1896
Appearance
ஆயிரமாண்டு: | 2-ஆம் ஆயிரமாண்டு |
---|---|
நூற்றாண்டுகள்: | |
பத்தாண்டுகள்: | |
ஆண்டுகள்: |
1896 | |
கிரெகொரியின் நாட்காட்டி | 1896 MDCCCXCVI |
திருவள்ளுவர் ஆண்டு | 1927 |
அப் ஊர்பி கொண்டிட்டா | 2649 |
அர்மீனிய நாட்காட்டி | 1345 ԹՎ ՌՅԽԵ |
சீன நாட்காட்டி | 4592-4593 |
எபிரேய நாட்காட்டி | 5655-5656 |
இந்து நாட்காட்டிகள் - விக்ரம் ஆண்டு - சக ஆண்டு - கலி யுகம் |
1951-1952 1818-1819 4997-4998 |
இரானிய நாட்காட்டி | 1274-1275 |
இசுலாமிய நாட்காட்டி | 1313 – 1314 |
சப்பானிய நாட்காட்டி | Meiji 29 (明治29年) |
வட கொரிய நாட்காட்டி | இல்லை (1912 முன்னர்) |
ரூனிக் நாட்காட்டி | 2146 |
யூலியன் நாட்காட்டி | கிரகோரியன் நாட்காட்டி 12 நாட்கள் குறைக்கப்பட்டு |
கொரிய நாட்காட்டி | 4229 |
1896 (MDCCCXCVI) ஒரு புதன்கிழமையில் ஆரம்பமான ஒரு கிரிகோரியன் நெட்டாண்டாகும், (அல்லது ஜூலியன் நாட்காட்டியில் திங்கட்கிழமையில் ஆரம்பமான ஒரு நெட்டாண்டு ஆகும்).
நிகழ்வுகள்
[தொகு]- சனவரி 1 - இலங்கையின் வடபிராந்தியத்திற்கு அரசுப் பிரதிநிதியாக இருந்த வில்லியம் துவைனம் என்பவருக்கு சேர் பட்டம் வழங்கப்பட்டது.
- சனவரி 4 - யூட்டா ஐக்கிய அமெரிக்காவின் 45வது மாநிலமாக ஏற்றுக் கொள்ளப்பட்டது.
- சனவரி 5 - வில்லெம் ரோண்ட்கன் என்பவர் எக்சு-கதிர்களைக் கண்டுபிடித்துள்ளதாக ஆஸ்திரியப் பத்திரிகை ஒன்று செய்தி வெளியிட்டது.
- சனவரி 12 - எச். எல். சிமித் என்பவர் எக்சு-கதிர் நிழல்படத்தை வெளியிட்டார்.
- சனவரி 18 - எக்சு-கதிர் இயந்திரம் முதற்தடவையாகக் காட்சிப்படுத்தப்பட்டது.
- மார்ச் - இலங்கையில் புகையிலைத் தொழிலாளர் அதிக சம்பளம் கேட்டு வேலை நிறுத்தத்தில் குதித்தனர்.
- ஏப்ரல் 6 - முதலாவது ஒலிம்பிக் விளையாட்டுக்கள் ஆரம்பமாயின.
- சூன் 12 - ஜே. டி. ஹர்ண் துடுப்பாட்டத்தில் முதற்தடவையாக 100 விக்கெட்டுகளைப் பெற்று சாதனை படைத்தார். 1931 இல் இது சார்லி பார்க்கர் என்பவரினால் சமப்படுத்தப்பட்டது.
- சூன் 15 - சப்பானில் சான்ரிக்கு என்ற இடத்தில் நிலநடுக்கம், ஆழிப்பேரலை ஏற்பட்டதில் 27,000 பேர் கொல்லப்பட்டனர்.
- சூன் 27 - ஜப்பான், சன்ரிக்கு என்னுமிடத்தில் நிலநடுக்கம் மற்றும் ஆழிப்பேரலை காரணமாக 27,000 பேர் கொல்லப்பட்டனர்.
- சூலை 2 - கீரிமலை சிவன் கோயில் குடமுழுக்கு இடம்பெற்றது.
- சூலை 7 - பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த லூமியேர சகோதரர்கள் மும்பையில் இந்தியாவிலேயே முதன்முறையாக ஆறு திரைப்படங்களை திரையிட்டனர்.
- ஆகத்து 27 - ஆங்கிலேயர்களுக்கும் சன்சிபாருக்கும் இடையில் இடம்பெற்ற போர் உலகின் மிககுறைந்த நேரத்தில் (9:02 - 9:40) நிகழ்ந்து முடிந்த போராகும்.
பிறப்புகள்
[தொகு]- பெப்ரவரி 29 - மொரார்ஜி தேசாய், இந்திய அர்சியல்வாது (இ. 1995)
- சூன் 5 - காயிதே மில்லத், இந்திய அரசியல்வாதி (இ. 1972)
- சூலை 16 - திறிகுவே இலீ, ஐநா செயலர் (இ. 1968)
- செப்டம்பர் 1 - பக்திவேதாந்த சுவாமி பிரபுபாதா, அரே கிருஷ்ணா இயக்க நிறுவனர் (இ. 1977)
- செப்டம்பர் 24 - எப். ஸ்காட் பிட்ஸ்ஜெரால்ட், அமெரிக்க எழுத்தாளர் (இ. 1940)
- அக்டோபர் 12 - எயுஜேனியோ மொண்டாலே, இலக்கியத்திற்கான நோபல் பரிசு பெற்ற இத்தாலியர் (இ. 1981)
இறப்புகள்
[தொகு]- பெப்ரவரி 20 - ஆணல்ட் சதாசிவம்பிள்ளை
- அக்டோபர் 11 - ஆன்டன் புரூக்னர், ஆத்திரிய இசையமைப்பாளர் (பி. 1824)
- டிசம்பர் 10 - ஆல்பிரட் நோபல், சுவிடிய கண்டுபிடிப்பாளர் (பி. 1833)
- டிசம்பர் 30 - ஒசே ரிசால், பிலிப்பைன்சின் தேசிய வீரர் (பி. 1861)