உள்ளடக்கத்துக்குச் செல்

சுவீடன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Konungariket Sverige
கொனுங்கரிகெட் ஸ்வரிய
சுவீடன் சாம்ராச்சியம்
கொடி of சுவீடன்
கொடி
சின்னம் of சுவீடன்
சின்னம்
'குறிக்கோள்: 'För Sverige i tiden1
(காலத்துடன் சுவீடனுக்காக)
நாட்டுப்பண்: Du gamla, du fria
("புராதானமான நீ சுதந்திரமான நீ ")
சுவீடன்அமைவிடம்
தலைநகரம்
மற்றும் பெரிய நகரம்
ஸ்டாக்ஹோம்
ஆட்சி மொழி(கள்)ஸ்வீடிஷ்
அரசாங்கம்அரசியலமைப்புச் சட்ட முடியாட்சி
• மன்னர்
கார்ல் 16வது குஸ்தாவ்
• பிரதமர்
உல்ஃப் கிறிஸ்டெர்சன்
பரப்பு
• மொத்தம்
449,964 km2 (173,732 sq mi) (55வது)
• நீர் (%)
8.67%
மக்கள் தொகை
• 2006 மதிப்பிடு
9,082,995 (85வது)
• 1990 கணக்கெடுப்பு
8,587,353
மொ.உ.உ. (கொ.ஆ.ச.)2005 மதிப்பீடு
• மொத்தம்
$270.516 பில்லியன் (35வது)
• தலைவிகிதம்
$29,898 (19வது)
மமேசு (2003)0.949
அதியுயர் · 6வது
நாணயம்குரோணர் (SEK)
நேர வலயம்ஒ.அ.நே+1 (மத்திய ஐரோப்பிய நேரம்)
• கோடை (ப.சே.நே.)
ஒ.அ.நே+2 (மத்திய ஐரோப்பிய வேனல் நேரம்)
அழைப்புக்குறி46
ஐ.எசு.ஓ 3166 குறியீடுSE
இணையக் குறி.se

சுவீடன் (Sweden) ஐரோப்பாவின் ஸ்கான்டினாவியப் பகுதியில் உள்ள ஒரு நாடாகும். பின்லாந்தும் நார்வேயும் இதன் அண்டை நாடுகள். பரப்பளவின் அடிப்படையில் இது ஐரோப்பிய ஒன்றியத்தில் மூன்றாவது பெரிய நாடு.

பெயர்க்காரணம்

[தொகு]

தற்காலப்பெயரான சுவீடன், பழைய ஆங்கில வழக்குச் சொல்லான சுவேத மக்கள் எனும் பொருள் கொண்ட சுவியோபியோட் என்பதலிருந்து உருவானது. இவ்வழக்குச் சொல்லானது, பியோவல்ப்பின் சுவியோரைசில் பதிவாகியுள்ளது[1]).

வரலாற்றுச் சுருக்கம்

[தொகு]
ஸ்டோரா ஸ்ஜோபாலட் தேசியப் பூங்கா

17ஆம் நூற்றாண்டின் மத்தியில், நாட்டின் மாகாணங்களை விரிவாக்கி சுவீத பேரரசு உருவாக்கப்பட்டது. உருவாகிய சில ஆண்டுகளில், ஐரேப்பாவின் மிகப்பெரும் சக்தியாக உருவானது. பெரும்பாலான மாகாணங்கள் 18 மற்றும் 19 ஆம் நூற்றாண்டுகளில் ஸ்காண்டிநேவிய தீபகற்பத்திலிருந்து சுவீடனால் கைப்பற்றப்பட்டது. தனது கிழக்கு மாகாணமான பின்லாந்தை இரசியப் பேரரசிடம் 1809ம் ஆண்டு இழந்தது. 1814 ஆண்டில் நிகழ்ந்த தனது நேரடிப் போருக்குப் பின்னர், அமைதியை கடைபிடிக்கின்றது[2]. சனவரி 1, 1995 நாள் முதல் ஐரோப்பிய ஒன்றியத்தின் உறுப்பினராகவும், பொருளாதார ஒத்துழைப்பு மற்றும் மேம்பாட்டு அமைப்பின் உறுப்பினராக உள்ளது.

