விக்கிப்பீடியா:பயிற்சி (வரவேற்பு)
வரவேற்பு | தொகுத்தல் | வடிவமைப்பு | உள்ளிணைப்புகள் | வெளியிணைப்புகள் | பகுப்புகள் | பேச்சுப்பக்கம் | கவனம் கொள்க | பதிகை | மறுஆய்வு |
விக்கிப்பீடியா தொகுத்தல் பயிற்சி - வருக!
விக்கிப்பீடியா கூட்டாகத் தொகுக்கப்படும் ஒரு கலைக்களஞ்சியம். நீங்கள் இதன் வளர்ச்சியில் பங்கேற்க இயலும். இந்தப் பயிற்சி நீங்கள் இக்கலைக்களஞ்சியத்திற்கு பங்களிக்க உதவும். பின்வரும் பக்கங்கள் விக்கிப்பீடியாவின் உள்ளுறை மற்றும் நடை குறித்த வழிகாட்டல்களைத் தரும். இங்குள்ள சமுதாயம், நிலவும் கொள்கைகள் மற்றும் பழக்கங்களை அறிமுகப்படுத்தும். இது ஓர் அடிப்படைப் பயிற்சியாகும்; முழுமையான தகவல் புத்தகம் அன்று. நீங்கள் மேல் விவரங்கள் அறிய விரும்பினால், தொடுப்புகள் கொடுக்கப்படும். இப்பயிற்சியின்போது அவற்றைப் படிக்க விரும்பினால் தனியான உலாவி பக்கத்திலோ, கீற்றிலோ திறந்து படிக்கவும்.
"மணல்தொட்டி" பக்கங்களுக்குத் தொடுப்புகள் கொடுக்கப்பட்டுள்ளன; அங்கு, நீங்கள் படிப்பதைப் பயின்று பார்க்கலாம். படித்தவற்றைத் தயக்கமின்றி முயன்று பாருங்கள். மணல்தொட்டியில் பயிலும்போது எந்தக் குழப்பம் உண்டானாலும் யாரும் கவலைப்பட மாட்டார்கள்.
குறிப்பு: இந்தப் பயிற்சி, உங்கள் பக்க வடிவமைப்பு இயல்பிருப்பில் இருப்பதாக அமைக்கப்பட்டுள்ளது. நீங்கள் உள்பதிகை செய்து உங்கள் விருப்பப்படி பக்க வடிவமைப்பு இருக்குமானால், தொடுப்புகளின் இடங்கள் இடம் மாறி இருக்கலாம்.