விக்கிப்பீடியா:இன்றைய சிறப்புப் படம்/2008
- டிசம்பர் 28, 2008 ஆம் நாளிற்கான விக்கிப்பீடியா சிறப்புப் படம்
தோல் விலங்குகள் அல்லது தாவரங்களின், உயிர் இழையங்களாலான வெளிப்புற உறை ஆகும். வெளியுறைத் தொகுதியின் மிகப்பெரிய உறுப்பான தோல், பல்வேறு இழையப் படலங்களினால் ஆனது. இது அதன் பின்னுள்ள, தசைகள், எலும்புகள், தசைநார்கள்,உள்ளுறுப்புக்கள் என்பவற்றைப் பாதுகாக்கின்றது. தோல், சூழலுடனான உடலின் இடைமுகமாக விளங்குவதால், உடலை கிருமிகளில் இருந்து பாதுகாப்பதில் முக்கிய பங்கு வகிக்கின்றது. |
இச்சிறப்புப் பக்கத்தை: பார் • உரையாடல் • தொகு
- டிசம்பர் 21, 2008 ஆம் நாளிற்கான விக்கிப்பீடியா சிறப்புப் படம்
பறவைகளின் உணவுமுறைக்கேற்ப அலகுகள் அமைந்துள்ளன. மலர்களில் தேன் குடிக்கும் வானம்பாடி போன்ற பறவைகளுக்கு நீண்ட நுண்ணிய அலகு. கழுகு, ஆந்தை போன்ற அசைவப் பறவைகளூக்கு சதையைப் பிய்த்து உண்ண ஏற்ற உறுதியான கூர் அலகு. மீன்களை உண்டு வாழும் வாத்து போன்ற பறவைகளுக்கு வழுக்கும் இரையை பிடிக்க வாகான ரம்பம் போன்ற விளிம்புடைய அலகு. பழக்கொட்டைகளை உடைக்க உறுதியான அலகு, மரங்கொத்திப் பறவைக்கோ உளி போன்ற உறுதியும் கூர்மையும் கொண்ட அலகு. இவ்வாறு பல்வேறு உணவுப் பழக்கவழக்கங்களுக்கு ஏற்ற அலகுகள் படத்தில் காட்டப்பட்டுள்ளன. |
இச்சிறப்புப் பக்கத்தை: பார் • உரையாடல் • தொகு
- டிசம்பர் 14, 2008 ஆம் நாளிற்கான விக்கிப்பீடியா சிறப்புப் படம்
சிங்கம் பாலூட்டி வகையைச் சேர்ந்த ஒரு காட்டு விலங்கு ஆகும். இவ்விலங்கு ஊன் உண்ணும் விலங்கு வகையைச் சேர்ந்தது. சிங்கத்தைத் தமிழில் அரிமா என்றும் ஆண் சிங்கத்தை ஏறு என்றும் கூறுவது வழக்கம். அரிமா பூனைப் பேரினத்தைச் சேர்ந்தது. பூனைப் பேரினத்திலேயே, புலிக்கு (வரிப்புலிக்கு) அடுத்தாற்போல இருக்கும் பெரிய விலங்கு. ஆண் சிங்கம் 150-250 கிகி வரை எடை கொண்டதாக இருக்கும். பெண் அரிமா 120-150 கிகி எடை கொண்டதாக இருக்கும். இவ்விலங்கு இன்று ஆப்பிரிக்காவிலும் இந்தியாவிலும் உள்ள காடுகளில் மட்டுமே காணப்படுகின்றது. படத்தில் தென் ஆபிரிக்காவில் ஒரு சிங்கமும் சிங்க குட்டியும் எருமையை உண்ணுகின்றன. |
இச்சிறப்புப் பக்கத்தை: பார் • உரையாடல் • தொகு
- டிசம்பர் 8, 2008 ஆம் நாளிற்கான விக்கிப்பீடியா சிறப்புப் படம்
