1881
Appearance
ஆயிரமாண்டு: | 2-ஆம் ஆயிரமாண்டு |
---|---|
நூற்றாண்டுகள்: | |
பத்தாண்டுகள்: | |
ஆண்டுகள்: |
1881 | |
கிரெகொரியின் நாட்காட்டி | 1881 MDCCCLXXXI |
திருவள்ளுவர் ஆண்டு | 1912 |
அப் ஊர்பி கொண்டிட்டா | 2634 |
அர்மீனிய நாட்காட்டி | 1330 ԹՎ ՌՅԼ |
சீன நாட்காட்டி | 4577-4578 |
எபிரேய நாட்காட்டி | 5640-5641 |
இந்து நாட்காட்டிகள் - விக்ரம் ஆண்டு - சக ஆண்டு - கலி யுகம் |
1936-1937 1803-1804 4982-4983 |
இரானிய நாட்காட்டி | 1259-1260 |
இசுலாமிய நாட்காட்டி | 1298 – 1299 |
சப்பானிய நாட்காட்டி | Meiji 14 (明治14年) |
வட கொரிய நாட்காட்டி | இல்லை (1912 முன்னர்) |
ரூனிக் நாட்காட்டி | 2131 |
யூலியன் நாட்காட்டி | கிரகோரியன் நாட்காட்டி 12 நாட்கள் குறைக்கப்பட்டு |
கொரிய நாட்காட்டி | 4214 |
1881 (MDCCCLXXXI) ஒரு சனிக்கிழமையில் ஆரம்பமான ஒரு சாதாரண கிரிகோரியன் ஆண்டு ஆகும். (அல்லது ஜூலியன் நாட்காட்டியில் வியாழக்கிழமையில் ஆரம்பமான ஒரு சாதாரண ஆண்டு ஆகும்).
நிகழ்வுகள்
[தொகு]- ஜனவரி 16-24 - ஜெனரல் ஸ்கோபெலெஃப் தலைமையில் ரஷ்யப் படைகள் ஜியோக் டேப்]] என்ற இடத்தில் துருக்மேனியர்களைத் தோற்கடித்தனர்.
- ஜனவரி 10 - யாழ்ப்பாணம் சம்பத்தரிசியார் கல்லூரி திறக்கப்பட்டது.
- பெப்ரவரி 17 - இலங்கையில் இரண்டாவது மக்கள் தொகைக் கணக்கெடுப்பு நடத்தப்பட்டது. நாட்டின் மொத்தத் தொகை 2,759,738, வட மாகாணத்தில் 302, 500, யாழ்ப்பாணத்தில் 40, 057 ஆகக் கணக்கெடுகப்பட்டது.
- மார்ச் 13 - ரஷ்யாவின் இரண்டாம் அலெக்சாண்டர் மன்னன் அவனது அரண்மனைக்கு வெளியே குண்டுவீச்சுக்கு இலக்காகிக் கொல்லப்பட்டான். அவனது மகன் மூன்றாம் அலெக்சாண்டர் மன்னன் ஆனான்.
- மே 12 - வடக்கு ஆபிரிக்காவில் துனீசியா நாடு பிரான்சின் நேரடி ஆட்சியின் கீழ் வந்தது.
- சூலை 2 - ஐக்கிய அமெரிக்க சனாதிபதி ஜேம்ஸ் கார்ஃபீல்ட் Charles Julius Guiteau என்பவனால் சுடப்பட்டுப் படுகாயமடைந்தார்.
- ஆகத்து 3 - போவர்களுக்கும் பிரித்தானியாவுக்கும் இடையே போர் முடிவுக்கு வந்தது.
- ஆகத்து 27 - புளோரிடாவில் இடம்பெற்ற சூறாவளியினால் 700 பேர் வரையில் இறந்தனர்.
- செப்டம்பர் 5 - மிச்சிகனில் இடம்பெற்ற தீயினால் மில்லியன் ஏக்கர்கள் வரை சேதமடைந்தது. 282 பேர் கொல்லப்பட்டனர்.
- செப்டம்பர் 19 - ஐக்கிய அமெரிக்க சனாதிபதி ஜேம்ஸ் கார்ஃபீல்ட் இறந்தார்.
- டிசம்பர் 8 - ஆஸ்திரியாவில் வியென்னா நகரில் றிங் தியேட்டரில் இடம்பெற்ற தீயினால் 620 பேர் கொல்லப்பட்டனர்.
- டிசம்பர் 31 - இலங்கை முழுவதும் கடுமையான நிலநடுக்கம் உணரப்பட்டது.
நாள் அறியப்படாதவை
[தொகு]- பாளி நூற்சபை நிறுவப்பட்டது.