உள்ளடக்கத்துக்குச் செல்

பஞ்சாப் பகுதி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பஞ்சாப்
پنجاب
ਪੰਜਾਬ
பிரதேசம்
புவியியல்
புவியியல்
நாடுகள்பாக்கித்தான், இந்தியா
மக்கட்தொகையியல்
 • இனக் குழுபஞ்சாபி மக்கள்
பெரிய நகரங்கள்லாகூர், இராவல்பிண்டி, இஸ்லாமாபாத், பைசலாபாத்

பஞ்சாப் (பஞ்சாபி: ਪੰਜਾਬ, panj-āb, "ஐந்து ஆறுகள்") பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணம் மற்றும் இந்தியாவின் பஞ்சாப், இமாச்சல் பிரதேசம், சண்டிகர், தில்லி ஆகிய பகுதிகளையும் உள்ளடக்கிய ஒரு புவியியல் பகுதி. சிந்து ஆற்றின் கிளை ஆறுகளான ஜீலம், செனாப், ராவி, சத்லஜ், மற்றும் பியாஸ் ஆகிய “ஐந்து நதிகள்” பாய்வதால் இப்பகுதி பஞ்சாப் என்று அழைக்கப்படுகிறது. ஜீலம் தான் இவற்றில் மிகப் பெரியது. பஞ்சாப் ஒரு நெடிய வரலாற்றையும் செறிந்த பண்பாட்டு மரபையும் கொண்டுள்ளது. பஞ்சாப் மக்கள் பஞ்சாபிகளென அழைக்கப்படுகின்றனர், அவர்களது மொழி பஞ்சாபி. பஞ்சாப் பிராந்தியத்தில் முக்கிய மதங்களாக இஸ்லாம், சீக்கியம் மற்றும் இந்து மதம் உள்ளன.

பஞ்சாப் (பிரித்தானிய இந்தியா), 1909

மகா பஞ்சாப் என்று இப்போது அறியப்படும் பகுதி ஒரு காலத்தில் மேற்கு பாகிஸ்தான் மற்றும் வடமேற்கு இந்தியாவின் பரந்த பிராந்தியங்களை அடக்கியதாய் இருந்தது. பஞ்சாபின் பகுதியின் 58% பாகிஸ்தானிலும் மீதமுள்ள 42% இந்திய குடியரசிலும் உள்ளது. இந்தோ-ஆரிய மொழி பேசும் மக்களால் நிரம்பியிருக்கும் இந்தப் பகுதியில் பல்வேறு மத மற்றும் இன மக்கள் வசிக்கின்றனர், இவர்களில் சீக்கியர்கள், சமணர்கள், புத்த மதத்தினர், கிரேக்கர்கள், பெர்சியர்கள், அரபு நாட்டினர், துருக்கியர்கள், முகலாயர்கள், ஆப்கானியர்கள், பலோசிகள், இந்துக்கள் மற்றும் பிரிட்டிஷார் அடக்கம். 1947 ஆம் ஆண்டில், பிரித்தானியாவின் இந்தியப் பேரரசுவிலிருந்து விடுதலை பெற்ற இந்தியா-பாகிஸ்தான் நாடுகளிடையே பஞ்சாப் பிரிவினை செய்யப்பட்டது. பஞ்சாபின் ஐந்து ஆறுகளுள் நான்கு பாகிஸ்தானுக்கும் எஞ்சிய ஒரு நதி இந்தியாவிற்கும் ஒதுக்கப்பட்டன.

