1840கள்
Appearance
1840கள் என்றழைக்கப்படும் பத்தாண்டு காலம் 1840ஆம் ஆண்டு துவங்கி 1849-இல் முடிவடைந்தது.[1][2][3]
நுட்பம்
[தொகு]- முதற்தடவையாக சத்திர சிகிச்சைகளில் பொது அனெஸ்தேசியா (general anesthesia) பாவிக்கப்பட்டது.
- முதலாவது தந்திச் செய்தி சாமுவேல் மோர்ஸ் என்பவரால் மே 24, 1844 இல் பால்ட்டிமோரில் இருந்து வாஷிங்டன் டிசிக்கு அனுப்பப்பட்டது.
- அடொல்ஃப் சாக்ஸ் சாக்சபோனுக்கான காப்புரிமம் மே 17, 1846 இல் பெற்றார்.
அரசியல்
[தொகு]- ஆகஸ்ட் 29, 1842 இல், முதலாவது ஓப்பியம் போர் முடிவுக்கு வந்தது.
- மெக்சிக்கோ-அமெரிக்கப் போர் (1846 - 1848)
- கார்ல் மார்க்ஸ் கம்யூனிஸ்ட் அறிக்கையை பெப்ரவரி 21, 1848 இல் வெளியிட்டார்.
வேறு
[தொகு]- தபால்தலை அறிமுகமானது. பென்னி பிளாக் என்ற முதலாவது தபால் தலையை ஐக்கிய இராச்சியம் மே 1, 1840 இல் வெளியிட்டது.
இலங்கை
[தொகு]- இலங்கை வங்கி அமைக்கப்பட்டது (செப்டம்பர் 24, 1840)
- யாழ்ப்பாணத்துக்கும் ஊர்காவற்துறைக்கும் இடையில் தபால் சேவை ஆரம்பமாகியது (ஏப்ரல் 1841)
- யாழ்ப்பாணம், மானிப்பாயில் தமிழ் அகராதி வெளியிடப்பட்டது (ஏப்ரல் 1841)
- மன்னாரில் காலரா நோயினால் 500 பேர் வரையில் இறந்தனர் (1842)
- இலங்கையில் அடிமைத் தொழில் முற்றாகத் தடை செய்யப்பட்டது (டிசம்பர் 20, 1844)
முகலாயப் பேரரசர்கள்
[தொகு]மேற்கோள்கள்
[தொகு]- ↑ Joachim Schliesinger (2 January 2017). The Chong People: A Pearic-Speaking Group of Southeastern Thailand and Their Kin in the Region. Booksmango. pp. 106–. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-1-63323-988-3.
- ↑ "Gold Medal Recipients". Royal Geographical Society. Archived from the original on 17 June 2018.
- ↑ Gandamak at britishbattles.com