மாவட்டங்கள்

[தொகு]

ஸ்வீடன் லான் என்று அழைக்கப்படும் 21 மாவட்டங்களாக பிரிக்கப்பட்டுள்ளது.

  1. ஸ்டோக்ஹோம் மாவட்டம்
  2. உப்சாலா மாவட்டம்
  3. ஸோதர்மால்ம் மாவட்டம்
  4. ஓஸ்தெர்ஜோட்லாண்டு மாவட்டம்
  5. யோன்ஷோப்பிங் மாவட்டம்
  6. க்ரோநொபெரி மாவட்டம்
  7. கால்மர் மாவட்டம்
  8. கோட்லான்ட் மாவட்டம்
  9. பிலிகிங்கெ மாவட்டம்
  10. ஸ்கோன மாவட்டம்
  11. ஹாலந்து மாவட்டம்
  1. வாஸ்த்ரா கோட்லான்ட் மாவட்டம்
  2. வார்ம்லாண்ட் மாவட்டம்
  3. ஓரிப்ரோ மாவட்டம்
  4. வாஸ்ட்மான்லாண்ட் மாவட்டம்
  5. டோலர்னா மாவட்டம்
  6. கால்விபோரி மாவட்டம்
  7. வாஸ்தெர்நோர்லாண்ட் மாவட்டம்
  8. ஜ்யாம்ட்லாண்ட் மாவட்டம்
  9. வாஸ்தெர்பொட்டென் மாவட்டம்
  10. நோர்பொட்டென் மாவட்டம்

புவி அமைப்பு

[தொகு]

சுவீடன் - தெற்கில் ஐரோப்பாவையும், நீண்ட கடற்பரப்பு கொண்ட கிழக்கில் பால்திக் கடலையும், மேற்கில் ஸ்காண்டிநேவிய தீபகற்பத்தையும் கொண்டுள்ளது. இங்குள்ள ஸ்காண்டிநேவிய மலைத்தொடரானது, சுவீடனையும் நார்வேயையும் பிரிக்கின்றது. பின்லாந்தானது, நாட்டின் வடகிழக்கு எல்லையாக அமைந்துள்ளது. மேலும் டென்மார்க், ஜெர்மனி, போலாந்து, இரசியா, லுதியானா, லாத்வியா, எஸ்தானியா ஆகிய நாடுகள், சுவீடனின் அண்டை நாடுகளாகும். ஒரிசன்ட் பாலத்தின் மூலம், டென்மார்க்குடன் இணைந்துள்ளது. ஐரோப்பாவின் மிக நீண்ட எல்லையை சுவீடன் கொண்டுள்ளது ( நார்வேயுடன், நீளம் - 1,619 கிமீ ).

காலநிலை

[தொகு]
ஆண்டின் சராசரி காலநிலை - சுவீடன் (°C)[3]
நகரம் மார்கழி - தை தை - மாசி மாசி - பங்குனி பங்குனி - சித்திரை சித்திரை - வைகாசி வைகாசி - ஆனி ஆனி - ஆடி ஆடி - ஆவணி ஆவணி - புரட்டாசி புரட்டாசி - ஐப்பசி ஐப்பசி - கார்த்திகை கார்த்திகை - மார்கழி
கிருனா −10/−16 −8/−15 −4/−13 2/−7 8/0 14/6 17/8 14/6 9/2 1/−4 −5/−10 −8/−15
ஒஸ்டர்சன்ட் −5/−10 −3/−9 0/−6 5/−2 12/3 16/8 18/10 17/10 12/6 6/2 0/−3 −3/−8
ஸ்டாகோம் 1/−2 1/−3 4/−2 11/3 16/8 20/12 23/15 22/14 17/10 10/6 5/2 1/−1
கோதன்பர்க் 2/−1 4/−1 6/0 11/3 16/8 19/12 22/14 22/14 18/10 12/6 7/3 3/−1
விஸ்பி 1/−2 1/−3 3/−2 9/1 14/6 18/10 21/13 20/13 16/9 10/6 5/2 2/0
மால்மோ 3/−1 3/−1 6/0 12/3 17/8 19/11 22/13 22/14 18/10 12/6 8/4 4/1

