டூப்பாக் ஷகூர்
டூபாக் ஷகூர் | |
---|---|
பின்னணித் தகவல்கள் | |
இயற்பெயர் | டூபாக் அமரு ஷகூர் |
பிற பெயர்கள் | மாக்கவெலி (Makaveli) |
பிறப்பு | நியூயார்க் நகரம், நியூயார்க், ஐக்கிய அமெரிக்கா | சூன் 16, 1971
பிறப்பிடம் | மரின் நகரம், கலிபோர்னியா |
இறப்பு | செப்டம்பர் 13, 1996 லாஸ் வேகஸ், நிவாடா, ஐக்கிய அமெரிக்கா | (அகவை 25)
இசை வடிவங்கள் | ஹிப் ஹொப் |
தொழில்(கள்) | ராப் பாடகர், ராப் எழுத்துவர், நடிகர் |
இசைத்துறையில் | 1990-1996 |
வெளியீட்டு நிறுவனங்கள் | இன்டர்ஸ்கோப், டெத் ரோ, அமரு |
இணைந்த செயற்பாடுகள் | அவுட்லாஸ், டாக்டர் ட்ரே, ஸ்னூப் டாக், டிஜிட்டல் அண்டர்க்ரவுண்ட் |
இணையதளம் | 2paclegacy.com |
டூப்பாக் (Tupac) என்றழைக்கப்படும் டூப்பாக் அமரு ஷகூர் (Tupac Amaru Shakur) ஓரு புகழ்பெற்ற அமெரிக்க ராப் இசைக் கலைஞர் ஆவார். 1991 முதல் 1996 வரை இவர் ஐந்து இசைத்தொகுப்புகளை படைத்தார். 75 மில்லியன் இசைத்தொகுப்பு நகல்களை விற்பனை செய்த டூபாக் விற்பனை செய்த இசைத்தொகுப்புகள் மிகுந்த ராப்பர் என்று கின்னெஸ் உலகச் சாதனை நூலில் உள்ளார். பல ராப் விமர்சனம் எழுத்தாளர்கள் இவரை ராப் இசையில் மிகச்சிறந்த கலைஞர்களில் சேர்த்துக் கொள்கின்றனர். ராப் இசை தவிர திரைப்பட நடிகராகவும் கவிதை எழுத்தாளராகவும் பணியாற்றினார். பெரும்பான்மையாக ஆபிரிக்க அமெரிக்கர்கள் வாழும் வறுமைப்பட்ட பகுதிகளில் நடந்த வன்முறை, இனப் பாகுபாடு, போதைப்பொருள் பயன் போன்ற சமூகப் பிரச்சனைகளைப் பற்றி டூப்பாக் பாடல்களை படைத்தார். சமூக சமத்துவத்தை டூபாக் பல பாடல்களில் ஆதரவளித்தார்.
நியூயார்க் நகரில் பிறந்த டூப்பாக் பெரும்பான்மையாக ஓக்லன்ட், கலிபோர்னியா நகரில் வளந்தார். இசை உலகில் முதலாக டிஜிட்டல் அண்டர்கிரவுண்ட் என்னும் ராப் குழுமத்தில் ஒரு நடனக்காரராக இருந்தார். 1991இல் டூப்பாக்கின் முதலாம் இசைத்தொகுப்பு 2பாக்கலிப்ஸ் நௌ வெளிவந்து ராப் திறனாய்வாளர்கள் இதை பாராட்டியுள்ளன, ஆனால் இந்த இசைத்தொகுப்பில் இருந்த பாடல் வரிகளை சில மக்கள் கண்டனம் செய்தன. 1994ல் நவம்பர் மாதத்தில் ஐந்து முறை துப்பாக்கிச் சூட்டிற்கு உள்ளானார். இந்த நிகழ்வை முன்னாள் நன்பர் நொடோரியஸ் பி.ஐ.ஜி உள்ளிட்ட ராப் உலகில் வேறு சிலரை குற்றம் சாட்டியுள்ளார். இந்த நிகழ்வு 1990களில் நடந்த கடும் கிழக்கு-மேற்கு எதிரிடையின் ஒரு காரணமாகும்.
