Jump to content

Universal Code of Conduct/Enforcement draft guidelines review/ta

From Meta, a Wikimedia project coordination wiki
This page is a translated version of the page Universal Code of Conduct/Enforcement draft guidelines review and the translation is 74% complete.
Outdated translations are marked like this.
Universal Code of Conduct

Enforcement draft guidelines abstract

In this table, you can find an abstract of the full Enforcement draft guidelines review document. It was created to ensure that every member of the community can understand the new guidelines.

WHO will be responsible for enforcing the UCOC?

  • The WMF, designated people such as code enforcement officers, and a new committee called the Universal Code of Conduct Coordinating Committee (AKA the U4C).
  • The U4C will oversee the process of UCoC enforcement, manage special cases, provide guidance and training, and monitor enforcement of the UCoC.
  • Local and global functionaries[1] will have guidance to know how to enforce the UCoC even if they are not part of the U4C.

HOW will this be done?

  • Local communities, affiliates, and the WMF should develop and conduct training for community members so they can better address harassment and other UCoC violations.
  • The guidelines also lay out recommendations for which parties should address what types of UCoC violations.

WHAT else needs to be done to enforce the UCOC?

  • The draft notes that appeals should be possible and practically available to individuals who were sanctioned for UCoC violations.

HOW can I get involved in the EDGR process?

Introduction

உலகளாவிய நடத்தை விதி 2 வது கட்டத்தின் வரைவுக் குழு, உலகளாவிய நடத்தை விதிமுறை (UCoC) க்கான அமலாக்கத்தின் வரைவுக்கான வழிமுறைகள் குறித்த கருத்துகளை அறிய விரும்புகிறது. ஆகஸ்ட்-17, 2021 முதல் அக்டோபர்-17. 17/20 2021 வரையிலான காலம் மதிப்பாய்வு காலமாக இருக்கும் எனத் திட்டமிடப்பட்டுள்ளது. வரைவு மதிப்பாய்வு பேச்சுப் பக்கத்தில் எந்த மொழியிலும், மொழிபெயர்ப்புகளின் பேச்சுப் பக்கங்களில், உள்ளூர் விவாதங்கள், வட்ட மேசை விவாதங்கள், உரையாடல் நேரம், பிற வடிவங்கள் மூலம் கருத்து வெளிப்படுத்தல் மற்றும் [email protected] க்கு மின்னஞ்சல் மூலம் கருத்துகள் வரவேற்கப்படுகின்றன.

UCoC திட்டம் முழுவதும் விக்கிமீடியா சமூகங்களின் உள்ளீடு சேகரிக்கப்பட்டுள்ளது. 11 தன்னார்வலர்கள் மற்றும் நான்கு விக்கிமீடியா அறக்கட்டளை ஊழியர்களின் வரைவுக் குழுவால் சேகரிக்கப்பட்ட தகவல்கள் மதிப்பாய்வு செய்யப்பட்டது ஒரு விரிவான சமூக மதிப்பீட்டுக்கான அமலாக்க வரைவு வழிமுறைகளை உருவாக்க அவர்கள் பல மாதங்களுக்கு மேல் சந்தித்தனர். சேகரிக்கப்பட்ட தகவல்கள் வழிமுறைகளை மேலும் செம்மைப்படுத்தப் பயன்படுத்தப்படும்.

மொழி மற்றும் பங்கேற்பு முறையை நீங்கள் தேர்வு செய்யலாம். பல மொழிகளில் பல விக்கிமீடியா திட்டங்களில் உரையாடல்கள் நடைபெறும்.தங்கள் திட்டங்களில் இதற்கான கனதுரையாடலை ஏற்பாடு செய்ய தன்னார்வலர்கள் உதவ வேண்டும். உதவியாக இருந்து ஊக்குவிப்போர் பல சேனல்களைப் பார்த்து, கேள்விகளுக்குப் பதிலளிக்கவும் கலந்துரையாடல்களை ஏற்பாடு செய்யவும் உதவுகிறார்கள்.

கலந்துரையாடல்களின் சுருக்க வடிவம் உருவாக்கப்பட்டு, இரண்டு வாரங்களுக்கு ஒருமுறை வரைவுக் குழுவிடம் வழங்கப்படும். சுருக்க விவரங்கள் இங்கே வெளியிடப்படும்.

Enforcement draft guidelines

வரைவுக் குழு வழங்கியுள்ள குறிப்பு

இந்த ஆவணத்தில் கோடிட்டுக் காட்டப்பட்டுள்ள UCoC அமலாக்க வழிமுறைகள் தொடர்ந்து மறு ஆய்வு செய்யப்படுகின்றன என்பதைக் கருத்தில் கொள்ளவும், மேலும் உலகளாவிய நடத்தை விதிமுறைகளோடு சமூகப் பின்னூட்டங்களையும் கருத்தில் கொண்டு இவை படிப்படியாக உருவளர்ச்சி பெறும் மற்றும் மதிப்பிடப்படும் இந்த வரைவு சார்ந்து சமூகம் கருத்தில் கொள்ள வேண்டிய கேள்விகளையும் இந்தக் குழு வழங்கியுள்ளது.

கண்ணோட்டம்

செயல் விதி அமலாக்க வரையறை

உலகளாவிய நடத்தை விதிமுறைகளை மீறுதலைத் தடுத்தல், கண்டறிதல், விசாரணை மேற்கொள்ளுதல் மற்றும் அமல்படுத்துதல் ஆகியவை விதி அமலாக்கத்தின் பங்குகள் ஆகும். விதி அமலாக்கத்தை மேற்கொள்வது நியமிக்கப்பட்ட அலுவலர்கள், உலகளாவிய நடத்தை விதி ஒருங்கிணைப்புக் குழு ["U4C குழு" - இறுதி பெயர் தீர்மானிக்கப்பட வேண்டும்], மற்றும் விக்கிமீடியா அறக்கட்டளையின் பொறுப்பு ஆகும். விக்கிமீடியா இயக்கம் முழுமைக்கும் இது முறையாக, சரியான நேரத்தில் அமல்படுத்தப்பட வேண்டும். அதனால், உலகளாவிய நடத்தை விதிகளை அமல்படுத்தும் பொறுப்பில் உள்ள தனிப்பட்ட நபர்கள் இந்த விதிமுறைகளை முழுமையாக அறிந்திருக்க வேண்டும்.