மீர் அல்லது மிர் (Mir, ரஷ்ய மொழி: Мир), சோவியத் ஒன்றியத்தின் (தற்போது ரஷ்யாவின்) பூமியைச் சுற்றி வர ஏவப்பட்ட ஒரு விண்நிலையம் ஆகும். விண்வெளியில் முதன் முதலில் நிறுவப்பட்ட நீண்ட-கால தொழிற்பாடுடைய விண்நிலையம் இதுவாகும். 1986 ஆம் ஆண்டு பெப்ரவரி 19 இல் இந்நிலையம் விண்ணுக்கு ஏவப்பட்டது. விண்வெளி வீரர்கள் பூமியிலிருந்து மீள் விண்கப்பலில் பயணம் செய்து, விண்வெளியில் நிரந்தரமாய்க் குடியேற சோவியத்தின் இத்திட்டம் வழிகோலியது. ரஷ்ய விண்கப்பலான சோயுஸ் மூலமாக முதலில் விண்வெளி ஆய்வாளர்கள் பயணம் செய்து, மீர் நிலையத்தோடு இணைக்கப்பட்டு இடம் மாறிக்கொண்டனர். அதன் பின்னர் நாசாவின் அட்லாண்டிஸ் மீருடன் இணைந்தது (படம்). மீர் விண்வெளி நிலையம் மார்ச் 23, 2001 வரை இயங்கியது. இது பின்னர் புவியின் சுற்று வட்டத்தில் இருந்து கட்டாயமாக விலக்கப்பட்டு தென் பசிபிக் பெருங்கடலில் விழுந்து மூழ்க விடப்பட்டது. படத்தில் மீர் நிலையத்துடன் அட்லாண்டின் விண்ணோடம் காணப்படுகிறது. |
இச்சிறப்புப் பக்கத்தை: பார் • உரையாடல் • தொகு
- நவம்பர் 30, 2008 ஆம் நாளிற்கான விக்கிப்பீடியா சிறப்புப் படம்
பெரும் இன அழிப்பு என்பது இரண்டாம் உலகப் போர்க் காலத்தில், 6 மில்லியன் ஐரோப்பிய யூதர்கள் ஜெர்மனியில் திட்டமிட்டுப் படுகொலை செய்யப்பட்ட நிகழ்வைக் குறிக்கப் பயன்படும் ஆங்கிலச் சொல்லான ஹாலோகோஸ்ட் (Holocaust) என்பதற்கு இணையாகப் பயன்படுத்தப்பட்டுள்ளது. இது அக்காலத்தில் ஜேர்மனியில் ஆட்சியில் இருந்த, அடொல்ஃப் ஹிட்லரின் தலைமையிலான தேசிய சோசலிச ஜேர்மன் தொழிலாளர் கட்சியின் (நாசி) இன அழிப்புக் கொள்கையின் ஒரு பகுதியாக இடம்பெற்றது. யூதர்கள் தவிர வேறும் பிற இனத்தவர்களும், பிரிவினரும் கூடப் படுகொலை செய்யப்பட்டனர். இவர்களுள், ஜிப்சிகள், சோவியத் ஒன்றியத்தவர், பொதுவுடமைவாதிகள், போல் இனத்தவர், பிற சிலாவிய மக்கள், ஊனமுற்றோர், தன்னினச் சேர்க்கையாளர், அரசியல் எதிரிகள், மாறுபட்ட சமயக்கருத்துக் கொண்டவர்கள் என்போரும் அடங்குவர். |
இச்சிறப்புப் பக்கத்தை: பார் • உரையாடல் • தொகு
- நவம்பர் 23, 2008 ஆம் நாளிற்கான விக்கிப்பீடியா சிறப்புப் படம்
மாவீரர் நாள் என்பது தமிழீழ விடுதலைப் போராட்டத்தில் பங்குபற்றி தாய்நாட்டுக்காக தமது உயிரை ஈந்த தமிழீழ விடுதலைப்புலிகள் இயக்கத்தின் உறுப்பினர்களையும், அவர்களோடு சேர்ந்து போரிட்டு உயிர் ஈந்த எல்லைப்படை துணைப்படை வீரர்களையும், புலிகளோடு இணைந்து உயிர் ஈந்த ஈழ புரட்சிகர மாணவர் இயக்க உறுப்பினர்களையும், மற்றும் குட்டிமணி, தங்கத்துரை போன்ற வேறு சில ஈழப்போராட்ட போராளிகளையும் நினைவுகூர்ந்து அஞ்சலி செய்து, பெருமைப்படுத்தும் நாள் ஆகும். இதற்குரிய நாளாக நவம்பர் 27 ஆம் நாள் தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பினரால் 1989 ஆண்டில் அறிவிக்கப்பட்டது. அந்த நாளில் மாவீரர் உறவுகள், தோழர்கள், மக்கள் அவர்களின் கல்லறை சென்று தம் அஞ்சலியைச் செலுத்துவர் (படம்). |
