1654
Appearance
ஆயிரமாண்டு: | 2-ஆம் ஆயிரமாண்டு |
---|---|
நூற்றாண்டுகள்: | |
பத்தாண்டுகள்: | |
ஆண்டுகள்: |
1654 | |
கிரெகொரியின் நாட்காட்டி | 1654 MDCLIV |
திருவள்ளுவர் ஆண்டு | 1685 |
அப் ஊர்பி கொண்டிட்டா | 2407 |
அர்மீனிய நாட்காட்டி | 1103 ԹՎ ՌՃԳ |
சீன நாட்காட்டி | 4350-4351 |
எபிரேய நாட்காட்டி | 5413-5414 |
இந்து நாட்காட்டிகள் - விக்ரம் ஆண்டு - சக ஆண்டு - கலி யுகம் |
1709-1710 1576-1577 4755-4756 |
இரானிய நாட்காட்டி | 1032-1033 |
இசுலாமிய நாட்காட்டி | 1064 – 1065 |
சப்பானிய நாட்காட்டி | Jōō 3 (承応3年) |
வட கொரிய நாட்காட்டி | இல்லை (1912 முன்னர்) |
ரூனிக் நாட்காட்டி | 1904 |
யூலியன் நாட்காட்டி | கிரகோரியன் நாட்காட்டி 10 நாட்கள் குறைக்கப்பட்டு |
கொரிய நாட்காட்டி | 3987 |
1654 (MDCLIV) கிரெகொரியின் நாட்காட்டியில் ஒரு வியாழக்கிழமையில் ஆரம்பமான சாதாரண (நெட்டாண்டு அன்று) ஆகும், அல்லது 10-நாட்கள் பின்தங்கிய பழைய யூலியன் நாட்காட்டியில் ஞாயிற்றுக்கிழமையில் ஆரம்பமான சாதாரண ஆண்டு ஆகும்.
நிகழ்வுகள்
[தொகு]- மார்ச் 12–13 - கொசாக்குகளுக்கும் உருசியப் பேரரசர் முதலாம் அலெக்சேயிற்கும் இடையில் பிரியசுலாவ் நகரில் அமைதி ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டது. உக்ரைனில் கெமெல்னீத்ஸ்கி எழுச்சி முறியடிக்கப்பட்டது. 1648 இல் ஆரம்பமான இப்போரில் 100,000 யூதர்கள் வரை கொல்லப்பட்டனர்.
- ஏப்ரல் 5 - முதலாவது ஆங்கிலோ-இடச்சுப் போர் முடிவுக்கு வந்தது.[1]
- ஏப்ரல் 12 - ஆலிவர் கிராம்வெல் இங்கிலாந்துக்கும் இசுக்கொட்லாந்துக்கும் இடையில் ஒன்றியம் ஒன்றை ஆரம்பித்தார். இங்கிலாந்து நாடாளுமன்றத்தில் இசுக்கொட்டியப் பிரதிநிதித்துவம் அனுமதிக்கப்பட்டது.[1]
- மே 8 - ஓட்டோ வான் கெரிக் தனது வெற்றிடப்பம்பியை அறிமுகப்படுத்தி, வளிமண்டல அழுத்தத்தின் தாக்கத்தை விளக்கிக் காட்டினார்.[2]
- சூன் 3 - பிரான்சின் பதினான்காம் லூயி முடி சூடினார்.
- சூன் 6 - சுவீடனின் அரசராக பத்தாம் சார்லசு குஸ்தாவ் பதவியேற்றார். பதவியில் இருந்து விலகிய கிறித்தீனா அதே நாளில் கத்தோலிக்க சமயத்துக்கு இரகசியமாக மதம் மாறினார்.
- சூலை - உருசியப் படையினர் சிமொலியென்ஸ்க் நகரைக் கைப்பற்றினர். உருசிய-போலந்துப் போர் ஆரம்பமானது.
- சூலை 10 - ஆலிவர் கிராம்வெல்லைப் படுகொலை செய்ய முயன்ற குற்றத்துக்காக பீட்டர் வவெல், ஜோன் ஜெரார்டு ஆகியோர் இலண்டனில் தூக்கிலிடப்பட்டனர்.
- ஆகத்து 22 - பிரேசிலில் இருந்து 33 யூத அகதிகள் புதிய ஆம்ஸ்டர்டாம் (இன்றைய நியூயோர்க் நகரம்) நகரில் குடியேறினர்.[3][4]
- செப்டம்பர் 3 - இங்கிலாந்தில் முதலாவது காப்பாளர் நாடாளுமன்றம் கூடியது.[1]
- அக்டோபர் 12 - நெதர்லாந்தின் டெல்ஃப்ட் நகரில் துப்பாக்கித் தொழிற்சாலையில் இடம்பெற்ற வெடிப்பில் நூற்றுக்கும் அதிகமானோர் உயிரிழட்ந்தனர். இறந்தவர்களில் ரெம்பிரான்ட்டின் மாணவரும் ஒருவர்.
- மாலைத்தீவுகள் டச்சுக் கிழக்கிந்தியக் கம்பனியின் பிடியில் வந்தது.
பிறப்புகள்
[தொகு]- பேத்ரோ கலூங்சோத், பிலிப்பீனிய கத்தோலிக்க மறைப்பணியாளர் (இ. 1672)
இறப்புகள்
[தொகு]மேற்கோள்கள்
[தொகு]- ↑ 1.0 1.1 1.2 Williams, Hywel (2005). Cassell's Chronology of World History. London: Weidenfeld & Nicolson. p. 266. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-304-35730-8.
- ↑ "Guericke, Otto von". பிரித்தானிக்கா கலைக்களஞ்சியம் (11th) 9. (1910). The Encyclopaedia Britannica Co.
- ↑ "Jews arrive in the New World". American Jewish Archives. பார்க்கப்பட்ட நாள் 2012-07-10.
- ↑ LeElef, Ner (2001). "World Jewish Population". SimpleToRemember. பார்க்கப்பட்ட நாள் 2012-07-10.
Metropolitan டெல் அவீவ், with 2.5 million Jews, is the world's largest Jewish city. It is followed by New York, with 1.9 million.