பஞ்சாபின் பாகிஸ்தான் பகுதியான மேற்கு பஞ்சாப் 205,344 சதுர கிலோமீட்டர் பரப்பளவு கொண்டுள்ளது. வட-மேற்கு எல்லை மாகாணத்தின் ஹசரா பிராந்தியம், இஸ்லாமாபாத், மற்றும் ஆசாத் காஷ்மீர் ஆகியவற்றை உள்ளடக்கியுள்ளது. இந்தியக் குடியரசின் பஞ்சாப் பகுதி பஞ்சாப், அரியானா, இமாச்சலப் பிரதேசம் மற்றும் டெல்லி ஆகிய மாநிலங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது. இந்திய பஞ்சாப் மாநிலம் 50,362 சதுர கிலோமீட்டர்கள் அளவுடையது. பாகிஸ்தானிய பஞ்சாப் பகுதியில் 86,084,000 பேரும், இந்திய பஞ்சாப் பகுதியில் 24,289,296 பேரும் வாழ்கின்றனர். பிரிக்கப்படாத பஞ்சாப் பகுதியின் தலைநகராக லாகூர் இருந்தது, இப்போது இந்நகரம் மேற்கு பஞ்சாபின் தலைநகராக எல்லைக் கோட்டிற்கு மிக அருகில் அமைந்துள்ளது. இந்திய பஞ்சாபின் தலைநகராகச் சண்டிகார் உள்ளது. பாகிஸ்தான் பஞ்சாப் பகுதியில் தோராயமாக 65 % மக்கள் பஞ்சாபி மொழி பேசுகின்றனர். இன்னொரு 25% பேர் பஞ்சாபியிலிருந்து பிரிந்த வகைகளைப் பேசுகின்றனர். இந்திய பஞ்சாப் பகுதியில் சுமார் 92.2% மக்களால் பஞ்சாபி பேசப்படுகிறது.[1] பாகிஸ்தானின் பஞ்சாப் பகுதி ஷாமுகி எழுத்து வடிவத்தைப் பயன்படுத்துகிறது. இந்திய பஞ்சாப் குர்முகி எழுத்து வடிவத்தைப் பயன்படுத்துகிறது.

மொழி

[தொகு]

இந்தப் பிராந்தியத்தின் மொழி பஞ்சாபி. இந்தியாவின் பஞ்சாபில் பஞ்சாபியின் அதிகாரப்பூர்வ எழுத்துவடிவம் குர்முகி (குருவின் வாய்மொழி) என்று அழைக்கப்படுகிறது. அண்டையிலிருக்கும் பாகிஸ்தான் மாநிலமான பஞ்சாபிலோ இன்னமும் ஷாமுகி எழுத்து வடிவம் தான் பின்பற்றப்படுகிறது; இது பெர்சிய-அரபி எழுத்து வடிவத்தை அடிப்படையாகக் கொண்டதாகும். இருபதாம் நூற்றாண்டின் ஆரம்ப காலம் வரை பஞ்சாப் பகுதியின் அதிகாரப்பூர்வ மொழியாக இருந்தது பெர்சிய-அரபி எழுத்து வடிவத்தைப் பயன்படுத்தி எழுதப்பட்ட உருது.[2]

வரலாறு

[தொகு]
லாகூர் கோட்டையின் ஒரு பகுதி முகலாய சக்கரவர்த்தி அக்பரால் கட்டப்பட்டது.
லாகூரில் உள்ள அரசு கல்லூரி

ஏராளமான படையெடுப்புகளின் விளைவாக, பஞ்சாபின் பண்பாட்டு மரபில் பல்வேறு இனங்களும் மதங்களும் கலந்துள்ளன. வரலாற்றுக்கு முந்தைய காலத்தில், தெற்காசியாவின் மிகத் தொன்மையான கலாச்சாரங்களில் ஒன்றான ஹரப்பா நாகரிகம் பஞ்சாப் பகுதியில் அமைந்திருந்தது.

மகாபாரதத்தில் விவரிக்கப்பட்ட குருச்சேத்திரப் போரில் பஞ்சாப் பகுதிகளின் மன்னர்களான சிந்தியர்கள், சௌவீரர்கள், பாக்லீகர்கள், காந்தாரர்கள், காம்போஜர்கள், திரிகர்த்தர்கள், பௌரவர்கள், யௌதேயாக்கள், மற்றும் பிறர் கௌரவர்களுக்கு ஆதரவாகப் பங்கேற்றனர்.[3] டாக்டர் ஃபௌஜா சிங் மற்றும் டாக்டர் எல்.எம்.ஜோஷி கூற்றுப்படி: "“கம்போஜாக்கள், தரதாக்கள், கேகயர்கள், பௌரவர், யௌதேயாக்கள், மாளவர்கள், சைந்தவர்கள் மற்றும் குருக்கள் ஆகியோர் பண்டைய கால பஞ்சாபின் தீரமிகு பாரம்பரியம் மற்றும் ஒட்டுமொத்த கலாச்சாரம் உருவாவதில் பங்கேற்றுள்ளனர்" [4].

