அஸ்பார்ட்டம்
பெயர்கள் | |
---|---|
ஐயூபிஏசி பெயர்s
N-(L-α-Aspartyl)-L-phenylalanine,
1-methyl ester | |
இனங்காட்டிகள் | |
22839-47-0 | |
ChEBI | CHEBI:2877 |
ChEMBL | ChEMBL171679 |
ChemSpider | 118630 |
DrugBank | DB00168 |
InChI
| |
யேமல் -3D படிமங்கள் | Image |
KEGG | C11045 |
| |
UNII | Z0H242BBR1 |
பண்புகள் | |
C14H18N2O5 | |
வாய்ப்பாட்டு எடை | 294.31 g·mol−1 |
அடர்த்தி | 1.347 g/cm3 |
உருகுநிலை | 246–247 ° செல்சியசு |
கொதிநிலை | சிதைவுறுவது |
எளிதில் கரையாதது | |
கரைதிறன் | எத்தனாலில் சிறிது கரையும் |
காடித்தன்மை எண் (pKa) | 4.5–6.0[2] |
தீங்குகள் | |
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும் பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும். | |
அஸ்பார்ட்டம் (aspartame) என்பது ஒரு செயற்கை இனிப்பூட்டி. கரும்புச் சர்க்கரையான சுக்ரோசை விட இது 200 மடங்கு இனிப்புச் சுவையைத் தூண்டக் கூடியது. இதைச் சர்க்கரை என்று சொல்வது தவறு. ஏனெனில், வேதியியல் அடிப்படையில் இது ஃபினைல் அலனைன் மற்றும் அஸ்பார்ட்டிக் அமிலம் ஆகிய இரு அமினோ அமிலங்கள் கொண்ட ஓர் பெப்டைடு.
இது 1965 ஆம் ஆண்டில் முதன் முதலாக தயாரிக்கப்பட்டு நியூட்ரா சுவீட் எனும் வணிகப் பெயரில் விற்கப்பட்டது. இதன் காப்புரிமை 1992 ஆம் ஆண்டோடு முடிவடைந்து விட்டது.
அதிக வெப்ப நிலையில் அஸ்பார்ட்டம் அமினோ அமிலங்களாக உடைந்து விடும். எனவே சூடான பானங்களோடு இதைப் பயன்படுத்த இயலாது. குறைவான வெப்பநிலை மற்றும் அமிலத் தன்மை கொண்ட திரவங்களில் இதன் அரை வாழ்நாள் காலம் 300 நாட்கள் ஆகும். இதனால் குளிர்பானங்கள் பலவற்றில் அஸ்பார்ட்டம் பயன்படுத்தப்படுகிறது.
அஸ்பார்ட்டம் ஃபினைல் அலனைன் அமினோ அமிலத்தைக் கொண்டிருப்பதால் ஃபினைல் கீட்டோனூரியா நோய் உடையோர் இதைப் பயன்படுத்தக் கூடாது.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Budavari, Susan, ed. (1989). "861. Aspartame". The Merck Index (11th ed.). Rahway, NJ: Merck & Co. p. 859. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-911910-28-5.
- ↑ Rowe, Raymond C. (2009). "Aspartame". Handbook of Pharmaceutical Excipients. pp. 11–12. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 1-58212-058-7.