பாலியல் குற்றத்துக்கு 11 மாதங்களாக சிறைப்பிடிக்கப்பட்டார், ஆனால் டெத் ரோ ரெக்கர்ட்ஸ் என்ற ஒலிப்பதிவு நிறுவனத்தின் அதிபர் சுக் நைட் நிதியுதவி செய்து டூப்பாக் சிறையிலிருந்து விடுவிக்கப்பட்டார். இதனால் டூப்பாக் டெத் ரோ ரெக்கர்ட்ஸ் நிறுவனத்தை சேர்ந்து ராப் இசை வரலாற்றில் முதலாம் இரட்டை இசைத்தொகுப்பு, ஆல் ஐஸ் ஆன் மி, படைத்தார்.
செப்டம்பர் 7, 1996 லாஸ் வேகஸ் நகரில் டூப்பாக் நான்கு முறை துப்பாக்கியால் சுடப்பட்டு ஆறு ஆண்டுகளுக்கு பிறகு உயிரிழந்தார்.
இசைத்தொகுப்புகள்
[தொகு]உயிர் இருக்கும்பொழுது வெளிவந்த இசைத்தொகுப்புகள்
[தொகு]- 1991: 2பாக்கலிப்ஸ் நௌ
- 1993: ஸ்டிரிக்ட்லி 4 மை N.I.G.G.A.Z.
- 1994: தக் லைஃப் (with தக் லைஃப்)
- 1995: மி அகைன்ஸ்ட் த வர்ல்ட்
- 1996: ஆல் ஐஸ் ஆன் மி
- 1996: த டான் கில்லூமினாடி: த 7 டே தியரி
மரணத்துக்கு பிறகு வெளிவந்த இசைத்தொகுப்புகள்
[தொகு]- 1997: R U ஸ்டில் டவுன் (ரிமெம்பர் மி)
- 1999: ஸ்டில் ஐ ரைஸ்
- 2001: அண்டில் த எண்ட் ஆஃப் டைம்
- 2002: பெட்டர் டேஸ்
- 2003: டூபாக்: ரெசரெக்ஷன்
- 2004: லாயல் டு த கேம்
- 2006: பாக்'ஸ் லைஃப்
- 2007: பிகினிங்ஸ் - த லாஸ்ட் டேப்ஸ் 1988-1991
நடித்த திரைப்படங்கள்
[தொகு]ஆண்டு | படம் | பாத்திரம் | குறிப்புகள் |
---|---|---|---|
1991 | நதிங் பட் ட்ரபிள் | அவர்தாமே | சிறிய பாத்திரம் |
1992 | ஜூஸ் | பிஷப் | முதன்முறை கதாநாயகனாக |
1993 | போயெடிக் ஜஸ்டிஸ் | லக்கி | ஜேனெட் ஜாக்சன் உடன் கதாநாயகன் |
1994 | அபவ் த ரிம் | பெர்டி | மார்லன் வேயன்ஸ் உடன் கதாநாயகன் |
1996 | புலெட் | டேங்க் | மரணத்துக்கு பிறகு வெளிவந்தது |
1997 | கிரிட்லாக்ட் | இசிகியெல் "ஸ்பூன்" விட்மோர் | மரணத்துக்கு பிறகு வெளிவந்தது |
1997 | கேங்க் ரிலேடெட் | டிடெக்டிவ் ராட்ரிகெஸ் | டூபாக்கின் கடைசியாக நடித்த திரைப்படம் |
2003 | டூபாக்: ரெசரெக்ஷன் | அவர் தாமே | விளக்கப்படம் |
2008 | லிவ் 2 டெல் | அவர் தாமே | 2008இல் வெளிவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது |
2009 | பெயர் இல்லாத டூபாக் விளக்கப்படம் | அவர் தாமே | (அறிவிக்கப்பட்டது)[1] |