பட்டது.
- 1941 – இரண்டாம் உலகப் போர்: நாட்சி ஜெர்மனியினர் உக்ரைனின் லுவோவ் நகரைக் கைப்பற்றினர்.
- 1944 – இரண்டாம் உலகப் போர்: முக்கிய துறைமுகம் அமெரிக்கப் படைகளிடம் வீழ்ந்ததை அடுத்து செர்போர்க் சண்டை முடிவடைந்தது.
- 1956 – அமெரிக்காவின் இரண்டு விமானங்கள் அரிசோனாவில் மாபெரும் செங்குத்துப் பள்ளத்தாக்குப் பகுதியில் வானில் மோதிக் கொண்டதில் அவற்றில் பயணம் செய்த அனைத்து 128 பேரும் உயிரிழந்தனர்.
- 1959 – அமெரிக்க வான்படை விமானம் ஒன்று சப்பானில் ஓக்கினாவாவில் பாடசாலை ஒன்றின் மீது வீழ்ந்ததில் 11 மாணவர்கள் உட்பட 17 பேர் உயிரிழந்தனர்.
- 1960 – பெல்சிய கொங்கோ பெல்ஜியத்திடம் இருந்து காங்கோ குடியரசு (லெயோப்பால்டுவில்) என்ற பெயரில் விடுதலை பெற்றது.
- 1971 – சோவியத்தின் சோயுஸ் 11 விண்கலத்தில் ஏற்பட்ட காற்றுக் கசிவினால் விண்வெளி வீரர்கள் மூவர் உயிரிழந்தனர்.
- 1972 – ஒருங்கிணைக்கப்பட்ட சர்வதேச நேரத்தில் ஒரு லீப் நொடி அதிகரிக்கப்பட்டது.
- 1977 – தென்கிழக்கு ஆசிய ஒப்பந்த அமைப்பு கலைக்கப்பட்டது.
- 1985 – பெய்ரூட்டில் 17 நாட்களாகக் கடத்தப்பட்டிருந்த 39 அமெரிக்க விமானப் பயணிகள் விடுவிக்கப்பட்டனர்.
- 1990 – கிழக்கு, மற்றும் மேற்கு செருமனிகள் தமது பொருளாதாரத்தை ஒருங்கிணைத்தன.
- 1994 – பிரான்சில் ஏர்பஸ் ஏ330 இன் சோதனைப் பறப்பின் போது விமானம் வீழ்ந்ததில் அதில் பயணம் செய்த அனைத்து 9 பேரும் உயிரிழந்தனர்.[2]
- 1997 – முதலாவது ஹரி பொட்டர் நூல் வெளியிடப்பட்டது.
- 1997 – ஆங்காங் நாட்டின் அதிகாரம் ஐக்கிய இராச்சியத்திடம் இருந்து சீனாவுக்குக் கைமாறியது.
- 1997 – மேலவளவு படுகொலைகள் நடைபெற்றது. சாதிய ஆணவத்தால் 7 பேர் கொல்லப்பட்டனர்.
- 2002 – பிரேசில் தனது ஐந்தாவது உதைப்பந்தாட்ட உலகக்கிண்ணத்தை வென்றது.
- 2009 – ஏமன் வானூர்தி ஒன்று கொமொரோசு அருகே இந்தியப் பெருங்கடலில் வீழ்ந்ததில் 152 பேர் உயிரிழந்தனர், 14 வயது பாகியா பக்காரி என்பவர் உயிர் தப்பினார்.[3]
- 2013 – எகிப்தில் அரசுத்தலைவர் முகம்மது முர்சிக்கும், ஆளும் விடுதலை மற்றும் நீதிக் கட்சிக்கும் எதிரான போராட்டம் ஆரம்பமானது.
- 2015 – இந்தோனேசியாவின் மேடான் பகுதியில் இராணுவ வானூர்தி ஒன்று வீழ்ந்ததில் 116 பேர் உயிரிழந்தனர்.