ஆட்சிமுறை

[தொகு]

அரசியலமைப்பு முடியாட்சியான சுவீடனின் காரல் 16ம் மன்னர் குஸ்தாப் தலைவராக உள்ளார். ஆனால், அதிகாரத்தை அரசு நிகழ்ச்சிகள் மற்றும் பிரதிநிதித்துவம் வரையில் வரையறுக்கப்பட்டது[4]. பொருளாதார புலனாய்வு பிரிவின்படி, 167 ஜனநாயக நாடுகளுடன் மதிப்பிடும் 2010 ஆம் ஆண்டில் நான்காவது இடத்தில் ஸ்வீடன் உள்ளது.

சுவீடன் நாட்டின் நாடாளுமன்றத்தின் பெயர் - ரிஸ்க்ஸ்டேக். 349 உறுப்பினர்களைக் கொண்ட இந்த அவையே, நாட்டின் பிரதமரை தேர்வு செய்கின்றது. நாடாளுமன்றத் தேர்தல், நான்காண்டிற்கு ஒருமுறை செப்டம்பர் மாதம் மூன்றாம் ஞாயிறன்று நடக்கிறது.

காரல் 16ம் மன்னர் குஸ்தாப் - சுவீட நாட்டு அரசர்
சுவீடன் நாடாளுமன்ற கட்சிகள்
தமிழ் பெயர் சுவீட மொழியில் சுருக்கப் பெயர் தொகுதிகளின் எண்ணிக்கை அவையின் நிலை
மைய வலதுசாரி கட்சிகள் 193
நடுத்தரக்கட்சி Moderata samlingspartiet (M) 107 ஆம்
சுதந்திர மக்கள் கட்சி Folkpartiet liberalerna (FP) 24 ஆம்
மையக்கட்சி Centerpartiet (C) 23 ஆம்
கிருத்துவ ஜனநாயகக் கட்சி Kristdemokraterna (KD) 19 ஆம்
சுவீட ஜனநாயகக் கட்சி Sverigedemokraterna (SD) 20 இல்லை
மைய இடதுசாரி கட்சிகள்[5] 156
சமூக ஜனநாயக கட்சி Socialdemokraterna (S) 112 இல்லை
பசுமைக்கட்சி Miljöpartiet (MP) 25 இல்லை
இடதுசாரி கட்சி Vänsterpartiet (V) 19 இல்லை
மொத்தம் 349

காட்சியகம்

[தொகு]

சான்றுகள்

[தொகு]
  1. Hellquist, Elof (1922). Svensk etymologisk ordbok. Stockholm: Gleerups förlag. p. 917.
  2. "WikiLeaks reveal Swedes gave intel on Russia, Iran". Washington Times. 2 December 2010. பார்க்கப்பட்ட நாள் 10 June 2013.
  3. weather. "Local, National, and International Weather – Forecasts, Radar Maps, Video, and News". Msn.com. Archived from the original on 11 மே 2008. பார்க்கப்பட்ட நாள் 6 May 2009.
  4. "''Monarchy: A modern royal family''". Sweden.se. Archived from the original on 2013-04-25. பார்க்கப்பட்ட நாள் 2013-03-13.
  5. David Wiles. "Sweden's political parties — a quick guide". Archived from the original on 2013-01-27. பார்க்கப்பட்ட நாள் 2013-09-15. {{cite web}}: Unknown parameter |= ignored (help)
"https://ta.wikipedia.org/w/index.php?title=சுவீடன்&oldid=3863393" இலிருந்து மீள்விக்கப்பட்டது