மிஷேல் ஃபூக்கோ
மிஷேல் பூக்கோ (Michel Foucault அக்டோபர் 15, 1926 – ஜூன் 25, 1984) இருபதாம் நூற்றாண்டின் குறிப்பிடத்தக்க சிந்தனையாளர்களுள் ஒருவர். இவரது சிந்தனைகளும் கருத்துக்களும் மெய்யியல், அரசியல், உளவியல், மொழியியல், இலக்கியம் எனப் பல்வேறு துறைகளில் தாக்கம் செலுத்துகின்றன. பின்நவீனத்துவம் சார்ந்த உரையாடல்களில் ஃபூக்கோ குறிப்பிடத்தக்க ஒருவர். இவர் ஒழுங்கமைப்பு, அதிகாரம், அறிவு, பாலியல் முதலியவை குறித்த நுண் அரசியல் ஆய்வுகளின் வாயிலாகப் பெரிதும் அறியப்படுகிறார். குறிப்பாக அதிகாரத்தையும் அதன் முறைமைப்படுத்தலையும் குறித்த சிக்கல்கள் பற்றி ஆராய்ந்தார்.
பின்நவீனத்துவராகப் ஃபூக்கோ அறியப்படுகின்ற போதிலும் ஆரம்பத்தில் பின்-அமைப்பியலாளராகவே அறியப்பட்டார்.
அரசியல் ரீதியாக இவர் ஈரானியப் புரட்சியையும் ஆதரித்தார். இதே வேளை ஃபூக்கோ பாலசுத்தீனப் போராட்டம் தொடர்பாக மௌனம் காத்ததாக எட்வேர்ட் சைட் குறிப்பிடுகின்றார்.
இவரது சில நூல்கள்
[தொகு]- Madness and Civilisation
- Archaelogy of Knowledge
- Disipline & Punish: the Origin of Prison
- ↑ Alan D. Schrift (2006), Twentieth-Century French Philosophy: Key Themes And Thinkers, Blackwell Publishing, p. 126.
- ↑ Jacques Derrida points out Foucault's debt to Artaud in his essay "La parole soufflée," in Derrida, Writing and Difference, trans. Alan Bass (Chicago, 1978), p. 326 n. 26.
- ↑ Michel Foucault (1963). "Préface à la transgression," Critique: "Hommage a Georges Bataille", nos 195-6.