இச்சிறப்புப் பக்கத்தை: பார் • உரையாடல் • தொகு
- நவம்பர் 16, 2008 ஆம் நாளிற்கான விக்கிப்பீடியா சிறப்புப் படம்
அகதி என்பது, இனம், சமயம், தேசிய இனம், குறிப்பிட்ட சமூகக் குழுவொன்றில் உறுப்பாண்மை, அரசியல் கருத்து என்பவை காரணமாகக் குற்றம் சாட்டப்பட்டவரும்; அவருடைய நாட்டுக்கு அல்லது சொந்த இடத்துக்கு வெளியில் இருப்பவரும்; அந்நாட்டினுடைய பாதுகாப்பைப் பெற முடியாத அல்லது பயம் காரணமாக அவ்வாறான பாதுகாப்பை நாட விரும்பாதவருமான ஒருவரைக் குறிக்கும். படத்தில் வியட்நாம் அகதிகள். |
இச்சிறப்புப் பக்கத்தை: பார் • உரையாடல் • தொகு
- நவம்பர் 9, 2008 ஆம் நாளிற்கான விக்கிப்பீடியா சிறப்புப் படம்
ஊட்டக்குறை என்பது, பொருத்தமற்ற, போதிய ஊட்டம் இல்லாத உணவினால் ஏற்படும் மருத்துவவியல் நிலையைக் குறிக்கும். இது பொதுவாக குறைந்த உணவு உட்கொள்ளுதலினாலும், உறிஞ்சும் தன்மைக் குறைவாலும், அளவுக்கதிகமாக ஊட்டம் இழத்தலாலும் ஏற்படும் ஊட்டக் குறைவைக் குறித்தாலும், இது கூடுதலாக உணவு உண்பதாலும், குறிப்பிட்ட ஊட்டச் சத்துக்களை அளவு மீறி உட்கொள்வதாலும் ஏற்படக்கூடிய மிகையூட்டத்தையும் உள்ளடக்குகிறது. |
இச்சிறப்புப் பக்கத்தை: பார் • உரையாடல் • தொகு
- நவம்பர் 2, 2008 ஆம் நாளிற்கான விக்கிப்பீடியா சிறப்புப் படம்
பூகுவேரோ லா ரோச்சேல் (La Rochelle) என்னுமிடத்தில் பிறந்தார். இவர் பாரிஸ் நகரிலுள்ள இக்கோல் டெஸ் பியூக்ஸ் ஆர்ட்ஸ் இன் மாணவர். இவரது இயல்பிய (realistic) ஓவியங்களும், தொன்மங்கள் சார்ந்த ஓவியக் கருக்களும், ஆண்டுதோறும் நடைபெற்ற பாரிஸ் சலோன் கண்காட்சியில் வைக்கப்பட்டன. படத்தில் அவர் வரைந்த Dante And Virgil In Hell. |
இச்சிறப்புப் பக்கத்தை: பார் • உரையாடல் • தொகு
- அக்டோபர் 26, 2008 ஆம் நாளிற்கான விக்கிப்பீடியா சிறப்புப் படம்
பூமி சூரியக்கோள்களின் நீள்வட்டப்பாதையில் மூன்றாவதாக உள்ளது. சூரியக் குடும்பத்தில் உயிர்கள் வாழும் ஒரே கோள் பூமி. அறிவியல் சான்றுகள் பூமி தோன்றி 4.54 பில்லியன் ஆண்டுகள் ஆவதாகவும், உயிர்கள் தோன்றி பில்லியன் ஆண்டுகள் ஆவதாகக் கூறுகின்றன. படத்தில் அப்பல்லோ திட்டம் விண்கலம் நிலாவில் இருந்தபோது எடுக்கப்பட்ட பூமிப் படம். |
இச்சிறப்புப் பக்கத்தை: பார் • உரையாடல் • தொகு
- அக்டோபர் 19, 2008 ஆம் நாளிற்கான விக்கிப்பீடியா சிறப்புப் படம்
