உள்ளடக்கத்துக்குச் செல்

இகாரசு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Bruegel's Landscape with the Fall of Icarus (ca. 1558), famous for relegating the fall to a scarcely noticed event in the background

கிரேக்கத் தொன்மவியலில் இகாரசு (Icarus) என்பவர் (தொன்கிரேக்கம்: Ἴκαρος, Íkaros, எட்ருசுகன்: Vikare[1]), மிகவும் திறமைவாய்ந்த கைவினைஞரான டெடாலசு (Daedalus) என்பாரின் மகனாவார். இவருக்கு இவர் தந்தையார் இறகுகள் மற்றும் மெழுகாலான இறக்கையைக் கட்டுவித்தார் எனவும், அவற்றினுதவியோடு அவர் 'கிரட்' எனப்படும் தீவிலிருந்து தப்ப முயன்றார் எனவும் கதைகள் வழங்கப்படுகின்றன. கதிரவனுக்கு அருகில் பறக்கவேண்டாம் என்று இவர் தந்தையார் அறிவுறுத்தியிருந்தார், அதைக் கேளாமல் அவர் கதிரவனுக்கு அருகில் பறந்ததால் இறக்கையிலிருந்த மெழுகு உருகி இறக்கை செயலிழந்தது; அவர் கடலில் விழுந்து மூழ்கியிறந்தார். கிரீசு நாட்டின் எல்லானிக் வான்படைக் கழகம் இகாரசு நினைவில் பெயர் சூட்டப்பட்டுள்ளது. கிரேக்கத் தொன்மவியல் இலக்கியங்களில் பறத்தல் முயற்சியில் ஈடுபட்ட நிபுணராக இகாரசு கருதப்படுகிறார்.

குறிப்புகள்

[தொகு]
  1. Larissa Bonfante, Judith Swaddling, Etruscan Myths, p. 43

குறிப்புதவிகள்

[தொகு]
  • Graves, Robert, (1955) 1960. The Greek Myths, section 92 passim
  • Smith, William, ed. A Dictionary of Greek and Roman Biography and Mythology
  • Pinsent, J. (1982). Greek Mythology. New York: Peter Bedrick Books.
  • Icarus, The Phoenix (2011). a Phoenix hero from the game DotA.

வெளியிணைப்புகள்

[தொகு]
  • Spoof CAA Style Accident Report About Icarus Incident
  •   "Icarus". கோலியரின் புதுக் கலைக்களஞ்சியம். (1921). New York: P.F. Collier & Son Company. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=இகாரசு&oldid=1369721" இலிருந்து மீள்விக்கப்பட்டது