உள்ளடக்கத்துக்குச் செல்

சி. என். கோபுரம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சி. என் கோபுரம்

சி. என். கோபுரம்(CN Tower (பிரெஞ்சு மொழி: Tour CN) ), 553.3 மீட்டர் உயரம் (1,815.3 அடி) உயரம் கொண்ட கோபுரமானது கனடாவின் டோரண்டோவில், ஒன்றாரியோ மாகணத்தில் அமைந்துள்ள உலகின் மிக உயரமான கோபுரங்களுள் ஒன்றாகும்.[1] 1973 ஆம் ஆண்டு, பெப்ரவரி 6 ஆம் திகதி தொடங்கப்பட்ட இதன் கட்டுமானப் பணிகள் 1976 ஆண்டு பூர்த்தியாயின. 1976 ஆம் ஆண்டு, ஜூன் 26 ஆம் தேதி மக்கள் பயன்பாட்டிற்காக திறக்கப்பட்ட இந்தக் கோபுரம், 2010 ஆம் ஆண்டில் புர்ஜ் கலிஃபா என்னும் துபாய் கோபுரம் மற்றும் கன்டொண் கோபுரம் ஆகிய கோபுரங்கள் கட்டிமுடிக்கப்படும் வரை, உலகின் மிக உயரமான கோபுரமாக சுமார் 34 ஆண்டுகள் திகழ்ந்தது .[2][3][4][5]

மேற்கு அரைக்கோளத்தில் தனித்த நிலையான கட்டுமானம் கொண்ட உயரமான கோபுரங்களில் ஒன்பதாவது இடத்தில் உள்ளது. தொராண்டோ நகரின் வான்வரையாக இருக்கிறது.[6][7] இந்த கோபுரத்தைப் பார்ப்பதற்காக உலகம் முழுவதிலும் இருந்து சுமார் இரண்டு மில்லியன் மக்கள் ஒவ்வொரு ஆண்டும் இங்கு வருகை புரிகின்றனர் .[8][9] இதன் பெயரான சி என் என்பது கனாடியன் நேஷனல் (தேசிய கனடா இரயில்வே) எனும் நிறுவன பெயரின் சுருக்கமாகும்.

1995 ஆம் ஆண்டில் அமெரிக்கக் கட்டடப் பொறியாளர்கள் சமூகமானது , சி. என் கோபுரத்தை நவீன உலக அதிசயங்களில் ஒன்றாக அறிவித்தது. இது பெரிய கோபுரங்கள் உலக சம்மேளனத்திற்கு சொந்தமானதாகும்.[8][10][11]

வரலாறு

[தொகு]

1968 ஆம் ஆண்டில் கனடிய தேசிய இரயில்வே நிறுவனம் தொராண்டோ நகரத்தில் ஒரு பெரிய தொலைக்காட்சி மற்றும் வானொலி ஒலிபரப்பு தளத்தை உருவாக்க விரும்பியபோது சி. என் கோபுரம் உருவாக்குவதற்கான யோசனை வந்தது.அடுத்த சில ஆண்டுகளில் இதனைத் தோற்றுவிப்பதற்கான வேலைகள் நடந்தன. 1972 இல் இந்தத் திட்டத்திற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானது. இந்த கோபுரம் மெட்ரோ சென்டரின் (மையத்தின்) ஒரு அங்கமாக இருந்தது. இந்தக் கோபுரத்தின் முதன்மைப் பொறியாளர்களாக ஜான் ஆண்ட்ரூஸ், வெப் செராஃபா, மென்கெஸ் ஆகியோர் இருந்தனர்.[1]

கட்டுமானம்

[தொகு]

சி. என் கோபுரத்தின் கட்டுமானப் பணிகளானது பெப்ரவரி 6, 1973 இல் துவங்கப்பட்டது. இதன் அடித்தளத்திற்காக (கட்டுமானம்) பேரளவு அகழ்தல் பணி நடைபெற்றது. குறிப்பாக 56,000டன் (61,729 குறுகிய டன்கள், 55,116 நீண்ட டன்கள்) அளவுள்ள மண் மற்றும் களிப்பாறைகள் நீக்கப்பட்டன. பைஞ்சுதைக்காக 450 டன் (496 குறுகிய டன்கள், 443 நீண்ட டன்கள் ) மேலும் 36 டன்கள் (40 குறுகிய டன்கள், 35 நீண்ட டன்கள்) எஃகு , 6.7 மீட்டர் (22.0 அடி) மின்கம்பிகள் போன்றவைகள் பயன்படுத்தப்பட்டன. அடித்தளப் பணிகள் மிக விரைவாக நடைபெற்றன. பணிகள் துவங்கிய நான்கு மாதங்களில் அடித்தளப் பணிகள் முழுவதுமாக முடிவடைந்தது.[12]