கிமு 326 ஆம் ஆண்டில், மகா அலெக்சாண்டர் வடக்கிலிருந்து பஞ்சாப் மீது படையெடுத்து அதனைத் தனது சாம்ராஜ்யத்துடன் இணைத்துக் கொண்டார். அவரது படைகள் வட மேற்கு பாகிஸ்தானின் இந்துகுஷ் கணவாய் வழியாக அந்தப் பிராந்தியத்திற்குள் நுழைந்திருந்தன, அத்துடன் அவரது ஆட்சி வட கிழக்கு பாகிஸ்தானின் சகலா நகரம் வரை (இன்றைய சியால்கோட்) பரவியிருந்தது. கிமு 305 ஆம் ஆண்டில், இந்தப் பகுதி மௌரியப் பேரரசு மற்றும் கிரெகோ-பாக்ட்ரியன் வம்சத்தினரால் ஆளப்பட்டு வந்தது. இந்தப் பகுதியில் அடுத்தடுத்து வந்த ஆட்சியாளர்களில், சந்திரகுப்த மௌரியரும், மகா அசோகரும் தான் மிகப் புகழ்பெற்றவர்களாய் தனித்தோங்கி நிற்கின்றனர். சுமார் கிபி 12 ஆம் ஆண்டு வாக்கில் யுவேசி மற்றும் ஸ்கைதிய மக்களின் பல்வேறு படையெடுப்புகளுக்குப் பிறகு கிரேக்க ஆட்சி முடிவுக்கு வந்தது.

யுவேசிகள் குஷான் பேரரசை உருவாக்கினர், இது சுமார் கிபி 230 காலம் வரை இப்பகுதியில் நீடித்தது. இதன் பின் குஷான்களின் வீழ்ச்சியின் மூலம் இந்தோ-சசானிதிய பேரரசு உருவானது. இது கிபி மூன்றாம் மற்றும் நான்காம் நூற்றாண்டுகளின் சமயத்தில் வடமேற்கு இந்திய துணைக்கண்டத்தில் தங்களது ஆட்சியை நிலைநாட்டிய சசானித் பெர்சியர்களின் ஒரு பிரிவாகும். அதேபோல் அவர்கள் கிபி 410 இல் இந்தோ-ஹெப்தலைட்டுகளின் (ஹூனா மக்கள்) படையெடுப்பால் இடம்பெயர்க்கப்பட்டனர். கிபி 565 இல் சசானித்துகள் ஹெப்தலைட்டுகளை அழித்து மீண்டும் நிலைநாட்டினர். ஆனால் 600களின் மத்தியில் அரபு தாக்குதல்களால் அவர்களின் ஆட்சி வீழ்ந்தது. பின்னர் பல நூற்றாண்டுகளாகத் தொடர்ந்த படையெடுப்புகளால் இப்பகுதி முதலில் டெல்லி சுல்தானகம் பின் முகலாயப் பேரரசின் கட்டுப்பாட்டில் வந்தது.

பஞ்சாபில் மொகலாயர் ஆட்சி நிறுவப்பட்ட பின்னர் தொடர்ந்து மோதல், குழப்பம் மற்றும் அரசியல் கவிழ்ப்பு சூழ்நிலை நிலவியது. ஆயினும், முகலாயரின் வளமையால், வளர்ச்சியும் ஒப்புமையளவில் அமைதியுற்ற நிலையும் நிறுவப்பட்டது, குறிப்பாக ஜஹாங்கீரின் ஆட்சியின் கீழ் குரு நானக்கின் (1469-1539) எழுச்சிக்கும் இந்தக் காலகட்டம் குறிப்பிடத்தக்கது, பஞ்சாபின் வரலாறு மற்றும் கலாச்சாரத்தில் ஒரு நீடித்த தாக்கத்தை ஏற்படுத்திய ஒரு சக்திவாய்ந்த மக்கள் இயக்கத்தை இவர் நிறுவினார். குரு நானக்கின் (1469-1539) எழுச்சிக்கும் இந்தக் காலகட்டம் குறிப்பிடத்தக்கது, பஞ்சாபின் வரலாறு மற்றும் கலாச்சாரத்தில் ஒரு நீடித்த தாக்கத்தை ஏற்படுத்திய ஒரு சக்திவாய்ந்த மக்கள் இயக்கத்தை இவர் நிறுவினார். செய்குபுரா மாவட்டத்தில் பிறந்த இவர், மனிதகுலம் மரபுவழியான மதங்களாகவும் சாதிகளாகவும் துண்டு துண்டுகளாய் பிரிந்து கிடப்பதை நிராகரித்து மனித குலத்தின் ஒருமையை, கடவுளின் ஒருமையை போதித்தார், இவ்வாறாக மனிதரின் சர்வ வியாபக தன்மையைத் தழுவிய ஒரு புதிய ஒழுங்கை உருவாக்கும் நோக்கத்தை இவர் கொண்டிருந்தார். இந்தப் புதிய தத்துவமே சீக்கிய நம்பிக்கையின் அடிப்படையாகச் சேவை செய்கிறது.