ஜீன் லியோன் ஜேர்மி (1824–1904) ஒரு சிறந்த பிரெஞ்சு ஓவியரும், சிற்பியும் ஆவார். இவர் வரலாறு, கிரேக்க தொன்மவியல், கிழக்குதேசவியல் ஆகிய இயல்களை தமது கருவாக பெரிதும் பயன்படுத்தினார். படத்தில் இவர் வரைந்த பார்த்திருக்கும் புலி. |
இச்சிறப்புப் பக்கத்தை: பார் • உரையாடல் • தொகு
- அக்டோபர் 12, 2008 ஆம் நாளிற்கான விக்கிப்பீடியா சிறப்புப் படம்
[[Image:|300px|{{{texttitle}}}]] |
நகைச்சுவையைத் தூண்டும் வண்ணம் வரையப்படும் சித்திரங்கள் கேலிச் சித்திரங்கள் அல்லது கேலிப் படங்கள் எனப்படும். தமிழில் ஆனந்த விகடன், குமுதம், தினமணி போன்ற இதழ்களில் கேலிச் சித்திரங்கள் வெளி வருகின்றன. ஈழத்தில் சிரித்திரன் இதழில் வெளி வந்த கேலிச் சித்திரங்கள் புகழ்பெற்றவை. |
இச்சிறப்புப் பக்கத்தை: பார் • உரையாடல் • தொகு
- அக்டோபர் 5, 2008 ஆம் நாளிற்கான விக்கிப்பீடியா சிறப்புப் படம்
ஏறுதழுவல் அல்லது ஜல்லிக்கட்டு என்பது தமிழர்களின் மரபுவழி விளையாட்டுக்களில் ஒன்று. ஏறு என்பது காளை மாட்டைக் குறிக்கும். மாட்டை ஓடவிட்டு அதை மனிதர்கள் அடக்குவது அல்லது கொம்பில் பிடித்து வீழ்த்துவதே இந்த விளையாட்டு. அலங்காநல்லூரில் ஆண்டுதோறும் தை மாதத்தில் இடம்பெறும் ஏறுதழுவல் புகழ்பெற்றது. |
இச்சிறப்புப் பக்கத்தை: பார் • உரையாடல் • தொகு
- செப்டெம்பர் 28, 2008 ஆம் நாளிற்கான விக்கிப்பீடியா சிறப்புப் படம்
நயாகரா நீர்வீழ்ச்சி அல்லது நயாகரா பேரருவி என்பது வட அமெரிக்காவின் வட கிழக்குப் பகுதியில் உள்ள புகழ் மிக்க ஒரு பேரருவி. இது உலகத்திலேயே உள்ள அருங்காட்சிகளில் ஒன்றாக போற்றப்படுகிறது. ஆண்டுதோறும் இதனை பார்க்க 10 மில்லியன் மக்கள் வருகின்றனர். இப்பேரருவி கனடாவிற்கும் ஐக்கிய அமெரிக்க நாடுகளுக்குமான எல்லையில் ஓடும் சுமார் 56 கி.மீ நீளமுள்ள நயாகரா ஆற்றின் பாதி தொலைவில் அமைந்துள்ளது. |
இச்சிறப்புப் பக்கத்தை: பார் • உரையாடல் • தொகு
- செப்டெம்பர் 21, 2008 ஆம் நாளிற்கான விக்கிப்பீடியா சிறப்புப் படம்
சமிபாடு (அல்லது செரிமானம்) (Digestion) என்பது, உறிஞ்சப்படுவதற்கு வசதியாக உணவில் உள்ள வேதிப்பொருட்கள் உடலினுள் உடைக்கப்படுவதைக் குறிக்கும். படம் சமிபாடுடன் தொடர்புடைய பல்வேறு உடல் உறுப்புக்களைக் (சமிபாடுத் தொகுதி) காட்டுகிறது. |
இச்சிறப்புப் பக்கத்தை: பார் • உரையாடல் • தொகு
- செப்டெம்பர் 14, 2008 ஆம் நாளிற்கான விக்கிப்பீடியா சிறப்புப் படம்
