செனிபர் தௌதுனா
செனிபர் தௌதுனா Jennifer Doudna | |
---|---|
பிறப்பு | செனிபர் ஆன் தௌதுனா பெப்ரவரி 19, 1964 வாசிங்டன், டி. சி., ஐக்கிய அமெரிக்கா |
துறை | உயிர்வேதியியல் ஆர்.என்.ஏ உயிரியல் மரபணு திருத்தம்[1] |
பணியிடங்கள் | கொலராடோ பல்கலைக்கழகம் (போல்டர்) யேல் பல்கலைக்கழகம் கலிபோர்னியா பல்கலைக்கழகம் (பெர்க்லி) கிளாசுட்டன் கல்விக்கழகங்கள் |
கல்வி | பொமோனா கல்லூரி (இளங்கலை) ஆர்வர்டு பல்கலைக்கழகம் (முனைவர்) |
ஆய்வேடு | Towards the design of an RNA replicase (1989) |
ஆய்வு நெறியாளர் | ஜாக் சோஸ்டாக் |
Other academic advisors | தாமசு செக் |
அறியப்படுவது |
|
விருதுகள் |
|
துணைவர் | சேமி கேட் |
இணையதளம் |
செனிபர் ஆன் தௌதுனா (Jennifer Anne Doudna, பிறப்பு; பிப்ரவரி 19, 1964)[2] ஓர் அமெரிக்க உயிர்வேதியியலளாளர் ஆவார். இவர் 2020 ஆம் ஆண்டுக்கான வேதியியல் நோபல் பரிசை பேராசிரியர் எமானுவேல் சார்ப்பெந்தியேயுடன் சேர்ந்து மரபணுத்தொகுதியை துல்லியமாக நறுக்கிப்பிணைக்கும் கிரிசிப்பர் (CRISPR/Cas9) நுட்பத்தைக் கண்டுபிடித்தமைக்காக வென்றார்[3]கலிபோர்னியா பல்கலைக்கழகம், பெர்க்லியில் வேதியல் துறை, மூலக்கூறு மற்றும் உயிரணு உயிரியல் துறை பேராசிரியராகவும் உள்ளார்.[4] டவுன்னா, 1997 வரை ஓவாடு இஃகியூசு மருத்துவ நிறுவனத்தில் ஆய்வாளராக இருந்தார். கலிபோர்னியா பல்கலைக்கழகத்தில் பேராசிரியராகப் பணியாற்றிக்கொண்டே கிளாட்ஸ்டோன் நிறுவனத்தில் முதுநிலை ஆய்வாளராகவும் தொடர்ந்து பணிபுரிந்துகொண்டிருக்கிறார்.[5][6][7][1][8]
டவுன்னா, மரபணு தொகுப்பாக்கத்தில் நுண்ணியிரிகள் பற்றிய இவருடைய அடிப்படை பணிகளுக்காகவும், தலைமைத்துவத்திற்காகவும் கிரிசிப்பர் (Crispr)-புரட்சியின் முன்னோடியாக அறியப்படுகிறார்.[9] 2012 ஆம் ஆண்டில் டவுன்னா மற்றும் எமானுவேல் சார்ப்பெந்தியே ஆகிய இருவரும், கிரிசிப்பர் |காசு9 பாக்டீரியாவின் நொதிகள் நுண்ணுயிரிகளின் நோயெதிர்ப்புத் திறனை கட்டுப்படுத்தும் எனவும் அதனைப் பல்வேறு வகைகளில் திட்டமிடப்பட்ட மரபணு தொகுப்பாக்கத்திற்குப் பயன்படுத்தலாம் என்றும் முன்மொழிந்தனர்.[9][10] இது உயிரியல் வரலாற்றில் குறிப்பிடத்தக்க முக்கியக் கண்டுபிடிப்பாகக் கருதப்படுகிறது[11]
டவுன்னா, உயிர் வேதியல் துறையிலும், மரபணு துறையிலும் குறிப்பிடத்தகக் அடிப்படைப் பங்காற்றியமைக்காக பல்வேறு மதிப்பு மிக்க விருதுகளையும் கௌரவங்களையும் பெற்றிருக்கிறார். எக்சு-கதிர் படிகவியலால் தீர்மானிக்கபப்ட்ட ஒரு ரைபோசைமின் கட்டமைப்பு குறித்த ஆய்வுக்காக இவருக்கு 2000 ஆம் ஆண்டில் ஆலன் டி. வாட்டர்மேன் விருது வழங்கப்பட்டது.[12] சார்ப்பெண்டியருடன் இணைந்து ஐவர் செய்த கிறிஸ்பர்/காஸ்9 மரபணு தொகுப்பு நுட்ப ஆய்வுக்காக 2015 ஆம் ஆண்டு வாழ்க்கை அறிவியலுக்கான பிரேக்த்ரூ பரிசு வழங்கப்பட்டது.[13] மேலும் 2015 ஆம் ஆண்டு மரபணுவியலுக்கான குரூபர் பரிசு பெற்றார்.[14] 2016 ஆம் ஆண்டில் கனடாவின் கெய்டுனர் தேசியப் பரிசும்.[15] 2017 ஆம் ஆண்டில் ஜப்பான் பரிசும் பெற்றார்.[16] அறிவியல் சமூகத்திற்கு அப்பாற்பட்டு 2015 இன் மிகவும் புகழ்பெற்ற நூறு மனிதர்களுள் ஒருவராக (சார்பெண்டியருடன்) அமெரிக்காவின் புகழ்பெற்ற டைம் இதழில் இடம்பெற்றுள்ளார்[17] அதே இதழின் 2016 ஆண்டின்; டைம் பர்சன் ஆஃப் தி இயர் நபர்களுள் ‘ரன்னர் அப்’ என பிற கிறிஸ்பர் ஆய்வாளர்களுடன் பட்டியலில் இடம்பிடித்துள்ளார்.[18]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ 1.0 1.1 https://scholar.google.com/citations?user=YO5XSXwAAAAJ
- ↑ "Jennifer Doudna – American biochemist". Encyclopædia Britannica Online. பார்க்கப்பட்ட நாள் 13 November 2015.