முன்தடுப்புப் பணிகள் மற்றும் பிரச்சாரங்கள், இணக்கம் சார்ந்து ஐயப்பாடான நடத்தை அறிகுறிகளைக் கொண்டோருக்கு எச்சரிக்கை வழங்குதல், தொழில்நுட்பக் கட்டுப்பாடுகள் மற்றும் தண்டனைகளை விதித்தல் அல்லது தேவையான மற்றும் பொருத்தமான கூடுதல் நடவடிக்கைகளை எடுப்பதன் மூலம் UCoC -இன் அமலாக்கம் மேற்கொள்ளப்படுகிறது. விக்கிமீடியா தளங்களில் கொள்கைகள், ஒழுங்குமுறை, விதிகள் மற்றும் கட்டுப்பாடுகளை ஆன்லைன் மற்றும் ஆஃப்லைனில் அமல்படுத்தும் உள்ளூர் மற்றும் உலகளாவிய அலுவலர்கள், ஒழுங்குமுறை அமலாக்க செயல்பாடு மற்றும் செயல்முறையின் நிர்வாகத்தை அறிந்து கொள்வது அவசியமானது.

ஒழுங்குமுறை அமலாக்க அதிகாரி (தீர்மானிக்கப்பட வேண்டும்) வரையறை:

A [ஒழுங்குமுறை அமலாக்க அதிகாரி - இறுதி பெயர் தீர்மானிக்கப்பட வேண்டும்] ஒரு தன்னார்வலர் அல்லது விக்கிமீடியா இயக்கத்தின் ஊழியர் ஆக இருக்கலாம். அவர் உலகளாவிய நடத்தை விதி தொகுப்பின் மீறலைத் தடுத்தல், கண்டறிதல், விசாரணை மேற்கொள்ளுதல் மற்றும் அமல்படுத்துதல் ஆகியவற்றை மேற்கொள்ளத் தேவையான பயிற்சி மற்றும் தொழில்நுட்ப உரிமைகளைப் பெற்றிருக்கவேண்டும்.

ஒழுங்குமுறை அமலாக்கக் குழு - "U4C குழு" வரையறை:

விக்கிமீடியா சமூகங்கள் மற்றும் விக்கிமீடியா அறக்கட்டளையில் UCoC ஐ செயல்முறைப்படுத்துவதில் பங்குதாரராக இருப்பதற்கு மேலாக, UCoC செயல்முறையாக்கப்படுவதை கண்காணிக்கும் ஒரு பொறுப்பான நிரந்தர குழுவை உருவாக்க வரைவுக் குழு பரிந்துரைக்கிறது.

UCoC மீறல்களைக் கண்காணித்து அது குறித்த அறிக்கைகளை வழங்குதல் "U4C குழுவின் பணியாம். கூடுதலாக அவை விசாரணைகளில் ஈடுபடலாம் மற்றும் பொருந்தும் இடங்களில் பிரதிவாதி மீதான நடவடிக்கைகளைப் பரிந்துரைக்கலாம்.

ஒரு வழக்கு சார்ந்து, விக்கிமீடியா அறக்கட்டளை அல்லது ஒரு பயனருக்கு எதிராக சட்ட அமலாக்கம் அல்லது சாத்தியமான சட்ட நடவடிக்கைக்கான தகவலை கோரும் நிலையில், தொடர்புடைய UCoC பிரிவு சார்ந்து தொடர்புடைய சமூக தன்னார்வலர்கள் அல்லது சட்டக் கட்சிகளுக்கு உதவும் நோக்கில் விக்கிமீடியா அறக்கட்டளையின் ஆதரவு மற்றும் தகவல்களை ​"U4C குழு" கோரலாம்.

தேவைப்படும்போது, ​​ வழக்குகளைக் கையாள்வதில் விக்கிமீடியா அறக்கட்டளைக்கு "U4C குழு" உதவி புரியும். கூடுதலாக, ஒழுங்குமுறை விதிகளின் அமலாக்க நிலையைத் தொடர்ந்து கண்காணித்து மதிப்பீடு செய்து UCoC-இல் மேற்கொள்ளவேண்டிய பொருத்தமான மாற்றங்களை விக்கிமீடியா அறக்கட்டளை மற்றும் சமூகத்திற்கு U4C குழு பரிந்துரைக்கும்.

இக்குழு அமைக்கப்பட்டவுடன், அதை எத்தனை முறை கூட்ட வேண்டும் மற்றும் இக்குழுவுக்கு பரிசீலனைக்கு அனுப்பப்படும் வழக்குகளின் தன்மை ஆகியவற்றை நிரந்தரக் குழு முடிவு செய்யும். இந்தக் குழு பின்வரும் வகையான வழக்குகளைக் கருத்தில் கொள்ள நாங்கள் பரிந்துரைக்கிறோம், இருப்பினும் இறுதி முடிவு எடுக்கும் உரிமை அவர்களையே சார்ந்தது:

  • ஒரு புகாரை நிவர்த்தி செய்ய எவ்வித உள்ளூர் அமைப்பும் இல்லாத சூழல்;
  • உள்ளூர் கட்டமைப்புகள் வழக்குகளைக் கையாள முடியாத நிலை அல்லது இறுதி முடிவெடுப்பதற்காக இக் குழுவின் பரிசீலனைக்கு அனுப்பப்படவேண்டிய சூழல்;
  • அமைப்பைப் பாதிக்கும் தீவிர சிக்கல்கள்;

பொதுவில் இல்லாத தகவலுக்கான அணுகலை வழங்குவதற்காக வெளிப்படுத்துதல் மறுப்பு ஒப்பந்தத்தம் ஒன்றில் U4C இன் உறுப்பினர்கள் கையெழுத்திடுவார்கள்

முன்தடுப்பு பணிகள் (நிபந்தனைகள் 1 மற்றும் 2 UCOC)

பொது விக்கிமீடியா அறக்கட்டளை, விக்கிகள் மற்றும் UCOC இன் கீழ் உள்ள பொதுப் பயனர்களுக்கு தங்களது இருப்பை உறுதிப்படுத்துவது மற்றும் ஒழுங்குமுறைகளைத் தன்னார்வத்தோடு பின்பற்றுதலா ஊக்குவித்தல் முன்தடுப்புப் பணியின் இலக்கு ஆகும்.