1713 ஆம் ஆண்டில், பன்டா சிங் பகதூர் பஞ்சாபில் ஒரு பன்முக கலாச்சார அரசை நிறுவ விரும்பினார். இதற்காக முகலாயர்களுடன் இவர் தளர்ச்சியின்றி போராடினார். அவரது அரசு தனது வீழ்ச்சிக்கு முன்னதாக ஒரு வருடத்திற்கும் கீழ் தான் இருந்தது. பல வருடங்களுக்குப் பின், அவர் சிறைப்பிடிக்கப்பட்டு தூக்கிலிடப்பட்டார்.

அப்தாலியின் இந்தியப் படையெடுப்பு மராத்திய செல்வாக்கை பலவீனப்படுத்தியது, ஆனால் அவர் சீக்கியர்களைத் தோற்கடிக்க முடியவில்லை. 1748 இல் அம்ரித்சரில் தல் கல்ஸா உருவாகிய போது, பஞ்சாப் 36 பகுதிகளாகவும் 12 தனித்தனியான சீக்கிய பிரின்சிபாலிட்டிகளாகவும் பிரிக்கப்பட்டிருந்தது. இந்த புள்ளியிலிருந்து பஞ்சாபின் சீக்கியர் சாம்ராஜ்ய துவக்கங்கள் எழுந்தன. மற்ற 14 பிரித்தானிய ஆட்சியை ஏற்றுக் கொண்டன. மகாராஜா ரஞ்சித் சிங் இறந்து பத்தாண்டுகளின் பின், இந்தப் பேரரசு உடைந்தது, அதன் பின் சில டோக்ரா ராஜாக்களின் உதவியுடன் பஞ்சாபை பிரிட்டிஷாரால் தோற்கடிக்க முடிந்தது அந்தச் சமயத்தில் பஞ்சாபின் சீக்கிய மாநிலம் மட்டும் தான் பிரித்தானிய ஆட்சியின் கீழ் வராதிருந்த ஒரே மாநிலமாக இருந்தது. அதன்பின், இறுதியில் அது பிரிட்டிஷாரால் வெற்றி காணப்பட்டது.

இந்தச் சீக்கிய சாம்ராஜ்யம் தான் பிரிட்டிஷாருக்கு எதிராகக் கடைசியாய் வீழ்ந்தது, அத்துடன் அண்டையப் பேரரசுகளுடன் இருந்த குழப்பங்களுக்கு இது பலியானது. பல வழிகளில் பேரரசர் ரஞ்சித் சிங்கின் கீழிருந்த பஞ்சாப் தான் தெற்காசியாவில் பிரித்தானிய சாம்ராஜ்யத்தின் வலிமைக்கு எதிர்த்து நிற்கும் திறன் பெற்றிருக்கக் கூடிய ஒரே பிராந்தியமாக இருந்தது. பிரித்தானிய பேரரசு பஞ்சாபில் அரசியல், கலாச்சார, தத்துவ மற்றும் இலக்கியரீதியான தாக்கங்களைப் பஞ்சாபில் ஏற்படுத்தியது, ஒரு புதிய கல்வி முறையை நிறுவியதும் இதில் அடக்கம். விடுதலைப் போராட்ட காலத்தில், பல பஞ்சாபியர் மிகவும் முதன்மையான பங்களிப்புகளையாற்றினர். அஜித் சிங் சாந்து, பகத் சிங், உத்தம் சிங், கர்தார் சிங் சரபா, பாய் பரமானந்த், முகமது இக்பால், சௌதாரி ரஹ்மத் அலி, இலாம் தின் ஷாகித், லஜ்பத் ராய் முதலியோர் இதில் அடங்குவர்.