ஒரு குறிப்பிட்ட குறுக்கு வெட்டுப் பரப்பை நொடிக்கு எவ்வளவு மின்மம் கடக்கின்றது என்னும் விரைவு மின்னோட்டம் (flow rate of charged particles or electric current) என குறிக்கப்படுகின்றது. ஒவ்வொரு துகளும் ஒரு குறிப்பிட்டளவு மின்மம் (charge, மின் ஏற்பு, மின்னூட்டு) கொண்டிருக்குமாகையால், ஒரு குறுக்குவெட்டுப் பரப்பை நொடிக்கு எவ்வளவு மின்மம் கடந்து செல்கின்றது என்பதுதான் மின்னோட்டத்தின் அளவு ஆகும். |
இச்சிறப்புப் பக்கத்தை: பார் • உரையாடல் • தொகு
- செப்டெம்பர் 7, 2008 ஆம் நாளிற்கான விக்கிப்பீடியா சிறப்புப் படம்
இருமுனையம் தொழிற்படுமுறை: எதிர் அழுத்த முறை. இருமுனையம் வழி மின்னோட்டம் மிக மிகக் குறைவாகவே பாயும். எனவே மின்விளக்கு எரியவில்லை.இருமுனையத்தின் இரு புறமும் உள்ள மின் அழுத்த திசையை கூட்டல்-கழித்தல் குறி காட்டுகின்றது |
இச்சிறப்புப் பக்கத்தை: பார் • உரையாடல் • தொகு
- ஆகஸ்ட் 31, 2008 ஆம் நாளிற்கான விக்கிப்பீடியா சிறப்புப் படம்
பிட்டு அல்லது புட்டு என்பது ஒருவகை உணவுப் பண்டம். இதை அரிசி மாவு, தேங்காய்த் துருவல் கொண்டு செய்யலாம். தமிழ் நாட்டில் பெரும்பாலும் பிட்டு சமைப்பதில்லை என்றாலும், இலங்கை, மற்றும் கேரளாவில் மிகவும் விரும்பி உண்கிறார்கள். இலங்கைத் தமிழர்கள் காலை, இரவு உணவுகளுக்கு விரும்பி உண்பவற்றில் பிட்டும் ஒன்றாகும். தமிழ்நாட்டுத் தமிழர்களுக்குத் தோசையும், இட்டிலியும் போல, இலங்கைத் தமிழர்களுக்குப் பிட்டும், இடியப்பமும் அதிகம் உண்ணப்படும் உணவுப் பண்டங்களாக உள்ளன. |
இச்சிறப்புப் பக்கத்தை: பார் • உரையாடல் • தொகு
- ஆகஸ்ட் 17, 2008 ஆம் நாளிற்கான விக்கிப்பீடியா சிறப்புப் படம்
கதகளி இது கேரள மாநிலத்தின் பாரம்பரிய நடன வடிவமாகும். இது பல பாத்திரங்களைக்கொண்ட ஒரு நாட்டிய நாடகமாக ஆடப்பட்டு வருகிறது. இராமாயணம், மகாபாரதம் போன்ற சமயம் சார்ந்த பழங்கதைகள் இந்த நடனத்துக்குக் கருப்பொருளாக அமைகின்றன. |
இச்சிறப்புப் பக்கத்தை: பார் • உரையாடல் • தொகு
- ஆகஸ்ட் 11, 2008 ஆம் நாளிற்கான விக்கிப்பீடியா சிறப்புப் படம்
இந்திய தேசியக் கொடி ஆங்கிலேயர்களிடம் இருந்து விடுதலை பெறுவதற்குச் சில நாட்களுக்கு முன்னர், 22 ஜூலை 1947 அன்று, தற்போதைய வடிவில், ஏற்கப்பட்டது. 26 ஜனவரி 1950 இல் இந்தியா குடியரசு நாடாக ஆகும் வரையிலும், அதன் பிறகும் இக்கொடி தேசியக் கொடியாக விளங்கி வருகிறது. இக்கொடி, 'மூவர்ண'க் கொடியாகவும் குறிப்பிடப்படுகிறது. |
இச்சிறப்புப் பக்கத்தை: பார் • உரையாடல் • தொகு
- ஆகஸ்ட் 3, 2008 ஆம் நாளிற்கான விக்கிப்பீடியா சிறப்புப் படம்