தன்னார்வப் பின்பற்றுதலுக்கான UCoC பரிந்துரைகளின் மொழிபெயர்ப்பு:

UCoC இன் அசல் மற்றும் சட்டபூர்வமான பிணைப்பின் பதிப்பு ஆங்கிலத்தில் உள்ளது. விக்கிமீடியா திட்டங்களில் பயன்படுத்தப்படும் பிற மொழிகளில் இது மொழிபெயர்க்கப்பட வேண்டும். அசல் ஆங்கிலப் பதிப்பிற்கும் மொழிபெயர்ப்பிற்கும் இடையில் ஏதேனும் வேறுபாடு இருந்தால், அசல் ஆங்கிலப் பதிப்பு முன்னுரிமை பெறுகிறது.

சமூக மற்றும் அறக்கட்டளை ஊழியர்களிடையே UCoC பரிந்துரைக்கான இசைவு

ஆன்லைன் மற்றும் ஆஃப்லைன் விக்கிமீடியா திட்டங்கள் மற்றும்தளங்களில் ஊடாடும் மற்றும் பங்களிக்கும் அனைவருக்கும் UCoC பொருந்தும். பின்வரும் நபர்கள் உலக நடத்தை விதிகளை மதித்தல் மற்றும் கடைப்பிடித்தல் சார்ந்து உறுதி வழங்குதல் அவசியமானது (கையொப்பமிடப்பட்ட அறிவிப்பு அல்லது பின்னர் முடிவு செய்யப்பட உள்ள பிற வடிவங்கள் மூலம்):

  • அனைத்து விக்கிமீடியா அறக்கட்டளை ஊழியர்கள், நிர்வாகக் குழு உறுப்பினர்கள் தொடர்புள்ள ஊழியர்கள் மற்றும் ஒப்பந்ததாரர்கள்;
  • சிஸ்ஆப், அதிகாரிகள், பொறுப்பாளர், இடைமுக நிர்வாகி, செக்யூசர் போன்ற. இவை மட்டுமில்லாத மேம்பட்ட உரிமைகள் கொண்ட பயனர்கள்
  • ஒரு தனிநபர், விக்கிமீடியா அறக்கட்டளை ஊழியராக இருந்தாலும் இல்லாவிட்டாலும், கீழ்வருவன போன்ற நிகழ்வுகளில், ஆனால் அவை மட்டுமின்றி பிறவும் சேர்த்து, விக்கீமீடியா அறக்கட்டளையின் வர்த்தக முத்திரையைப் பயன்படுத்த விரும்பும் நிலையில்: விக்கிமீடியா வர்த்தக முத்திரைகளுடன் பிராண்டிங் செய்யப்பட்ட நிகழ்வுகள் (நிகழ்வின் தலைப்பில் அவற்றைச் சேர்ப்பது போன்றவை) மற்றும் விக்கிமீடியா அமைப்பு,, சமூகம், அல்லது ஒரு நிகழ்வில் அதன் திட்டங்களை (செயல் விளக்கம் வழங்குபவர் அல்லது பூத் ஆபரேட்டர் போன்றவை)பிரதிநிதிப்படுத்துதல்
  • முறையான, ஆன்-அல்லது-ஆஃப்-விக்கி ஆவணப்படுத்தப்பட்ட விக்கிமீடியா இணைப்பு கோரும் எந்த ஒரு தனிநபரும்(ஒரு ஆய்வு அமைப்பில், விக்கியில் அல்லது அதற்கு வெளியே, விக்கிமீடியா விளம்பர ஆதரவு தரும் நிகழ்வை விளம்பரப்படுத்த மற்றும்/அல்லது இணைந்து நடத்த விரும்பும் ஒரு தனிநபர் அல்லது பல தனிநபர்கள் கொண்ட குழு போன்ற, மற்றும் இவை போன்ற பிற):
  • UCoC க்கான ஒழுங்குமுறை அமலாக்க அதிகாரியின் கடமைகளைச் செய்யும் எந்த நபரும்

சமூகத்திடையே UCoC பயிற்சி/கல்விக்கான பரிந்துரைகள்: =

துன்புறுத்தல் காரணமாக ஏற்படும் பாதிப்புகளைச் சமூக உறுப்பினர்கள் அடையாளம் காணவும், அதன் மீது நடவடிக்கை எடுக்கவும் மற்றும் அவற்றைக் குறைக்கவும் தேவையான பயிற்சியை உள்ளூர் சமூகங்கள், அறக்கட்டளை மற்றும் துணை நிறுவனங்கள் உருவாக்கி செயல்படுத்த வேண்டும். குறைந்தபட்சமாக, ஒழுக்கமற்ற நடத்தை எனக் கருதப்படுவதை அடையாளம் காணுதல்வழிமுறைகள் மற்றும் கருவிகள் மற்றும் துன்புறுத்தலுக்கு இலக்காகும்போது அதை எப்படிக் கையாளவேண்டும் என்பதற்கான கையேடு ஆகியவை பயனர்களுக்கான பயிற்சியில் வழங்கப்பட வேண்டும்.