1857 ஆம் ஆண்டில் பிரிட்டிஷாருக்கு எதிராய் நிகழ்ந்த சிப்பாய் கலகத்திலும் பஞ்சாபியர்கள் ஒரு முக்கிய பாத்திரத்தை ஏற்றனர். ஜீலம் மற்றும் லூதியானா போன்ற நகரங்கள் பிரித்தானிய அரசாங்கத்திற்கு எதிரான கிளர்ச்சி மையங்களாகச் சேவையாற்றின. 1947 ஆம் ஆண்டின் பிரிவினையின் போது, இந்த மாகாணம் கிழக்கு மற்றும் மேற்கு பஞ்சாப் எனப் பிரிக்கப்பட்டது. கிழக்கு பஞ்சாப் இந்திய பகுதியானது, மேற்கு பஞ்சாப் பாகிஸ்தான் பகுதியாக ஆனது. பிரித்தானிய ஆட்சியின் முடிவினை அடுத்து நடந்த உள்நாட்டு யுத்த பாதிப்பில் பஞ்சாப் முன்னணியில் இருந்தது, பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை நூறாயிரக்கணக்கானோர் அல்லது இன்னமும் அதிகமென மதிப்பிடப்பட்டது.

மக்கள் தொகையியல்

[தொகு]

நவீன பஞ்சாபின் இன முன்னோடிகளில் இந்தோ ஆரியர்கள், மற்றும் அந்தப் பிராந்தியத்தில் குடியேறிய சில இந்தோ சிதியர்கள் மற்றும் இந்தோ-பார்தியர்கள், இந்தோ கிரேக்கர்கள் ஆகியோர் அடங்குவர். இந்த மக்களின் வம்சாவளிகள் தான் பஞ்சாபிகள் எனப் பொதுவாக நம்பப்படுகிறது. இஸ்லாம் இப்பகுதியில் பரவத் தொடங்கிய பின்னர், பெர்சியா, துருக்கி, ஆப்கானிஸ்தான் மற்றும் மத்திய ஆசியாவிலிருந்து குடியேறியவர்களும் பஞ்சாபி சமூகத்தில் ஒன்றிணைந்தார்கள், இவர்களிலிருந்து தான் பாகிஸ்தான் பஞ்சாபிகள் வம்சாவளி கொண்டிருக்கின்றனர். ஆயினும் பஞ்சாபின் பெரும்பான்மையினராக இன்னும் பூர்வீக ஜாட்கள், ராஜபுத்திரர்கள் மற்றும் வடக்கு பஞ்சாபில் உள்ள காத்ரிக்கள் மற்றும் குஜ்ஜார்கள் ஆகியோர் தான் உள்ளனர். ஐந்து முக்கிய நதிகளின் நான்கில் வளம் கொழிக்கும் பிராந்தியங்களில் வசிக்கும் பாகிஸ்தானிய பஞ்சாபியரின் பரந்த பெரும்பான்மை மக்கள் சமய நம்பிக்கை அடிப்படையில் முஸ்லீம்களாக இருக்கின்றனர், ஆனாலும் கிறிஸ்தவர்கள், புத்த மதத்தினர், சொராஸ்திரர்கள், அகமதிய முஸ்லீம்கள் மற்றும் சீக்கியர்கள் போன்ற ஏராளமான சிறுபான்மை மதத்தினரும் இங்கு உள்ளனர்.

