சனவரி 12
Appearance
<< | சனவரி 2024 | >> | ||||
ஞா | தி | செ | பு | வி | வெ | ச |
1 | 2 | 3 | 4 | 5 | 6 | |
7 | 8 | 9 | 10 | 11 | 12 | 13 |
14 | 15 | 16 | 17 | 18 | 19 | 20 |
21 | 22 | 23 | 24 | 25 | 26 | 27 |
28 | 29 | 30 | 31 | |||
MMXXIV |
சனவரி 12 (January 12) கிரிகோரியன் ஆண்டின் 12 ஆம் நாளாகும். ஆண்டு முடிவிற்கு மேலும் 353 (நெட்டாண்டுகளில் 354) நாட்கள் உள்ளன.
நிகழ்வுகள்
- 1528 – முதலாம் குஸ்தாவ் சுவீடனின் மன்னராக அதிகாரபூர்வமாக முடிசூடினார்.
- 1554 – பயின்னோங் பர்மாவின் மன்னராக முடிசூடினார்.
- 1848 – போர்பன்களுக்கு எதிராக பலெர்மோ எழுச்சி சிசிலியில் இடம்பெற்றது.
- 1853 – தாய்பிங் இராணுவம் சீனாவின் வூச்சாங் நகரைப் பிடித்தது.
- 1866 – கொழும்பு மாநகரசபைக்கு முதல்தடவையாகத் தேர்தல்கள் இடம்பெற்றன.[1]
- 1866 – அரச வானூர்தியியல் சங்கம் இலண்டனில் ஆரம்பிக்கப்பட்டது.
- 1872 – நான்காம் யொகான்னசு எத்தியோப்பியாவின் பேரரசராக முடிசூடினார்.
- 1908 – முதற்தடவையாக தூர இடத்துக்கான வானொலி செய்தி ஈபெல் கோபுரத்தில் இருந்து அனுப்பப்பட்டது.
- 1915 – அமெரிக்க காங்கிரசு பெண்களுக்கு வாக்குரிமை அளிப்பதற்கு எதிர்ப்புத் தெரிவித்தது.
- 1918 – இங்கிலாந்து, இசுட்டாஃபர்ட்சயர் என்ற இடத்தில் நிலக்கரிச் சுரங்கம் ஒன்றில் நிகழ்ந்த விபத்தில் 155 பேர் உயிரிழந்தனர்.
- 1918 – பின்லாந்தில் உள்ள யூதர்கள் முழுக் குடியுரிமையைப் பெற்றார்கள்.
- 1940 – இரண்டாம் உலகப் போர்: பின்லாந்தின் பல நகரங்களின் மீது உருசியா குண்டுகளை வீசியது.
- 1945 – இரண்டாம் உலகப் போர்: சோவியத் ஒன்றியம் நாசிகளுக்கு எதிரான பெரும் போரை கிழக்கு ஐரோப்பாவில் ஆரம்பித்தது.
- 1964 – சான்சிபாரின் புரட்சிவாதிகள் புரட்சியை முன்னெடுத்து சன்சிபாரைக் குடியரசாக அறிவித்தனர்.
- 1967 – எம். ஆர். ராதா நடிகர் எம். ஜி. இராமச்சந்திரனை துப்பாக்கியால் சுட்டுப் படுகாயப்படுத்தினார்.
- 1970 – நைசீரிய உள்நாட்டுப் போர் முடிவுக்கு வந்தது.
- 1976 – பலத்தீன விடுதலை இயக்கம் ஐநா பாதுகாப்பு அவையில் வாக்குரிமையில்லாமல் விவாதங்களில் கலந்து கொள்வதற்கு ஐநா பாதுகாப்பு அவை 11-1 என்ற வாக்கு வித்தியாசத்தில் அனுமதி அளித்தது.
- 1990 – அசர்பைஜான் தலைநகர் பக்கூவில் சிறுபான்மையின ஆர்மீனியர்கள் அடித்துத் துன்புறுத்தப்பட்டுப் படுகொலை செய்யப்பட்டனர், ஏனையோர் நகரில் இருந்து வெளியேற்றப்பட்டனர்.
- 1991 – பாரசீக வளைகுடாப் போர்: குவைத்தில் இருந்து ஈராக்கை வெளியேற்றுவதற்கு அமெரிக்க இராணுவத்தைப் பயன்படுத்த அமெரிக்க காங்கிரசு ஒப்புதல் அளித்தது.
- 1992 – மாலியில் அரசியல் கட்சிகள் அமைப்பதற்கு ஏதுவாக பொது வாக்கெடுப்பு மூலம் அரசியல் அமைப்புச் சட்டத்தில் மாற்றம் கொண்டுவரப்பட்டது.
- 1998 – 19 ஐரோப்பிய நாடுகள் மாந்தர் படியாக்கம் தடை செய்யப்பட்டது.
- 2004 – உலகின் மிகப் பெரும் பயணிகள் கப்பலான "குயீன் மேரி 2" தனது கன்னிப்பயணத்தை ஆரம்பித்தது.
- 2005 – புளோரிடாவின் கென்னடி ஏவுதளத்திலிருந்து போயிங் டெல்டா-II என்ற விண்கலத்தை 133 மில்லியன் மைலுக்கு அப்பால் பரிதியைச் சுற்றி பூமியை நெருங்கி வரும் டெம்பெல் 1 என்ற வால்மீனைக் குறிவைத்து நாசா ஏவியது.
