உள்ளடக்கத்துக்குச் செல்

ஹால்டார் லேக்ஸ்நஸ்ஸின்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஹால்டார் லேக்ஸ்நஸ்ஸின்

ஹால்டார் லேக்ஸ்நஸ்ஸின் (Halldór Laxness 23 எப்பிரால் 1902 – 8 பிப்பிரவரி 1998 ) என்பவர் ஐஸ்லாந்து நாட்டு எழுத்தாளர். ஆவார்.. இவர் புதினங்கள், சிறுகதைகள், நாடகங்கள், பயண நூல்கள், கவிதைகள், நினைவுக் குறிப்புகள் எனப் பல இலக்கிய படைப்புகளை எழுதியவர் . 1955 ஆம் ஆண்டுக்குரிய இலக்கிய நோபல் பரிசு பெற்றவர் ஆவார்.[1]

வரலாறு

[தொகு]

1902 இல் பிறந்த லேக்ஸ்னஸ் ரேக் ஜவிக் என்ற ஊரில் பிறந்தார். இவர் இளம் அகவையிலேயே புத்தகங்களைப் படிக்கத் தொடங்கினார்.. சிறு கதைகளும் எழுதினார். ரேகஜவிக் ஊரில் உள்ள ஒரு தொழில் பள்ளியில் சேர்ந்து 1915 முதல் 1916 வரை படித்தார்.1916 இல் இவர் எழுதிய முதல் புதினம் ஒரு செய்தித் தாளில் வெளியானது.[2] ஐரோப்பா கண்டத்தில் பயணம் செய்து அனுபவங்களைப் பெற்றார்.

படைப்புகள்

[தொகு]

1930 ஆம் ஆண்டிலிருந்து 1960 வரை ஹால்டார் லேக்ஸ்னஸ் எழுதிய பல புதினங்கள் உயர்ந்த இலக்கியத்தரம் கொண்டவை என மதிக்கப் படுகின்றன. ஐஸ்லாந்தின் சாகசக் கதைகளை எழுதினார். ஐஸ்லாந்தின் தேசிய உணர்வை மக்களிடம் பரப்ப இலக்கியங்கள் சிலவற்றைப் படைத்தார். கருத்துக்கள், கொள்கைகள் போன்றவற்றின் விவாதங்களில் கலந்து கொண்டார். தமது 17 ஆம் அகவையில் வெளி நாடு செல்லும் வாய்ப்பைப் பெற்றார். அது உலக எழுத்தாளர் ஆகும் உந்துதலை அளித்தது. இத்தாலி நாட்டின் தவோர்மீனா என்ற பகுதியில் தங்கி கஷ்மீரின் மகன்னோத நெசவாளி என்ற புதினத்தை எழுதி முடித்தார். 1927 இல் ஆலிவுட் என்ற திரைப்பட நகரில் தங்கினார். சோவியத் நாட்டின் பொதுவுடைமை இயக்கத்தின் மீது நாட்டம் கொண்டு எழுதினார். 1932 இல் சோவியத் யூனியனுக்குப் பயணமானார். அங்கு இருந்த சமூக நிலை பண்பாட்டு நிலை ஆகியன பற்றி எழுதினார்.[3] உலக ஒளி என்ற புதினம் மிகச் சிறந்த ஒன்று என திறனாய்வாளர்கள் கருதுகிறார்கள்.

மேற்கோள்

[தொகு]
  1. Halldór Guðmundsson, The Islander: a Biography of Halldór Laxness. McLehose Press/Quercus, London, translated by Philip Roughton, 2008, pp. 49, 117, 149, 238, 294
  2. Kress, Helga; Tartt, Alison (2004). Stevens, Patrick J.. ed. "Halldór Laxness (23 April 1902-8 February 1998)". Dictionary of Literary Biography. 
  3. Guðmundsson, p.182
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஹால்டார்_லேக்ஸ்நஸ்ஸின்&oldid=2909307" இலிருந்து மீள்விக்கப்பட்டது