1066
Appearance
ஆயிரமாண்டு: | 2-ஆம் ஆயிரமாண்டு |
---|---|
நூற்றாண்டுகள்: | |
பத்தாண்டுகள்: | |
ஆண்டுகள்: |
1066 | |
கிரெகொரியின் நாட்காட்டி | 1066 MLXVI |
திருவள்ளுவர் ஆண்டு | 1097 |
அப் ஊர்பி கொண்டிட்டா | 1819 |
அர்மீனிய நாட்காட்டி | 515 ԹՎ ՇԺԵ |
சீன நாட்காட்டி | 3762-3763 |
எபிரேய நாட்காட்டி | 4825-4826 |
இந்து நாட்காட்டிகள் - விக்ரம் ஆண்டு - சக ஆண்டு - கலி யுகம் |
1121-1122 988-989 4167-4168 |
இரானிய நாட்காட்டி | 444-445 |
இசுலாமிய நாட்காட்டி | 458 – 459 |
சப்பானிய நாட்காட்டி | |
வட கொரிய நாட்காட்டி | இல்லை (1912 முன்னர்) |
ரூனிக் நாட்காட்டி | 1316 |
யூலியன் நாட்காட்டி | 1066 MLXVI |
கொரிய நாட்காட்டி | 3399 |
1066 (MLXVI) பழைய யூலியன் நாட்காட்டியில் ஒரு ஞாயிற்றுக்கிழமையில் ஆரம்பமான ஒரு சாதாரண ஆண்டாகும்.
நிகழ்வுகள்
[தொகு]இங்கிலாந்து
[தொகு]- சனவரி 5 – 24 ஆண்டுகள் ஆட்சியில் இருந்த எட்வர்டு மன்னர் இலண்டனில் இறந்தார். அரோல்ட் காட்வின்சன் இங்கிலாந்தின் மன்னராக அறிவிக்கப்பட்டார்.
- சனவரி 6 – அரோல்ட் காட்வின்சன், இரண்டாம் அரோல்டு என்ற பெயரில் புதிய வெஸ்ட்மின்ஸ்டர் மடத்தில் இங்கிலாந்தின் மன்னராக முடிசூடினார்.[1]
- மார்ச் 20 – ஹேலியின் வால்வெள்ளி சுற்றுப்பாதையை அடைந்தது. வால்வெள்ளி காணப்பட்டமை பேயூ திரைக்கம்பளத்தில் பதிவானது.
- செப்டம்பர் 12 – வில்லியம் 700 போர்க்கப்பல்கள் அடங்கிய தாக்குதல் படையைத் தயாரித்தார்.
- செப்டம்பர் 18 – நோர்வே மன்னர் அரால்டு ஆர்டிராடா இசுக்கார்பரோ கரையை அடைந்து இங்கிலாந்தை முற்றுகையை ஆரம்பித்தார்.
- செப்டம்பர் 25 – இசுட்டாம்போர்ட் பால சமரில் இரண்டாம் அரோல்டு மன்னர் நோர்வே படைகளைத் தோற்கடித்தார்.
- செப்டம்பர் 27 – நோர்மானியர் இங்கிலாந்தைக் கைப்பற்றுதல்: வில்லியமும் அவனது படையினரும் சோம் ஆற்றின் வாயிலில் இருந்து புறப்பட்டனர்.
- செப்டம்பர் 28 – நோர்மானியர் இங்கிலாந்தைக் கைப்பற்றுதல்: வில்லியம் பெவென்சி என்ற ஆங்கிலேயக் கரையில் தரையிறங்கி, ஏசுட்டிங்க்சு நோக்கி நகர்ந்தான்.[2]
- அக்டோபர் 14 – ஹேஸ்டிங்ஸ் சண்டை: வில்லியம், இரண்டாம் அரோல்டும் ஏசுட்டிங்சு சமரில் மோதினர். இச்சமரில் இரண்டாம் அரோல்டு கொல்லப்பட்டார்.
- அக்டோபர் 15 – எட்கார் ஏத்தலிங் இங்கிலாந்தின் மன்னராக அறிவிக்கப்பட்டார், ஆனாலும் அவர் முடிசூடவில்லை. விரைவில் தனது ஆட்சியை வில்லியத்திடம் ஒப்படைத்தார்.
- திசம்பர் – வில்லியம் இறுதியில் இலண்டனை அடைந்தார்.
- டிசம்பர் 25 – வில்லியம் இங்கிலாந்தின் மன்னராக முதலாம் வில்லியம் என்ற பெயரில் முடிசூடினார்.
ஐரோப்பா
[தொகு]- மேற்கு சிலாவ் படைகளால் எடெபி நகரம் சூறையாடப்பட்டு எரியூட்டப்பட்டது.[3]
- செனோவாக் குடியரசு, பீசாக் குடியரசு மீது கடற்படைத் தாக்குதலை ஆரம்பித்தது.[4]
- சுவீடன் மன்னர் இசுட்டென்கில் 6 ஆண்டுகள் ஆட்சியின் பின்னர் இறந்தார்.
- இரண்டாம் மாக்னசு நோர்வே மன்னராக முடிசூடினார். இவர் மேற்கு, வடக்கு நோர்வேக்களை ஒன்றிணைத்தார்.
- டிசம்பர் 30 – முசுலிம் கும்பல் ஒன்று கிரனாதாவில் அரச அரண்மனையைத் தாக்கி, பெருமாளவு யூதக் குடிமக்களைக் கொலை செய்தது.[5]
ஆசியா
[தொகு]- இலங்கையில் சோழர் ஆட்சி (993–1077): முதலாம் விஜயபாகு மன்னர் சோழர்களின் இலங்கைத் தலைநகரமான பொலன்னறுவை இராச்சியம் மீது முதலாவது தாக்குதலைத் தொடுத்தார்.
- கெமர் பேரரசு: இரண்டாம் உதயாதித்தியவர்மனின் ஆட்சி முடிவடைந்து சதாசிவபாதன் என்ற மூன்றாம் ஹர்சவர்மனின் ஆட்சி ஆரம்பமானது.
பிறப்புகள்
[தொகு]இறப்புகள்
[தொகு]- சனவரி 5 – எட்வர்டு, இங்கிலாந்து மன்னர்
- ஸ்ரீபதி, இந்திய வானியலாளர், கணிதவியலாளர் (பி. 1019)
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Westminster Abbey Official site - Coronations"
- ↑ Christopher Gravett (1992). Osprey: Hastings: The Fall of Saxon England, p. 50–51. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 1-85532-164-5.
- ↑ Nancy Marie Brown. "The Far Traveler: Voyages of a Viking Woman". pp. 95. https://books.google.com/books?id=aUE9ZFNeCBsC&pg=PT110. பார்த்த நாள்: 6 March 2016.
- ↑ Benvenuti, Gino (1985). Le Repubbliche Marinare. Amalfi, Pisa, Genova e Venezia. Rome: Newton & Compton Editori. p. 44. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 88-8289-529-7.
- ↑ Norman Roth (1994). Jews, Visigoths, and Muslims in Medieval Spain: Cooperation and Conflict. Netherlands: E.J. Brill, p. 110. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 90-04-09971-9.