15 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் ஒரு சீர்திருத்தவாத மதமாகத் தோன்றிய சீக்கிய மதம், இந்திய பஞ்சாப் பகுதியில் பின்பற்றப்படும் முக்கிய மதமாகும்.இது பஞ்சாபில் தான் உருவானது. இந்திய பஞ்சாப் பகுதியில் 60% மக்கள்தொகையினர் சீக்கியர்கள், 40% பேர் இந்துக்கள், எஞ்சியோர் சமணர்கள், கிறிஸ்தவர்கள், முஸ்லீம்கள் அல்லது புத்த மதத்தினர். சீக்கியர்களின் புனித நகரான அம்ரித்சர் இங்கு அமைந்துள்ளது. பிரித்தானிய இந்தியாவின் பஞ்சாப் மாகாணத்தில் அடங்கிய பகுதிகளாய் இருந்த அரியானா மற்றும் இமாச்சலப் பிரதேச மாநிலங்களில் இந்து மக்கள் பெரும்பான்மையினராக உள்ளனர். இந்திய பஞ்சாபிகள் குர்முகி எழுத்து வடிவத்தில் எழுதப்பட்ட பஞ்சாபி மொழி பேசுகிறார்கள். பாகிஸ்தானில் உள்ள பஞ்சாப் மக்கள்தொகையில் 90%க்கும் அதிகமானோர் இஸ்லாமிய மதத்தைச் சேர்ந்தவர்களாவர், இவர்களையடுத்து சுமார் 3-5% வரையான கிறிஸ்தவ சிறுபான்மையினர் உள்ளனர். மற்றவர்களில் சிறு எண்ணிக்கையிலான சீக்கியர்கள், ஸோராஸ்ட்ரியர்கள் மற்றும் இந்து சிறுபான்மையினரும் உள்ளனர். பாகிஸ்தான் ஷாமுகி எழுத்து வடிவத்தைப் பயன்படுத்துகிறது. இது பாரசீக எழுத்து வடிவத்திற்கு நெருக்கமானதாகும், பாரசீக மொழியிலிருந்து கடன் பெற்ற ஏராளமான வார்த்தைகளை அடக்கியுள்ளது. ஒட்டுமொத்தமாக, பாகிஸ்தானில் 76 மில்லியன் பஞ்சாபிகளும், இந்தியாவில் 29 மில்லியன் பஞ்சாபிகளும் உள்ளனர்.

பொருளாதாரம்

[தொகு]
பாட்டியாலாவில் இருந்தான புல்காரி எம்பிராய்டரி

வரலாற்று பஞ்சாப் பகுதி தான் பூமியில் மிகவும் நிலவளமை கொண்ட பகுதிகளில் ஒன்றாகக் கருதப்படுகிறது. கிழக்கு மற்றும் மேற்கு பஞ்சாப் இரண்டுமே முறையே இந்தியா மற்றும் பாகிஸ்தானின் உணவு உற்பத்தியில் பெரும் பங்களிப்பைக் கொண்டிருக்கின்றன. பாகிஸ்தான் பஞ்சாப் பகுதியின் விவசாய விளைச்சல் பாகிஸ்தானின் மொத்த உள்நாட்டு உற்பத்திக்குக் குறிப்பிடத்தக்க பங்களிப்பை அளிக்கிறது. இந்தப் பகுதி கோதுமை வளர்ப்புக்கும் முக்கியமானதாய் திகழ்கிறது. தவிர, அரிசி, பருத்தி, கரும்பு, பழங்கள் மற்றும் காய்கறிகள் ஆகியவையும் முக்கிய பயிர்களாக இருக்கின்றன. இந்தியா மற்றும் பாகிஸ்தான் நாடுகளின் பஞ்சாப் பகுதிகள் முறையே அந்நாடுகளின் மிகச் சிறந்த உள்கட்டமைப்பைக் கொண்டிருப்பதாகக் கருதப்படுகின்றன. இந்திய பஞ்சாப் பகுதி இந்தியாவின் செல்வமிக்க மாநிலங்களில் இரண்டாவது இடத்தைப் பிடித்திருப்பதாக மதிப்பிடப்பட்டுள்ளது. (முதலிடம் மகாராஷ்டிரா, ஹரியானா நான்காவது இடம்)[5][6] பாகிஸ்தானிய பஞ்சாப் பாகிஸ்தானின் உணவு தானிய உற்பத்தியில் 68% பங்களிக்கிறது.[7] பாகிஸ்தானின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் இதன் பங்கு வரலாற்றுரீதியாக 51.8% முதல் 54.7% வரை இருந்திருக்கிறது.[8][9][10]