  • UCoC க்கான இணைப்பு இப்பக்கங்களில் இருக்க வேண்டும்:
    • பயனர் பதிவு பக்கங்கள்;
    • வெளியேறிய பயனர் திருத்தங்கள் மேற்கொள்ளும் நிலையில் திருத்துதலை உறுதிப்படுத்தல் பக்கங்கள்;
    • விக்கிமீடியா திட்டங்களில் உள்ள அடிக்குறிப்புகள்;
    • அங்கீகரிக்கப்பட்ட இணை நிறுவனங்கள் மற்றும் பயனர் குழுக்களின் வலைத்தளங்களில் உள்ள அடிக்குறிப்புகள்;
    • தனிப்பட்ட நிகழ்வுகளில் தெளிவாகக் காட்டப்பட வேண்டும்;
    • பொருத்தமானது எனக் கருதப்படும் வேறு இடங்கள்

எதிர் செயல்கள் சார்ந்த பணிகள் (நிபந்தனை 3 UCOC)

எதிர் செயல்கள் சார்ந்த பணியின் குறிக்கோள், புகாரளிக்கப்பட்ட வழக்குகளைத் தாக்கல் செய்தல் மற்றும் செயலாக்குவதற்கான வழிமுறைகளை வழங்குவதல், வழக்குகளைச் செயலாக்கம் செய்யத் தேவையான வளங்களை வழங்குதல், பல்வேறு வகையான மீறல்கள் மற்றும் அமலாக்க நெறிமுறைகளின் வரையறைகள், அத்துடன் புகாரளித்தல் கருவிகளுக்கான பரிந்துரைகள் மற்றும் மேல்முறையீடுகளுக்கான வழிமுறைகள் ஆகும்.

புகாரளிக்கப்பட்ட வழக்குகளைச் செயலாக்கம் மற்றும் தாக்கல் செய்வதற்கான கோட்பாடுகள்

  • துன்புறுத்தலுக்கு இலக்கானவர், அச் சம்பவத்தைக் காண நேர்ந்த ஒரு தொடர்பற்ற 3 வது தரப்பினர் UCoC மீறல்கள் குறித்துப் புகாரளிக்கலாம்.
  • பொருத்தும் மற்றும் முறையான இடங்களில், நிர்வாகத்தின் தடுப்பு நடவடிக்கைகளுக்குப் பதிலாக மத்தியஸ்தம் மூலம் வழக்குகளைத் தீர்க்க முயற்சிக்க வேண்டும்;
  • வழக்குகள் முடிந்தவரை நியாயமான காலக்கெடுவிற்குள் தீர்க்கப்பட வேண்டும்;
  • நியாயமான சூழ்நிலைகளில் வழக்குகளுக்கு முன்னுரிமை அளிக்கப்படலாம்;
  • விசாரணை தேவைப்படாத நேர்மையற்ற (ஏமாற்றுதல் நோக்கம் கொண்ட புகார் போன்ற, இவை மட்டுமல்லாத) புகார்கள் நிராகரிக்க வேண்டும் (புகார் ஐடி செல்லுபடியான நிலையில் பராமரிக்கப்படவேண்டும்);
  • எடிட்டிங் மற்றும் சீர்குலைவுகளைக் கையாள விக்கியில் இருக்கும் வழக்கமான செயல்முறைகள் மூலம் சாதாரண காழ்ப்புணர்ச்சி போன்ற, இவை மட்டுமின்றி பிறவும் கூடிய எளிய வழக்குகள், இடையூறைச் சமாளிக்க விக்கி கொண்டுள்ள பொதுவான செயல்முறைகள் மற்றும் திருத்துதல் மூலம் தீர்க்கப்பட வேண்டும்;
  • பொருந்தும் இடங்களில் வழக்குகள் அடுத்த நிலைக்கு உயர்த்தப்பட வேண்டும் அல்லது மேலனுப்பப்பட வேண்டும்;
  • UCoC -ஐ மீறிய நபரின் (ஊதியம் பெறும் ஊழியர்கள், நியமிக்கப்பட்ட அல்லது தேர்ந்தெடுக்கப்பட்ட பயனர், தன்னார்வலர், முதலியோர்) பொறுப்புகள், மீறலின் தன்மை மற்றும் அதன் தீவிரத்தன்மைக்கு ஏற்ப தபுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன;
  • மேல்முறையீடுகளுக்குச் சாத்தியம் இருக்க வேண்டும் மற்றும் மேல்முறையீடு கோரும் முடிவை வழங்கிய அமைப்பு இல்லாது வேறு ஒரு அமைப்பு இதைக் கையாள வேண்டும்.

வழக்குகளைச் செயலாக்குவதற்கான வளங்களை வழங்குதல்

விக்கிமீடியா திட்டங்களுக்கு ArbComகளின் (நடுவர் குழு) செயலெல்லை பின்வரும் பரிந்துரைக்கப்பட்ட விதிகள் மூலம் அதிகரிக்கப்பட வேண்டும்:

  • ஒரே மொழியில் உள்ள பல்வேறு வகையான திட்டங்களுக்கிடையே பகிரப்பட்ட ArbCom (நடுவர் குழு) ஆனது ஒரு பயனுள்ள UCoC திட்ட அமலாக்க அமைப்பை உருவாக்குவதற்கான ஒரு வழிமுறையாக அவற்றைக் கருத பல்வேறு திட்டங்களை ஊக்குவிக்கும் ஒரு விருப்பமாகும்;
  • பெரிய அளவிலான திட்டங்களின் குழு (இதை அளவிடுவதற்கான அளவீடுகளுக்கான தற்போதைய பரிந்துரைகள் பின்வருமாறு: செயலில் உள்ள பயனர்கள், செயலில் உள்ள சிஸ்ஆப்ஸ்கள். இந்த விவரங்களை U4C -க்கு விவரிக்க விக்கிமீடியா அறக்கட்டளைக்கு இக்குழு பரிந்துரைக்கிறது) ArbCom கொண்டிருப்பது பரிந்துரைக்கப்படுகிறது.
  • திட்டங்கள் சார்ந்து நடுநிலையான களத்தை வழங்குவதன் மூலம், அத்தகைய பகிரப்பட்ட ArbCom, விக்கிபீடியாவை மையமாகக் கொண்டதல்ல என்பதை உறுதிப்படுத்தவும், மற்றவற்றுக்கான எடுத்துக்காட்டாக "id.wikiarbcom.org";
  • பங்கேற்கும் சமூகங்களிடையே ஆதரவு உள்ள நிலையில் பல மொழிகள் அத்தகைய ArbCom-ஐ பகிர அனுமதிக்கவும்.