- 2006 – சவூதி அரேபியாவில் மினா நகரில் சாத்தான் மீது கல்லெறியும் நிகழ்ச்சியின் போது இடம்பெற்ற நெரிசலில் சிக்கி 44 இந்தியர்கள் உட்பட 362 பேர் உயிரிழந்தனர்.
- 2006 – 25 ஆண்டுகளுக்கு முன்னர் திருத்தந்தை அருள் சின்னப்பரைச் சுட்டுக் காயப்படுத்திய மெகுமேது அலி ஆக்கா என்பவர் துருக்கிய சிறையில் இருந்து விடுவிக்கப்பட்டார்.
- 2010 – எயிட்டியில் நிலநடுக்கம் ஏற்பட்டதில் 100,000 பேர் வரை உயிரிழந்தனர். தலைநகர் போர்ட்-ஓ-பிரின்சின் பெரும் பகுதி அழிந்தது.
- 2015 – கமரூன், கொலபாட்டா நகரில் அரசுப் படைகள் நடத்திய தாக்குதலில் 143 போகோ அராம் போராளிகள் கொல்லப்பட்டனர்.
பிறப்புகள்
- 1598 – ஜிஜாபாய், பேரரசர் சிவாஜியின் அன்னை (இ. 1674)
- 1746 – யொகான் ஹைன்ரிக் பெஸ்டலோசி, சுவிட்சர்லாந்து மெய்யியலாளர் (இ. 1827)
- 1848 – பிரான்சு ஃபான் சாக்சுலெட்டு, செருமனிய வேளாண்மை வேதியியலாளர் (இ. 1926)
- 1863 – விவேகானந்தர், இந்திய மெய்யியலாளர், ஆன்மிகவாதி (இ. 1902)
- 1869 – பக்வான் தாஸ், இந்திய மெய்யியலாளர், அரசியல்வாதி (இ. 1958)
- 1893 – எர்மன் கோரிங், செருமானிய இராணுவத் தலைவர், அரசியல்வாதி (இ. 1946)
- 1893 – ஆல்பிரட் ரோசன்பெர்க், எசுத்தோனிய-செருமானிய கட்டிடக்கலைஞர், அரசியல்வாதி (இ. 1946)
- 1895 – எல்லப்பிரகத சுப்பாராவ், இந்திய உயிரிவேதியியலாளர் (இ. 1948)
- 1918 – மகேஷ் யோகி, இந்திய-இடச்சு மதகுரு (இ. 2008)
- 1924 – எஸ். எம். அப்துல் மஜீத், தமிழக அரசியல்வாதி
- 1936 – முப்தி முகமது சயீத், இந்திய அரசியல்வாதி (இ. 2016)
- 1944 – ஜோ பிரேசியர், அமெரிக்கக் குத்துச் சண்டை வீரர் (இ. 2011)
- 1949 – அமாதி ஜெபாலி, துனீசியாவின் 19வது பிரதமர்
- 1949 – அருக்கி முரகாமி, சப்பானிய எழுத்தாளர்
- 1956 – மரீ கோல்வின், பிரித்தானிய ஊடகவியலாளர் (இ. 2012)
- 1956 – நிக்கலாய் நசுக்கோவ், சோவியத் ஒன்றிய மற்றும் உருசிய நாட்டுப் பாடகர்
- 1964 – ஜெப் பெசோஸ், அமேசான்.காம் தளத்தை ஆரம்பித்த அமெரிக்கக் கணினியியலாளர், தொழிலதிபர்
- 1967 – சஜித் பிரேமதாச, இலங்கை அரசியல்வாதி
- 1972 – பிரியங்கா காந்தி, இந்திய அரசியல்வாதி
- 1976 – மகேசு காலே, இந்திய பாரம்பரிய இசைப் பாடகராவார்
- 1990 – செர்கே கரியாக்கின், உருசிய-உக்ரைனிய சதுரங்க ஆட்ட வீரர்
இறப்புகள்
- 1665 – பியேர் டி பெர்மா, பிரான்சியக் கணிதவியலாளர் (பி. 1601)
- 1909 – ஹெர்மான் மின்கோவ்ஸ்கி, லித்துவேனிய-செருமானியக் கணிதவியலாளர் (பி. 1864)
- 1934 – சூரியா சென், வங்காளதேசக் கல்வியாளர், செயல்பாட்டாளர் (பி. 1894)
- 1976 – அகதா கிறிஸ்டி, ஆங்கிலேய எழுத்தாளர் (பி. 1890)
- 2000 – இரா. நெடுஞ்செழியன், தமிழக அரசியல்வாதி (பி. 1920
- 2005 – அம்ரீஷ் பூரி, இந்திய நடிகர் (பி. 1932)
- 2007 – முருகு சுந்தரம், தமிழகக் கவிஞர் (பி. 1929)
- 2009 – புலோலியூர் க. தம்பையா, இலங்கை எழுத்தாளர்
- 2013 – ஐ. கே. கே. மேனன், மலையாள எழுத்தாளர் (பி. 1919)
- 2014 – அன்புமணி, ஈழத்து எழுத்தாளர் (பி. 1935)
- 2017 – ச. வே. சுப்பிரமணியன், தமிழக எழுத்தாளர், தமிழறிஞர் (பி. 1929)
- 2023 – சரத் யாதவ், இந்திய அரசியல்வாதி (பி. 1947)
சிறப்பு நாள்
- தேசிய இளைஞர் நாள் (இந்தியா)
- சான்சிபார் புரட்சி நாள் (தன்சானியா)
மேற்கோள்கள்
- ↑ "Remarkable enents". Ferguson's Ceylon Directory, Colombo. 1871.