கட்டிடக் கலைஞர்கள்

[தொகு]

WZMH கட்டிடக்ககலையினர், ஜான் ஹாமில்டன் ஆண்ட்ரூஸ், வெப் செராஃபா, மற்றும் ஈ. ஆர். பால்வினின் உடஹ்வியுடன் மென்ஹஸ் ஹவுஸ்டன்.

திறப்பு விழா

[தொகு]

சி. என். கோபுரமானது சூன் 26, 1976 அன்று மக்கள் பயன்பாட்டிற்காகத் திறக்கப்பட்டது.[13] இதன் கட்டுமானப் பணிகளுக்காக சுமார் 63 மில்லியன் டாலர்கள் செலவானது. பதினைந்து ஆண்டுகளில் இதற்கான செலவினத் தொகையானது திருப்பிச் செலுத்தப்பட்டது. பின் தேசிய கனடிய இரயில்வே நிறுவனம் இதனை விற்பனை செய்தது.

கட்டுமான நிலைகள்

[தொகு]

சான்றுகள்

[தொகு]
  1. 1.0 1.1 "Canada's Wonder of the World". CN Tower. Archived from the original on July 23, 2007. பார்க்கப்பட்ட நாள் September 26, 2007.
  2. "The world's tallest structures through history". The Daily Telegraph (இலண்டன்). April 20, 2017. https://www.telegraph.co.uk/travel/galleries/tallest-structures-in-the-world-through-history/structures13/. 
  3. "Modern World Wonders-CN Tower". www.theworldwonders.com.
  4. Mollins, Julie (April 9, 2008). "CN Tower's glass-floored lift not for faint-hearted". Reuters.
  5. "Canton Tower, Guangzhou". SkyscraperPage.
  6. Plummer, Kevin (September 4, 2007). "The CN Tower is Dead. Long Live The CN Tower!". The Torontoist. http://torontoist.com/2007/09/the_cn_tower_is.php. பார்த்த நாள்: November 17, 2008. 
  7. CN Tower celebrates 30th birthday பரணிடப்பட்டது 2015-06-22 at the வந்தவழி இயந்திரம், Broadcast News/canada.com, June 26, 2006
  8. 8.0 8.1 "Facts and visitor information on the CN Tower in Canada". The World Federation of Great Towers. Archived from the original on செப்டம்பர் 29, 2016. பார்க்கப்பட்ட நாள் January 2, 2013. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
  9. (PDF) World Wonders and Facts at a Glance. CN Tower. http://www.cntower.ca/en-ca/about-us/architecture/world-wonders-and-facts-at-a-glance.html. பார்த்த நாள்: August 30, 2017. 
  10. "The Seven Wonders of the Modern World". Infoplease.com. பார்க்கப்பட்ட நாள் January 2, 2013.
  11. Rosenberg, Matt (March 3, 2017). "Seven Wonders of the World". Dotdash#2017–present: Closure of About.com, rebranding to multiple publications under Dotdash|ThoughtCo. பார்க்கப்பட்ட நாள் August 30, 2017.
  12. The Hahn Company|TrizecHahn. "A Brief Overview of the CN Tower". Institute of Electrical and Electronics Engineers. Archived from the original on மார்ச் 3, 2016. பார்க்கப்பட்ட நாள் January 2, 2013. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
  13. Botelho-Urbanski, Jessica (June 25, 2016). "CN Tower celebrates 40 years as a tourist magnet and lightning rod". Toronto Star. https://www.thestar.com/news/gta/2016/06/25/cn-tower-celebrates-40-years-as-a-tourist-magnet-and-lightning-rod.html. பார்த்த நாள்: June 27, 2016. 

வெளியிணைப்புகள்

[தொகு]

சி. என் கோபுரம் அதிகாரப்பூர்வ வலைத்தளம்

"https://ta.wikipedia.org/w/index.php?title=சி._என்._கோபுரம்&oldid=3612921" இலிருந்து மீள்விக்கப்பட்டது