மீறல் வகைகள் மற்றும் அமலாக்கப் பொறிமுறை/குழுக்கள்

இந்தப் பிரிவு பல்வேறு வகையான மீறல்களின் நீண்ட விளக்கம் இல்லாத பட்டியல் (கொட்டை எழுத்துகளில் குறிப்பிடப்பட்டுள்ளவை), அதனுடன் தொடர்புடைய அமலாக்கப் பொறிமுறையை விவரிக்கிறது.

  • எந்தவொரு உடல் ரீதியான வன்முறை சார்ந்த அச்சுறுத்தல்களை உள்ளடக்கிய மீறல்கள்:
    • நம்பிக்கை மற்றும் பாதுகாப்பு மூலம் கையாளப்படுகிறது
  • வழக்கு அல்லது சட்ட அச்சுறுத்தல்கள் உள்ளடங்கிய மீறல்கள்
    • இத்தகைய வழக்குகள் உடனடியாக விக்கிமீடியா அறக்கட்டளை சட்டக் குழு அல்லது, பொருந்தினால், ​​அச்சுறுத்தல்களின் தகுதியைத் தகுந்த முறையில் மதிப்பீடு செய்யக்கூடிய மற்ற வல்லுனர்களுக்கு அனுப்பப்பட வேண்டும்,
  • தொடர்புடைய நிர்வாகம் சார்ந்த மீறல்கள்
    • AffCom மூலம் கையாளப்படுகிறது
  • UCoC ஐ பின்பற்றுவதில் முறைசார் தோல்வி
    • "U4C கமிட்டி" மூலம் கையாளப்படுகிறது;
    • நிர்வாக மட்டத்தில் UCoC இன் விக்கிகளுக்கு இடையேயான மீறல்கள் "U4C குழு" மூலம் கையாளப்படும்
  • விக்கிக்கு அப்பாற்பட்ட மீறல்கள் (நேரில் பங்கேற்கும் எடிட்-எ-தான் நிகழ்வுகள் அல்லது சமூக ஊடகத் தளங்கள், கலந்துரையாடல் பட்டியல்கள் போன்ற பிற தளங்களில் விக்கிக்கு அப்பாற்பட்ட நிகழ்வுகள் போன்றவைஆனால் இவை மட்டுமல்ல)
    • நிகழ்ச்சி அமைப்பாளர்கள் அல்லது உள்ளூர் இணை குழுக்களால் பரிந்துரைக்கப்பட்டால் "U4C குழு" மூலம் கையாளப்படுகிறது
  • விக்கிக்கு உட்பட்ட UCoC மீறல்கள்
    • விக்கிகளுக்கு இடையேயான UCoC மீறல்கள்: "U4C குழு" மூலம் நேரடியாகவோ அல்லது உலகளாவிய சிஸ்ஆப்கள் அல்லது பொறுப்பாளர்களிடமிருந்து மற்றும் ஒரே ஒரு விக்கியில் UCoC மீறலை மட்டும் கையாளும் அமைப்புகளின் மூலம் கையாளப்படுகிறது;
    • ஒரே ஒரு-விக்கியில் UCoC மீறல்கள்: தற்போதையவழிமுறைகளின்படி தனிப்பட்ட விக்கிமீடியா திட்டங்களால் கையாளப்படுகின்றன (எடுத்துக்காட்டுகள், ஆனால் இவை மட்டுமின்றி பிறவும்: காழ்ப்புணர்வு, சார்பு அல்லது தவறான தகவல் புகுத்துதல், அதிகார துஷ்பிரயோகம், தடை ஏய்ப்பு)

புகாரளித்தல் மற்றும் செயலாக்கக் கருவிக்கான பரிந்துரைகள்

UCoC மீறல்களைப் புகாரளித்தல் மற்றும் செயலாக்குவதில் தொழில்நுட்பத்தால் ஏற்படும் இடையூறுகளைக் குறைப்பதற்காக, UCoC மீறல்களுக்கான மையப்படுத்தப்பட்ட புகாரளித்தல் மற்றும் செயலாக்கக் கருவி உருவாக்கப்பட்டு பின்னர் மீடியாவிக்கி எக்ஸ்டென்ஷன் ஆக அது விக்கிமீடியா அறக்கட்டளையால் பராமரிக்கப்பட வேண்டும். புகாரளிப்பவர் UCoC மீறல் பற்றிய விவரங்களையும், தங்களைப் பற்றிய விவரங்களையும், சம்பந்தப்பட்ட மற்ற சமூக உறுப்பினர்களைப் பற்றியும் தகவல் வழங்கப் புகார் பதிவு செய்யும் கருவி அனுமதிக்க வேண்டும்.

நடவடிக்கை எடுக்கப் போதுமான தகவல்களைக் கொண்டிருக்க வேண்டும் அல்லது கையில் உள்ள வழக்கின் பயனுள்ள பதிவை அறிக்கைகள் வழங்க வேண்டும். இவை பின்வருவன போன்ற தகவல்களை உள்ளடக்கியது, ஆனால் இவை மட்டும் அல்ல:

  • புகார் அளிக்கப்பட்ட நடத்தை உலகளாவிய நடத்தை விதிகளை மீறும் முறை
  • இந்த UCoC மீறலால் யார் பாதிக்கப்பட்டனர் அல்லது என்ன பாதிப்பு ஏற்பட்டது;
  • இந்தச் சம்பவம் அல்லது சம்பவங்கள் நடந்த தேதி மற்றும் நேரம்;
  • இந்தச் சம்பவம் நடந்த இடம் (கள்);
  • அமலாக்க அமைப்புகள் இந்த விஷயத்துக்குச் சிறந்த முறையில் தீர்ப்பளிக்க உதவும் பிற தொடர்புடைய தகவல்கள்