- ↑ "Press release: The Nobel Prize in Chemistry 2020". Nobel Foundation. பார்க்கப்பட்ட நாள் 7 October 2020.
- ↑ "Curriculum Vitae (Jennifer A. Doudna)" (PDF). Lawrence Berkeley National Laboratory. பார்க்கப்பட்ட நாள் 24 October 2017.
- ↑ Langelier, Julie (5 September 2018). "Jennifer Doudna Opens Laboratory at the Gladstone Institutes". Gladstone Institutes (in ஆங்கிலம்). Archived from the original on 10 அக்டோபர் 2018. பார்க்கப்பட்ட நாள் 25 ஜனவரி 2019.
{{cite web}}
: Check date values in:|access-date=
(help) - ↑ "Interview with Jennifer Doudna (recorded in 2004)". National Academy of Sciences. பார்க்கப்பட்ட நாள் 8 November 2017.
- ↑ Marino, M. (2004). "Biography of Jennifer A. Doudna". Proceedings of the National Academy of Sciences 101 (49): 16987. doi:10.1073/pnas.0408147101. Bibcode: 2004PNAS..10116987M.
- ↑ செனிபர் தௌதுனா's publications indexed by the Scopus bibliographic database, a service provided by எல்செவியர். (subscription required)
- ↑ 9.0 9.1 Jennifer A. Doudna and Samuel H. Sternberg. A Crack in Creation: Gene Editing and the Unthinkable Power to Control Evolution. Houghton Mifflin Harcourt, 2017.
- ↑ Russell, Sabin. "Cracking the Code: Jennifer Doudna and Her Amazing Molecular Scissors". Cal Alumni Association. பார்க்கப்பட்ட நாள் 10 November 2017.
- ↑ Pollack, Andrew (May 11, 2015). "Jennifer Doudna, a Pioneer Who Helped Simplify Genome Editing". த நியூயார்க் டைம்ஸ். https://www.nytimes.com/2015/05/12/science/jennifer-doudna-crispr-cas9-genetic-engineering.html. பார்த்த நாள்: May 12, 2015.
- ↑ "Alan T. Waterman Award Recipients, 1976 – present". National Science Foundation. பார்க்கப்பட்ட நாள் 31 October 2017.
- ↑ "Laureates: Jennifer A. Doudna". breakthroughprize.org. பார்க்கப்பட்ட நாள் 31 October 2017.
- ↑ "2015 Genetics Prize: Jennifer Doudna". The Gruber Foundation. பார்க்கப்பட்ட நாள் 24 October 2017.
- ↑ "Jennifer Doudna". Canada Gairdner Foundation. பார்க்கப்பட்ட நாள் 2 November 2017.
- ↑ "Laureates of the Japan Prize: Jennifer A. Doudna, Ph.D." The Japan Prize Foundation. பார்க்கப்பட்ட நாள் 1 November 2017.
- ↑ King, Mary-Claire. "Time 100 Most Influential People: Emmanuelle Charpentier & Jennifer Doudna". Time. April 16. 2015. Web. 25 Dec. 2016.
- ↑ Park, Alice. "The CRISPR Pioneers: Their Breakthrough Work Could Change the World." Time. N.d. 2016. Web. 25 Dec. 2016.
வெளி இணைப்புகள்
[தொகு]- "Jennifer Doudna (UC Berkeley / HHMI): Genome Engineering with CRISPR-Cas9". YouTube. iBiology Science Stories. March 23, 2015.
- "Jennifer Doudna: CRISPR Basics". YouTube. Innovative Genomics Institute – IGI. November 4, 2017.
- "Into the Future with CRISPR Technology with Jennifer Doudna". YouTube. University of California Television (UCTV). October 26, 2019.