அப்பல்லோ திட்டம் என்பது 1961-1972 வரை, ஐக்கிய அமெரிக்க நாட்டினால் நடைமுறைப்படுத்தப்பட்ட, ஒரு தொடரான மனித விண்வெளிப்பறப்புத் திட்டமாகும். இது, தசாப்தம் 1960களுக்குள் ஒரு மனிதனைச் சந்திரனில் இறக்கிப் பாதுகாப்பாகப் பூமிக்குத் திருப்பிக் கொண்டுவருவதை நோக்கமாகக் கொண்டது. 1969ல் அப்பல்லோ 11 திட்டத்தின் மூலம், இந்த நோக்கம் அடையப்பட்டது. சந்திரனில், ஆரம்ப ஆள்மூல அறிவியல் ஆய்வுகளை மேற்கொள்வதற்காக, இத் திட்டம், 1970களின் முற்பகுதிவரை நீட்டிக்கப்பட்டது. படம்: அப்பல்லோ திட்டம் மூலம் சந்திரனில் அடியெடுத்து வைத்த முதல் மனிதர்: நீல் ஆம்ஸ்ட்றோங் |
இச்சிறப்புப் பக்கத்தை: பார் • உரையாடல் • தொகு
- ஜூலை 13, 2008 ஆம் நாளிற்கான விக்கிப்பீடியா சிறப்புப் படம்
கறுப்பு ஜூலை (ஆடிக்கலவரம்) என்பது ஜூலை 23, 1983 தொடக்கம் இரண்டு கிழமைகளுக்கு மேலாகத் திட்டமிட்ட முறையில் சிங்கள இனவாதிகளால் இலங்கைத் தமிழர்கள் சித்திரவதை செய்யப்பட்ட, சொத்துக்கள் அழிக்கப்பட்ட அபகரிக்கப்பட்ட, 3000 பேர் வரை படுகொலை செய்யப்பட்ட ஒரு துன்பவியல் நிகழ்வாகும். இது தமிழீழ விடுதலைப் புலிகள் 13 இலங்கை இராணுவத்தினரை யாழ்ப்பாணம், திருநெல்வேலியில் படுகொலை செய்ததின் தூண்டுதல் விளைவு எனப்பட்டபோதும், இந்நிகழ்வின் ஒருங்கிணைப்பு முறை ஒரு திட்டமிட்ட செயற்பாடாகவே நம்பப்படுகிறது. கறுப்பு யூலை நிகழ்வுகளே இலங்கை இனப்பிரச்சினை ஆயுதப் போராட்டமாக மாறக் காரணமானதாகப் பார்க்கப்படுகின்றது. படம்: சிங்கள ஓளிப்பட வல்லுனர் சந்திரகுப்த அமரசிங்க அவர்கள் இந்த தமிழ் இளைஞன் கொல்லப்பட சற்றுமுன்னர் எடுத்த ஒளிப்படம். |
இச்சிறப்புப் பக்கத்தை: பார் • உரையாடல் • தொகு
- ஜூலை 6, 2008 ஆம் நாளிற்கான விக்கிப்பீடியா சிறப்புப் படம்
தெய்யம் கேரளத்தின் வடக்கே மலபாரில் வழங்கப்பெறும் ஒரு கலையாகும். தெய்யம் என்பது தெய்வத் தோற்றம் தரித்தவரின் உடலில் வணங்கப்படும் தெய்வமோ அல்லது அவ்வட்டார வீரனோ பிரவேசிப்பதற்காகச் செய்யப் படும் வேண்டுதல். இந்த ஆட்டக்கலை தெய்யாட்டம் எனவும் தெய்யத்தின் வேடத்தை தெய்யக்கோலம் என்றும் வழங்குகிறார்கள். |
இச்சிறப்புப் பக்கத்தை: பார் • உரையாடல் • தொகு
- ஜூன் 29, 2008 ஆம் நாளிற்கான விக்கிப்பீடியா சிறப்புப் படம்
வீச்சு உள் எரி பொறி இயக்கம். வளிமம் அமுக்கி அழுத்தபடுவதும், எரிவதும், விரிவடைவதும் காணலாம். எரிவளிமம் உள்ளே இழுக்கப்படுவதும், எரிந்தபின் வெளியே உந்தித் தள்ளப்படுவதும் காணலாம். |
இச்சிறப்புப் பக்கத்தை: பார் • உரையாடல் • தொகு
