1844
Appearance
ஆயிரமாண்டு: | 2-ஆம் ஆயிரமாண்டு |
---|---|
நூற்றாண்டுகள்: | |
பத்தாண்டுகள்: | |
ஆண்டுகள்: |
1844 | |
கிரெகொரியின் நாட்காட்டி | 1844 MDCCCXLIV |
திருவள்ளுவர் ஆண்டு | 1875 |
அப் ஊர்பி கொண்டிட்டா | 2597 |
அர்மீனிய நாட்காட்டி | 1293 ԹՎ ՌՄՂԳ |
சீன நாட்காட்டி | 4540-4541 |
எபிரேய நாட்காட்டி | 5603-5604 |
இந்து நாட்காட்டிகள் - விக்ரம் ஆண்டு - சக ஆண்டு - கலி யுகம் |
1899-1900 1766-1767 4945-4946 |
இரானிய நாட்காட்டி | 1222-1223 |
இசுலாமிய நாட்காட்டி | 1259 – 1260 |
சப்பானிய நாட்காட்டி | Tenpō 15Kōka 1 (弘化元年) |
வட கொரிய நாட்காட்டி | இல்லை (1912 முன்னர்) |
ரூனிக் நாட்காட்டி | 2094 |
யூலியன் நாட்காட்டி | கிரகோரியன் நாட்காட்டி 12 நாட்கள் குறைக்கப்பட்டு |
கொரிய நாட்காட்டி | 4177 |
1844 (MDCCCXLIV) ஒரு திங்கட்கிழமையில் ஆரம்பமான ஒரு கிரிகோரியன் நெட்டாண்டு ஆகும். பழைய ஜூலியன் நாட்காட்டியில் சனிக்கிழமையில் ஆரம்பமானது.[1][2][3]
நிகழ்வுகள்
[தொகு]- பெப்ரவரி 27 - டொமினிக்கன் குடியரசு ஹையிட்டியிடம் இருந்து விடுதலை பெற்றது.
- பெப்ரவரி 28 - USS பிரின்ஸ்டன் என்ற படகில் பொருத்தப்பட்ட துப்பாக்கி வெடித்துச் சிதறியதில் அதில் பயணம் செய்த இரண்டு ஐக்கிய அமெரிக்க அமைச்சர்கள் உட்படப் பலர் கொல்லப்பட்டனர்.
- மே 24 - முதலாவது மின்னியல் தந்திச் செய்தி சாமுவேல் மோர்ஸ் என்பவரால் வாஷிங்டன் டிசியில் இருந்து மேரிலாந்துக்கு அனுப்பப்பட்டது. அனுப்பப்பட்ட செய்தி: What hath God wrought.
- ஜூன் - இலங்கையில் யானைகளைக் கொல்வோருக்கு பணப்பரிசு வழங்கப்படும் என்ற அரசு அறிவித்தலைத் தொடர்ந்து வன்னியில் மட்டும் சுமார் 150 யானைகள் கொல்லப்பட்டன.
- ஜூன் 6 - கிறிஸ்தவ இளையோர் அமைப்பு (YMCA) லண்டனில் ஜோர்ஜ் வில்லியம்ஸ் என்பவரால் ஆரம்பிக்கப்பட்டது.
- ஜூன் 15 - இறப்பர் பதப்படுத்தும் முறை (vulcanization) சார்ல்ஸ் குடியர் என்பவரால் காப்புரிமம் பெறப்பட்டது.
- ஜூலை 3 - ஐஸ்லாந்தின் எல்டி தீவில் பெரிய ஓக் பறவைகளின் கடைசிச் சோடி கொல்லப்பட்டது.
- ஜூலை 13 - இலங்கையில் காவற்துறை நீதிமன்றங்கள் (police courts) அமைக்கப்பட்டன.
- ஆகஸ்ட் - யாழ்ப்பாணம் இளவாலையில் சென் மேரியின் தேவாலயம் தீயில் முற்றாக எரிந்தது.
- ஆகஸ்ட் 28 - பிரெட்ரிக் எங்கெல்ஸ் மற்றும் கார்ல் மார்க்ஸ் இருவரும் பாரிசில் சந்தித்தனர்.
- அக்டோபர் - இலங்கையில் வடமேற்கு மாகாணம் உருவாக்கப்பட்டது.
- டிசம்பர் 20 - இலங்கையில் கூலிகளை வேலைக்கமர்த்தும் முறை (slavery) ஒழிக்கப்பட சட்டம் கொண்டுவரப்பட்டது.
நாள் அறியப்படாதவை
[தொகு]- சுவீடனைச் சேர்ந்த வேதியியல் நிபுணர் குஸ்டாஃப் எரிக் பாஸ்க் என்பவர் பாதுகாப்பான தீக்குச்சியைக் கண்டுபிடித்தார்.
- பாதுகாப்புப் பெட்டி (safe) அலெக்சாண்டர் ஃபிஷே என்பவரால் கண்டுபிடிக்கப்பட்டது.
- அணுக்கரு என்ற சொல் என்பது முதன்முதலில் மைக்கேல் ஃவாரடேயினால் "அணுவொன்றின் மையப்புள்ளி" என்ற விளக்கத்தோடு தரப்பட்டது.
- பஹாய் சமயம் தோற்றம் பெற்றது.
பிறப்புக்கள்
[தொகு]- நவம்பர் 25 - கார்ல் பென்ஸ், ஜெர்மனியைச் சேர்ந்த வாகனப்பொறியாளர் (இ. 1929)
இறப்புக்கள்
[தொகு]- கதிரேசப் புலவர் (அகவை 40), அச்சுவேலியைச் சேர்ந்த புலவர்
1844 நாட்காட்டி
[தொகு]மேற்கோள்கள்
[தொகு]- ↑ Laskow, Sarah (2015-12-30). "In 1844, the Philippines Skipped a Day, And It Took Decades for the Rest of the World to Notice" (in ஆங்கிலம்). Atlas Obscura. பார்க்கப்பட்ட நாள் 2023-04-19.
- ↑ "Saima". Digital Collections. The National Library of Finland. பார்க்கப்பட்ட நாள் 22 January 2024.
- ↑ "Saima nro 1, 4.1.1844". Selected Works of J V. Snellman. பார்க்கப்பட்ட நாள் 22 January 2024.