சுலபமாகப் பயன்படுத்துதல், தனியுரிமை மற்றும் அநாமதேயம், செயலாக்கத்தில் நெகிழ்வுத்தன்மை மற்றும் வெளிப்படையான ஆவணப்படுத்துதல் முறை போன்ற கொள்கைகளின் கீழ் இக்கருவி செயல்பட வேண்டும்:

தனியுரிமை மற்றும் அநாமதேயம்
  • புகார்கள் பகிரங்கமாக (வழக்கின் அனைத்து விவரங்களும் பொது மக்களால் பார்க்கக்கூடிய வகையில்) அல்லது பல்வேறு அளவிலான தனியுரிமைகளுடன் (எடுத்துக்காட்டாக, புகார் அளிப்பவர் பெயர் பொதுமக்களுக்கு மறைக்கப்படுதல்; புகாரில் குறிப்பிடப்பட்டுள்ள நடத்தையுடன் தொடர்புடைய தனிநபர்களின் பயனர் பெயர் பொதுமக்களுக்கு மறைக்கப்படுதல்; மற்றும் பிற சாத்தியமான உதாரணங்கள்);
    • தனியுரிமையை அதிகரிப்பது தீர்வுகளைக் கட்டுப்படுத்தலாம் என்பதைத் தெளிவுபடுத்துங்கள் - எடுத்துக்காட்டாக, நிர்வாகத் தடுப்பு நடவடிக்கைகளுக்கு மாற்றாகப் பொது மத்தியஸ்தம் செய்வது தனிப்பட்ட புகாருடன் முற்றிலும் பொருந்தாது;
  • உள்நுழைவு செய்திருந்தாலும் சரி அல்லது வெளியேறி இருந்தாலும் சரி புகாரளிக்க அனுமதிக்கவேண்டும்.
செயலாக்கம்
  • UCoC மீறல்களுக்குத் தீர்வு காண பொறுப்பேற்றுள்ள அமைப்புகளின் மூலம்தனிப்பட்ட முறையில் புகார்களைச்செயல்படுத்த அனுமதித்தல்;
  • புகார்களை சம்பந்தப்பட்ட அமைப்புகளுக்கு அனுப்ப அனுமதித்தல்;
  • UCoC மீறல்களின் தற்போதைய அறிக்கைகளுடன் நேரில் அல்லது விக்கிக்கு அப்பாற்பட்டு அளிக்கப்பட்ட புகார்களை இணைக்க அனுமதிப்பது உட்பட, புகாரைப் பெறுபவர் சம்பந்தப்பட்ட முந்தைய வழக்குகளுடன் தற்போதைய வழக்குகளை இணைத்தல்;
  • பதே புகாரளித்தல் அமைப்பில் நேரிடையாக வழங்கப்பட்ட புகாரை ஒருங்கிணைக்க அல்லது ஆவணப்படுத்த வகை செய்தல்;
  • நேர்மையற்ற புகார்களைத் தவிர்க்க வழக்குகளைச் செயலாக்குபவர்களை அனுமதித்தல்;
வெளிப்படையான ஆவணங்கள்
  • பொது வழக்குகள் அல்லாதவற்றில் தனியுரிமை மற்றும் பாதுகாப்பைப் பராமரிக்கும் அதே வேளையில், அனைத்து வழக்குகளையும் தேடக்கூடிய வகையில் பகிரங்கமாகக் காப்பகப்படுத்த வகை செய்தல்;
  • பொதுவில் காட்சிப்படுத்தும் நோக்கத்திற்காக ஒவ்வொரு வழக்கிற்கும் ஒரு தனிப்பட்ட பொது அடையாளங்காட்டியை ஒதுக்குதல்;
  • குறைந்தபட்ச தரவு சேகரிப்பு மற்றும் நமது சமூக உறுப்பினர்களின் தனியுரிமைக்கு மதிப்பளித்தல் ஆகிய கொள்கைகளுக்கு மதிப்பளித்து, UCoC அமலாக்கம் பற்றிய தகவல்களை பொது மக்களுக்குத் தெரிவிக்கும் நோக்கில் இந்தக் கருவியின் பயன்பாடு பற்றிய அடிப்படை புள்ளிவிவரங்களில் வரையறுக்கப்பட்ட தரவு சேகரிப்பை அனுமதித்தல்;

சுலபமாகப் பயன்படுத்துதல், தனியுரிமை மற்றும் அநாமதேயம், செயலாக்கத்தில் நெகிழ்வுத்தன்மை மற்றும் வெளிப்படையான ஆவணப்படுத்துதல் முறை போன்ற கொள்கைகளின் கீழ் வழக்குகள் உருவாக்கப்பட்டு, கையாளப்படும் நிலையில், UCoC யை அமல்படுத்தும் தனிநபர்கள் இந்தக் கருவியைப் பயன்படுத்த தேவையில்லை மற்றும் அவர்கள் பொருத்தமானதாகக் கருதும் எந்தக் கருவிகளுடனும் தொடர்ந்து வேலை செய்யலாம்.

உள்ளூர் அமலாக்கக் கட்டமைப்புகளுக்கான பரிந்துரைகள்

மேலே கூறப்பட்டவழிமுறைகளின்படி, UCoC மீறல்களைப் பெறும் மற்றும் கையாளும் பொறுப்பை ஏற்க தற்போது செயலில் உள்ள அமலாக்கக் கட்டமைப்புகளை நாங்கள் ஊக்குவிக்கிறோம். UCoC -ஐ அமல்படுத்துதல் இயக்கம் முழுவதும் சீராக இருப்பதை உறுதி செய்வதற்காக, ஒரு தனிப்பட்ட திட்ட அளவில் UCoC மீறல்களைக் கையாளும் போது பின்வரும் கொள்கைகளைப் பயன்படுத்துவதைப் பரிந்துரைக்கிறோம்.