”இந்தியாவின் உணவுக் களஞ்சியம்” அல்லது “இந்தியாவின் ரொட்டிக் கூடை” என்று அழைக்கப்படும் இந்திய பஞ்சாப் பகுதி உலகின் அரிசியில் 1%, கோதுமையில் 2%, பருத்தியில் 2% உற்பத்தி செய்கிறது.[11] 2001 ஆம் ஆண்டு கணக்கெடுப்பின் படி, இந்திய பஞ்சாப் தொழிலாளர்களில் 39% பேர் விவசாயிகளாக இருந்தனர்.[12]

காலவரிசை

[தொகு]

படக் காட்சியகம்

[தொகு]

கூடுதல் வாசிப்பு

[தொகு]
  • [Quraishee 73] Punjabi Adab De Kahani, அப்துல் ஹபீஸ் குரேஸி, அஜீஸ் புக் டெப்போ, லாகூர், 1973.
  • [Chopra 77] The Punjab as a sovereign state, குல்ஷன் லால் சோப்ரா, அல்-பிருனி , லாகூர், 1977.
  • பத்வந்த் சிங். 1999. The Sikhs . New York: Doubleday. ஐஎஸ்பிஎன் 0-385-49062-3
  • The evolution of Heroic Tradition in Ancient Panjab, 1971, புத்தா பர்காஷ்.
  • Social and Political Movements in ancient Panjab, Delhi, 1962, புத்தா பர்காஷ்.
  • History of Porus, Patiala, புத்தா பர்காஷ்.
  • History of the Panjab, Patiala, 1976, ஃபௌஜா சிங், எல்.எம்.ஜோஷி (Ed).

குறிப்புதவிகள்

[தொகு]
  1. இந்திய மக்கள்தொகைக் கணக்கெடுப்பு
  2. சமூக நடைமுறையில் மொழியும் எழுத்தறிவும், ஆசிரியர் ஜேனட் மேபின், திறந்தநிலை பல்கலைக்கழகம், பக்கம் 102
  3. புத்த பர்காஷ், பண்டைய பஞ்சாபில் தீரமிகு பாரம்பரியத்தின் பரிணாமம், பக். 36.
  4. காணவும்: பஞ்சாப் வரலாறு, தொகுதி I, பக். 4, டாக்டர் எல்.எம்.ஜோஷி, டாக்டர் ஃபௌஜா சிங்.
  5. "பஞ்சாப் நாட்டின் இரண்டாவது பணக்கார மாநிலம்: சிஐஐ", டைம்ஸ் ஆஃப் இந்தியா, 8 ஏப்ரல் 2004.
  6. "பஞ்சாப் (இந்தியா) அதிகாரப்பூர்வ வலைத் தளத்திற்கு நல்வரவு". Archived from the original on 2007-10-18. பார்க்கப்பட்ட நாள் 2009-12-22.
  7. பாகிஸ்தானிய அரசாங்க புள்ளிவிவரம், பெறப்பட்டது 14 ஏப்ரல் 2007.
  8. பாகிஸ்தான் மாகாண கணக்குகள்: வகைமுறை மற்றும் மதிப்பீடுகள் 1973-2000
  9. "பஞ்சாப் நாட்டின் இரண்டாவது பணக்கார மாநிலம்: சிஐஐ", டைம்ஸ் ஆஃப் இந்தியா , 8 ஏப்ரல் 2004.
  10. பாகிஸ்தானிய அரசாங்க புள்ளிவிவரம் பரணிடப்பட்டது 2007-03-08 at the வந்தவழி இயந்திரம், பெறப்பட்டது 14 ஏப்ரல் 2007.
  11. "பஞ்சாப் (இந்தியா) அதிகாரப்பூர்வ வலைத் தளத்திற்கு நல்வரவு". Archived from the original on 2007-04-17. பார்க்கப்பட்ட நாள் 2009-12-22.
  12. பஞ்சாபி அரசாங்க புள்ளிவிவரம் பரணிடப்பட்டது 2008-03-10 at the வந்தவழி இயந்திரம், பெறப்பட்டது 14 ஏப்ரல் 2007.

புற இணைப்புகள்

[தொகு]
விக்கிமீடியா பொதுவகத்தில்,
பஞ்சாப்
என்பதில் ஊடகங்கள் உள்ளன.
"https://ta.wikipedia.org/w/index.php?title=பஞ்சாப்_பகுதி&oldid=3959897" இலிருந்து மீள்விக்கப்பட்டது