பிறப்புகள்
[தொகு]- கிமு 156 – ஆனின் பேரரசர் வு, சீனாவின் 7வது ஆன் மரபுப் பேரரசர் (இ. கிமு 87)
- 1912 – மாதவையா கிருட்டிணன், தமிழக வனவுயிரிப் புகைப்படக்கலைஞர், இயற்கையார்வலர் (இ. 1996)
- 1919 – நாவற்குழியூர் நடராசன், இலங்கைத் தமிழறிஞர், கவிஞர், வானொலி ஒலிபரப்பாளர் (இ. 1994)
- 1921 – கோ. விவேகானந்தன், தமிழக எழுத்தாளர்
- 1931 – சித்ராலயா கோபு, தமிழ்த் திரைப்பட இயக்குநர், திரைக்கதை எழுத்தாளர்
- 1934 – சிந்தாமணி நாகேச இராமச்சந்திர ராவ், இந்திய வேதியியலாளர்
- 1944 – விமல் சொக்கநாதன், வானொலிக் கலைஞர், ஒலிபரப்பாளர் (இ. 2023)
- 1948 – ராஜ ஸ்ரீகாந்தன், ஈழத்து எழுத்தாளர் (இ. 2004)
- 1964 – மார்க் வாட்டர்ஸ், அமெரிக்க இயக்குநர்
- 1966 – மைக் டைசன், அமெரிக்க குத்துச்சண்டை வீரர்
- 1967 – அரவிந்த்சாமி, தென்னிந்தியத் திரைப்பட நடிகர்
- 1967 – விக்டோரியா காசுபி, அமெரிக்க-கனடிய வானியற்பியலாளர்
- 1969 – சனத் ஜயசூரிய, இலங்கைத் துடுப்பாளர்
- 1983 – செரில் கோல், ஆங்கிலேய நடன அழகி
- 1985 – மைக்கல் ஃபெல்ப்ஸ், அமெரிக்க நீச்சல் வீரர்
இறப்புகள்
[தொகு]- 1917 – தாதாபாய் நௌரோஜி, இந்திய அரசியல் சமூகத் தலைவர், பார்சி கல்வியாளர், பருத்தி வணிகர் (பி. 1825)
- 1919 – சான் வில்லியம் ஸ்ட்ரட், நோபல் பரிசு பெற்ற ஆங்கிலேய இயற்பியலாளர் (பி. 1842)
- 2007 – சாகிப் சிங் வர்மா, தில்லியின் 4வது முதல்வர் (பி. 1943)
- 1945 – அரிகேசநல்லூர் முத்தையா பாகவதர், தென்னிந்தியக் கருநாடக இசைக் கலைஞர் (பி. 1877)
- 1945 – தஞ்சை க. பொன்னையா பிள்ளை, கருநாடக இசைக் கலைஞர், இசைப் பேராசிரியர் (பி. 1888)
- 1961 – லீ டி பாரெஸ்ட், அமெரிக்கக் கண்டுபிடிப்பாளர், மின்னணுவியலின் முன்னோடி (பி. 1873)
- 1969 – மு. நவரத்தினசாமி, பாக்குநீரிணையை நீந்திக் கடந்த இலங்கையர் (பி. 1909)
- 1975 – விந்தன், தமிழக எழுத்தாளர் (பி. 1916)
- 2001 – பா. சத்தியசீலன், ஈழத்துக் கவிஞர் (பி. 1938)
- 2007 – சாகிப் சிங் வர்மா, இந்திய அரசியல்வாதி (பி. 1943)
- 2024 – இரா. சம்பந்தன், இலங்கைத் தமிழ் அரசியல்வாதி (பி. 1933)
சிறப்பு நாள்
[தொகு]- சிறுகோள் நாள்
- விடுதலை நாள் (காங்கோ மக்களாட்சிக் குடியரசு, பெல்ஜியத்தில் இருந்து 1960)
- புரட்சி நாள் (சூடான்)
- கடற்படை தினம் (இசுரேல்)
மேற்கோள்கள்
[தொகு]- ↑ John H. Martyn, Notes on Jaffna, American Ceylon Mission Press, தெல்லிப்பழை, இலங்கை, 1923, (2ம் பதிப்பு: 2003) பக். 92
- ↑ Ranter, Harro. "ASN Aircraft accident Airbus A330-321 F-WWKH Toulouse-Blagnac Airport (TLS)". aviation-safety.net. பார்க்கப்பட்ட நாள் 2019-06-21.
- ↑ Ranter, Harro. "ASN Aircraft accident Airbus A310-324 7O-ADJ Mitsamiouli". aviation-safety.net. பார்க்கப்பட்ட நாள் 2019-06-21.