- மே 14, 2008 ஆம் நாளிற்கான விக்கிப்பீடியா சிறப்புப் படம்
அசையாக்கரடி தென் அமெரிக்காவிலே வாழும் இரவிலே இரைதேடும் ஒரு விலங்கு. இது ஒரு தாவர உண்ணி என்றும், பூச்சி, பல்லி முத்லியவற்றையும் உண்ணும் என்பதால் எல்லாமுண்ணி விலங்கு என்றும் கூறப்படுகின்றது. இது நெடுநேரம் அசையாமலே இருக்கும் என்பதாலும், மிக மிக மெதுவாகவே நகரும் என்பதாலும் இதனை "அசையா"க் கரடி என்கிறோம். |
இச்சிறப்புப் பக்கத்தை: பார் • உரையாடல் • தொகு
- மார்ச் 21, 2008 ஆம் நாளிற்கான விக்கிப்பீடியா சிறப்புப் படம்
2001 ஆம் ஆண்டு செப்டம்பர் 11 தாக்குதல்களின் பின்னர் இடிபாடுகளுக்கிடையில் தீயணைப்பு வீரரொருவர் உதவி கேட்கும் காட்சி. அல் கைடாவுடன் தொடர்புடைய இசுலாமியத் தீவிரவாதிகள் பொதுமக்கள் போக்குவரத்துக்கான நான்கு விமானங்களை செல்வழி கடத்தி அவற்றில் இரண்டை உலக வர்த்தக மையம் மீது மோதினர். மூன்றாவது விமானம் பென்டகன் கட்டிடம் மீது மோதியதோடு நான்காவது பென்சில்வேனியாவில் வீழ்ந்து நொறுங்கியது. இத்தாக்குதல்களின் போது ஐக்கிய அமெரிக்காவின் உலகவர்த்தக மையத்தின் இரண்டு கட்டிடங்கள் இடிந்து வீழ்ந்தன; பென்டகன் கட்டிடமும் சேதத்துக்குள்ளானது. விமானங்களில் இருந்த பயணிகள், கட்டிட இடிபாடுகளில் சிக்கியவர்கள், தீயணைப்புப் படையினர் என கடத்தல்காரர்கள் 19 பேர் நீங்கலாக 80 நாடுகளைச் சேர்ந்த 2,998 பேர் கொல்லப்பட்டனர். |
இச்சிறப்புப் பக்கத்தை: பார் • உரையாடல் • தொகு
- மார்ச் 7, 2008 ஆம் நாளிற்கான விக்கிப்பீடியா சிறப்புப் படம்
இலங்கையின் மத்திய மாகாணத்தின் கண்டி மாநகரத்தில் அமைந்துள்ள பலசரக்குக் கடை. வெளிநாட்டு உல்லாசப் பிரயாணிகளை கவரும் வகையில் பலசரக்குகள் அலங்கரிக்கப்பட்டுள்ளன. பல்வகை சுவையூட்டும் நறுமணமூட்டும் பலசரக்குகள் தமிழர் சமையல் உட்பட பல இனங்களின் சமையல்களில் பயன்படுத்தப்படுகிறது. 1499 ஆம் ஆண்டு வாஸ்கோ ட காமாவின் இந்தியப் பயணத்தின் முக்கிய நோக்கமாக தெற்காசியாவில் உற்பத்தி செய்த பலசரக்குகளின் வியாபாரத்தை தம்வசப்படுத்திக் கொள்வது அமைந்திருந்தது. இவ்வாறு பலசரக்குகளுக்காக தெற்காசியா வந்த ஐரோப்பிய நாடுகள் பின்னாளில் அப்பகுதிகளை தமது நாடுகளின் அடிமை நாடுகளாக மாற்றிக் கொண்டன. 2004 ஆம் ஆண்டின் ஐக்கிய நாடுகளின் உணவு மற்றும் வேளாண்மை அமைப்பின் தகவல்களின் படி உலக பலசரக்கு உற்பத்தியில் 86% இந்தியாவில் உற்பத்தி செய்யப்படுகிறது. |
இச்சிறப்புப் பக்கத்தை: பார் • உரையாடல் • தொகு
- பெப்ரவரி 29, 2008 ஆம் நாளிற்கான விக்கிப்பீடியா சிறப்புப் படம்