பயிற்சி மற்றும் ஆதரவு
  • பெறப்பட்ட புகார்கள் நியமிக்கப்பட்ட தனிநபர்களுக்கு அறிமுகமில்லாத மொழிகளில் இருக்கும் நிலையில், ​​குறிப்பாக இயந்திரமுறை மொழிபெயர்ப்பு போதுமானதாக இல்லாதாது அல்லது சிக்கலளிப்பதாக இருந்தால்; மொழிபெயர்ப்பிற்கான ஆதாரங்கள் விக்கிமீடியா அறக்கட்டளையால் வழங்கப்படுதல்;
  • உரிய செயல்முறைகளைப் பிரயோகிக்க மற்றும் நடைமுறையில் பயன்படுத்தப்படும் UCoC ஐ அறிய அதிகாரிகள் மற்றும் ஊழியர்களுக்கான பயிற்சி வழங்குதலுக்கான செயல்முறை
செயல்பாட்டில் நேர்மை
  • நிர்வாகிகள் அல்லது மற்றவர்கள் தாங்களே சர்ச்சையில் பங்கேற்கும் நிலையில், புகாரில் இருந்து தான் எப்போது விலகி இருக்க வேண்டும் அல்லது ஈடுபடாமல் இருக்க வேண்டும் என்பதைத் தீர்மானிக்க உதவும் கருத்து வேற்றுமைக் கொள்கைகள்
  • தற்போதுள்ள விக்கிமீடியா நடுவர் செயல்முறைகளுக்கு ஏற்ப, சர்ச்சையில் குறிப்பிடப்பட்டுள்ள எவரும் வழக்கிலிருந்து தங்களை விலக்கிக் கொள்ள வேண்டும்;

ஒரு குறிப்பிட்ட திட்டத்தில் அவர்கள் பாதுகாப்பாக உணர்கிறார்களா இல்லையா என்பதைப் பங்களிப்பாளர்கள் இடரின்றி வெளிப்படுத்தக்கூடிய ஒரு அமைப்பை உருவாக்க அறக்கட்டளை பணியாற்ற வேண்டுமென நாங்கள் பரிந்துரைக்கிறோம்.

உள்ளூர் நிர்வாகிகளிடையே தெளிவான தொடர்பு
  • குறிப்பாக ஒரு பிரச்சினை மிகவும் சிக்கலானதாக இருக்கும் நிலையில், (எ.கா. பலரை உள்ளடக்கியவை, அல்லது நீண்ட பக்க வரலாற்றை மதிப்பாய்வு செய்தல்) இடங்கள்,வழிமுறைகள் மற்றும் நிர்வாகிகள் மற்ற நிர்வாகிகளுடன் இணைந்து மறுபரிசீலனை மற்றும் முடிவெடுப்பதை ஆதரிக்க உதவுதல்
செயல்முறையின் வெளிப்படைத்தன்மை
  • மாறுபட்ட, பொதுவான வகையான துன்புறுத்தல்களைப் பல்வேறு விளைவுகளுடன் இணைத்துச் சித்தரிப்பது சார்ந்த ஆவணங்களைத் தற்போதுள்ள சமூகங்கள் மற்றும்/அல்லது விக்கிமீடியா அறக்கட்டளை வழங்கவேண்டும். இந்தப் பரிந்துரைகளைப் பயன்படுத்தி, பொருத்தமான தீவிரத்தன்மையைச் சுயமாகத் தீர்மானிக்க நிர்வாகிகளுக்கு அல்லது பிற அமலாக்க அமைப்புகளுக்கு இது உதவுகிறது

அதிகாரப்பூர்வமற்ற அல்லது பகுதியளவு அதிகாரப்பூர்வ இடங்களில் (எ.கா. டிஸ்கார்ட், டெலிகிராம், முதலியன) திட்டத்திற்கு வெளியே நிகழும் விக்கிமீடியா சார்ந்த உரையாடல்களுக்கு, விக்கிமீடியாவின் பயன்பாட்டு விதிமுறைகள் பொருந்தாது. அவை குறிப்பிட்ட சமூக ஊடகங்கள் அல்லது விவாத மேடையின் பயன்பாட்டு விதிமுறைகள் மற்றும் நடத்தைக் கொள்கைகளால் கட்டுப்படுத்தப்படுகின்றன. ஆயினும்கூட, இந்த நெட்வொர்க்குகள் மற்றும் தளங்களில் விக்கிமீடியா பயனர்களின் நடத்தை, UCoC மீறல் புகார்களில் கூடுதல் ஆதாரமாக ஏற்றுக்கொள்ளப்படலாம். விக்கி முரண்பாடுகளை 3-தரப்பு தளங்களுக்கு ஏற்றுமதி செய்வதற்கு ஊக்கம் அளிக்காமல் இருப்பதற்கானவழிமுறைகளை உருவாக்குமாறு திட்டத்திற்கு வெளியே உள்ள இடங்ளுக்கு நாங்கள் பரிந்துரைக்கிறோம்.

மேல் முறையீடுகளைச் செயலாக்குவதற்கான பரிந்துரைகள்

UCoC ஐ மீறல் செய்ததாகக் கண்டறியப்பட்ட நபர்களுக்கு மேல்முறையீடு செய்வதற்கான வாய்ப்பு வழங்கப்படவேண்டும். UCoC மீறல் நடந்ததா இல்லையா என்ற முடிவுக்கு எதிராக, விசாரணைகள் மேற்கொள்ளப்பட்ட விதத்தில் அல்லது UCoC மீறல் (களின்) விளைவாகத் தனிநபர்கள் மீது விதிக்கப்பட்ட தடுப்பு நடவடிக்கைகளுக்கு எதிராக மேல்முறையீடுகள் செய்யலாம். அமலாக்கத்தின் ஆரம்பக்கட்ட செயல்பாட்டில் ஈடுபடாத மூன்றாம் தரப்பினரால் மேல்முறையீடுகள் கையாளப்பட வேண்டும், மேலும் அந்த மூன்றாம் தரப்பினரைத் தேர்வு செய்தல் பின்வரும் காரணிகளின் அடிப்படையில் இருக்க வேண்டும்:

  • துவக்கத்தில் ஏற்பட்ட UCoC மீறலின் தீவிரத்தன்மை;
  • சம்பந்தப்பட்ட தனிநபர் சார்ந்து UCoC மீறல்களின் முந்தைய வரலாறு;
  • UCoC மீறலில் ஈடுபட்ட நபருக்கு எதிரான தடுப்பு நடவடிக்கைகளின் தீவிரத்தன்மை;
  • UCoC மீறலால் குறிப்பிட்ட நபர்கள், திருத்துவோர் வர்க்கம் மற்றும் ஒட்டுமொத்தமாகத் திட்டத்தின் மீது ஏற்பட்ட பாதிப்பு மற்றும் தீங்கு

மேல்முறையீட்டைக் கருத்தில் கொள்ளலாமா அல்லது அனுமதிக்கலாமா என்பதைத் தேர்ந்தெடுக்கும்போது, கூடுதல் காரணிகள் அல்லது அவற்றின் முக்கியத்துவத்தைக் கருத்தில் கொள்வது குறித்து உள்ளூர் அமலாக்க அமைப்புகள் தீர்மானிக்கலாம். திட்டம் சார்ந்த மேல்முறையீட்டு செயல்முறையின் குறிப்பிட்ட பொருந்தும் விவரங்கள் அவர்களின் சொந்த முடிவுக்கு விடப்படுகிறது. முறையீட்டை மறுபரிசீலனை செய்யும் மூன்றாம் தரப்பினர் அசல் மீறல் ஏற்பட்டமொழியை அறியாதவர் என்றால், அவர்கள் உள்ளூர் அமலாக்க அமைப்புகளிடமிருந்து மொழிபெயர்ப்பு ஆதரவைப் பெற வேண்டும்.

முன்னோக்குதல்

இந்த ஆவணத்தில் கோடிட்டுக் காட்டப்பட்டுள்ள UCoC அமலாக்க வழிமுறைகள் தொடர்ந்து மறு ஆய்வு செய்யப்படுகின்றன என்பதைக் கருத்தில் கொள்ளவும், மேலும் உலகளாவிய நடத்தை விதிமுறைகளோடு சமூகப் பின்னூட்டங்களையும் கருத்தில் கொண்டு இவை படிப்படியாக உருவளர்ச்சி பெறும் மற்றும் மதிப்பிடப்படும் இந்த வரைவு சார்ந்து சமூகம் கருத்தில் கொள்ள வேண்டிய கேள்விகளையும் இந்தக் குழு வழங்கியுள்ளது.

புகாராளித்தல் கருவி உருவாக்கப்பட்டபின் மற்றும் "U4C கமிட்டி"உடன் அதனை சோதனை செய்தல் 1 வருட நிலைமாற்ற காலத்தில் மேற்கொள்ளப்படும். ஒரு ஆண்டு முடிந்த பிறகு, அமலாக்கக் குழுவின் பணிகளை நேர்த்தியாக ஆற்ற உதவும் வகையில் சோதனையின் போது கண்டறிந்தவற்றைக் கொண்டு புகாரளிக்கும் கருவியைச் சீர் செய்யலாம்.

சமூகத்திடமிருந்து விடை பெற விரும்பும் கேள்விகள்

  • தீவிரப்படுத்துதல்: புகார்கள் எவ்வாறு கையாளப்படுகின்றன, எந்த நிகழ்வு/அமைப்பு/நடுவர் அவற்றைச் செயலாக்க வேண்டும்.
  • மேல்முறையீட்டிற்கான விதிமுறைகள் ("புகார்கள் எவ்வாறு கையாளப்படுகின்றன" என்ற முந்தைய கேள்விக்குப் பதிலளிக்கப்பட்ட பிறகு).
    • U4C கமிட்டி தனிப்பட்ட வழக்குகளைக் கையாள வேண்டுமா அல்லது மேல் முறையீடுகளைக் கையாள வேண்டுமா?
    • UCoC மீறல் குறித்த முறையீட்டை யாரால், எப்போது தொடங்க முடியும்?
    • மேல்முறையீட்டை அனுமதிக்கும் முன்னர் எவ்வகையான நடத்தை அல்லது சான்றுகளைக் கருத்தில் கொள்ளவேண்டும்?
    • மேல்முறையீடு சார்ந்த செயல்முறையை யார் கையாள வேண்டும்?
    • UCoC மீறல் சார்ந்து வழங்கப்பட்ட முடிவை எதிர்த்து மேல்முறையீடு எவருக்கு எத்தனை முறை அனுமதி வழங்கலாம்?
  • UCoC-ஐ தனிப்பட்ட விக்கிமீடியா திட்டங்கள் எவ்வாறு செயல்படுத்துகின்றன என்பதைத் தீர்மானிக்க அவற்றிற்கு எந்த அளவு அனுமதி வழங்கவேண்டும்?
  • U4C கமிட்டிக்கான தேர்வுமுறை என்ன?
    • தற்போது அமலில் உள்ள பரிந்துரைக்கப்பட்ட பயனர்களின் பட்டியலில் பின்வருபவை அடங்கும், ஆனால் இவை மட்டுமே எனக் கட்டுப்பாடு இல்லை : செக் யூஸர்கள், ஓவர்சைட்டர்கள், அதிகாரிகள், உள்ளூர் திட்டங்களின் நிர்வாகிகள், நடுவர் குழு உறுப்பினர்கள், விக்கிமீடியா அறக்கட்டளை ஊழியர்கள், இணை அமைப்புகள் மற்றும் பல)
    • "U4C" குழு தேர்வு செய்யப்படும் வரை ஒரு இடைக்காலக் குழு அமைக்கப்படுவது அவசியமா?
  • தொழில்நுட்ப நடத்தை விதி தொகுப்புக் குழு போன்ற உலகளாவிய நடத்தை விதிக் குழுக்கள், முன்மொழியப்பட்டுள்ள U4C இல் இணைக்கப்பட வேண்டுமா?

உசாத்துணைகள்

  1. Users with advanced permissions, such as, but not limited to: administrators, bureaucrats etc.
  2. பயிற்சியில் ஒரு நிலையை எட்டுவதை, பெற்ற பயிற்சியின் கீழ் மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகளுக்குத் தேவையான சமூக நம்பிக்கையை எட்டிய அளவீடாகப் பொருள் கொள்ளக் கூடாது.