இலங்கையின் மத்திய மாகாணத்தின் மாத்தளை மாவட்டத்தில் அமைந்துள்ள தம்புள்ளை பொற்கோவிலின் அடிவாரத்தில் ஏ 9 பெருந்தெருவையொட்டி அமைந்துள்ள புத்தரின் சிலையும் பௌத்த நூதனசாலை கட்டிடமும். அமர்ந்த நிலையில் பொற்கோவில் கட்டிடத்தின் மேல் அமைந்திருக்கும் கௌதம புத்தரின் சிலை 2001 ஆண்டு அமைக்கப்பட்டது. உலக பாரம்பரியக் களமாக அறிவிக்கப்பட்டுள்ள மலையுச்சியில் இருக்கும் கி.மு. 700 காலத்தில் இருந்து பாவனையிலிருக்கும் குகைகளை பார்க்கச் செல்லும் உல்லாசப்பிரயாணிகளை கவரும் விதத்தில் இது அமைக்கப்பட்டது. |
இச்சிறப்புப் பக்கத்தை: பார் • உரையாடல் • தொகு
- பெப்ரவரி 22, 2008 ஆம் நாளிற்கான விக்கிப்பீடியா சிறப்புப் படம்
சுசி யப்பானிய பாரம்பரிய உணவுவகைகளில் ஒன்றாகும். இது வினாகிரி இட்டு சமைக்கப்பட்ட சோற்று உருண்டையின் மேலாக மெல்லியதாக வெட்டப்பட்ட மீன், கணவாய், குதிரை இறைச்சி, மீன் முட்டை, சமைக்கப்பட்ட கோழி முட்டை போன்றவை வைக்கப்பட்டு தயாரிக்கப்படுகிறது. சுஷி தயாரிப்பின் போது மேல்-படையாக கொள்ளப்படுபவை பெரும்பாலும் சமைக்கப்படாமல் இருக்கும், சில வேளைகளில் அவை சமைக்கப்படாததாகவோ அல்லது உப்பூட்டப் பட்டவையாகவோ இருக்கலாம். |
இச்சிறப்புப் பக்கத்தை: பார் • உரையாடல் • தொகு
- பெப்ரவரி 15, 2008 ஆம் நாளிற்கான விக்கிப்பீடியா சிறப்புப் படம்
ஆனையிறவு இலங்கையின் வட மாகாணத்தில் அமைந்துள்ள ஓர் ஊராகும். யாழ்ப்பாணக் குடாநாட்டை வன்னிப் பெருநிலப்பரப்புடன் இணைக்கும் கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த இடத்தில் அமைந்துள்ளது. 1760 ஆம் ஆண்டு போர்த்துக்கேயர் முதலாவதாக இங்கே பாதுகாப்புத் தளம் ஒன்றை அமைத்தனர். 1952 இல் இலங்கை இராணுவம் இங்கே தமது தளத்தை அமைத்ததுக் கொண்டது. இதன் அமைவுக் காரணமாக ஈழப் போரில் பல கடுமையான சண்டைகள் இங்கே நடைப்பெற்றுள்ளன. இத்தளத்தைக் கைப்பற்ற தமிழீழ விடுதலைப் புலிகள் 1991 முதல் போரில் ஈடுபட்டு இறுதியாக 2000 ஆம் ஆண்டு இத்தளத்தைக் கைப்பற்றினர். |
இச்சிறப்புப் பக்கத்தை: பார் • உரையாடல் • தொகு
- ஜனவரி 31, 2008 ஆம் நாளிற்கான விக்கிப்பீடியா சிறப்புப் படம்
வசுதாரா என்பது வளமைக்கும் செழிப்புக்கும் உரிய ஒரு பெண் போதிசத்துவர் ஆவார். இவரை செல்வத்தின் அதிபதியான குபேரனின் இணையாக கருதுவர். வசுதாரா நேபாளத்தில் மிகவும் புகழ் பெற்றவர். அங்கு அனைத்து இல்லங்களிலும் வசுதாரா வழிப்படப்படுகிறார். இவர் ரிக்-வேதத்தில் குறிப்பிடப்படும் வசுக்களுள் ஒருவர். |
இச்சிறப்புப் பக்கத்தை: பார் • உரையாடல் • தொகு