சிலோன் சின்னையா
சிலோன் சின்னையா | |
---|---|
பிறப்பு | கண்டி, இலங்கை | 20 சூன் 1941
இறப்பு | சனவரி 7, 2011 | (அகவை 69)
பணி | நடிகர் |
அறியப்படுவது | நடிகர் |
பெற்றோர் | செல்லக்கண்ணு காவேரி |
வாழ்க்கைத் துணை | சரோஜினி |
பிள்ளைகள் | நேசதர்சினி, யோகதர்சினி, ரோஜாரமணன், யோகசெல்வம் |
சிலோன் சின்னையா (20 சூன் 1941 - 7 சனவரி 2011) இலங்கைத் தமிழ்த் திரைப்பட நடிகர். இலங்கை, இந்தியத் தமிழ்த் திரைப்படங்களில் குணசித்திர வேடங்களில் நடித்தவர்.
வாழ்க்கைக் குறிப்பு
[தொகு]சின்னையா இலங்கையின் மலையகத்தில் கண்டி, அம்பிட்டிய என்ற ஊரில்[1] செல்லக்கண்ணு, காவேரி ஆகியோருக்குப் பிறந்தார்.[2] தனது பத்தாவது வயதில் இருந்தே மேடை நாடகங்களில் நடிக்கத் தொடங்கினார்.[3] 1968 ஆம் ஆண்டில் இலங்கையில் வெளியான நிர்மலா என்ற தமிழ்த் திரைப்படத்தில் முதன் முதலில் நடித்தார். பின்னர் மஞ்சள் குங்குமம் (1970) திரைப்படத்தில் ஒரு சிறு வேடத்தில் நடித்தார். 1972 இல் வெளியான மீனவப் பெண் திரைப்படத்தில் மருத்துவராகத் தோன்றி நடித்தார்.[1]
1975 ஆம் ஆண்டில் வெளியான வி. பி. கணேசனின் புதிய காற்று திரைப்படத்தில் மலையகத்தில் உள்ள லயன் குடிசை ஒன்றில் வாழும் ஏழைத் தொழிலாளியாக, கதாநாயகி பரீனா லையின் தந்தையாக நடித்து பாராட்டுப் பெற்றர். வி. பி. கணேசனின் இரண்டாவது படமான நான் உங்கள் தோழன் திரைப்படத்திலும் நடித்தார்.[1] சிலோன் சின்னையா "பாட்டாளியின் கூட்டாளி" என்ற திரைப்படத்தைத் தயாரித்தார். இது வெளிவரவில்லை.[3]
இலங்கை-இந்தியக் கூட்டுத்தயாரிப்பான பைலட் பிரேம்நாத் திரைப்படத்தில் சிவாஜி கணேசனின் கணக்குப்பிள்ளையாக நடித்தது இவருக்குப் பெரும் புகழைத் தந்தது.
1983 ஆடிக் கலவரத்தை அடுத்து புலம் பெயர்ந்து தமிழ்நாடு சென்றார். அங்கு பொண்ணு ஊருக்கு புதுசு உட்பட சில படங்களில் நடித்தார்.[1] அத்துடன் சந்தர்ப்பங்கள், நெடுநாள் ஆசை, இறைவனின் திருமகள் ஆகிய சின்னத்திரைத் தொடர்நாடகங்களிலும் நடித்துள்ளார்.[3]
தமிழ்நாட்டில் இருந்து இங்கிலாந்துக்குப் புலம் பெயர்ந்த சின்னையா அங்கு மேடை நாடகங்களிலும், குறுந்திரைப்படங்களிலும் நடித்து வந்தார். இலண்டன் தமிழ்க் கலைச்சங்கத்தின் தலைவராக இருந்தார்.[1] ஈழவர் திரைக்கலை மன்றத்தின் உறுப்பினராக இருந்து பணியாற்றினார்.[2]
மறைவு
[தொகு]சிலோன் சின்னையா 2011 சனவரி 7 ஆம் நாள் தனது 70வது அகவையில் இலண்டனில் காலமானார்.[3] இவருக்கு இரண்டு மகன்களும், இரண்டு மகள்களும் உள்ளனர்.[4]
நடித்த திரைப்படங்கள்
[தொகு]இலங்கைத் திரைப்படங்கள்
[தொகு]- நிர்மலா
- மஞ்சள் குங்குமம்
- மீனவப்பெண்
- புதிய காற்று
- நான் உங்கள் தோழன்
- பைலட் பிரேம்நாத்
இந்தியத் திரைப்படங்கள்
[தொகு]- பொண்ணு ஊருக்குப் புதுசு
- கரை கடந்த ஒருத்தி
- அகல்விளக்கு
- கரும்புவில்
- ஆணிவேர்
- நீதான் அந்தக்குயில்
- நீ இன்றி நானில்லை
- கீதாஞ்சலி
- காவலன் அவன் கோவலன்
- என் தமிழ் என் மக்கள்
- புதிய அடிமைகள்
- எல்லாமே பணத்துக்காக
- பகவதிபுரம் ரெயிலே கேட்
- காமதேனு
- கிழக்குப்பக்கம் காத்திரு
- கீதம் சங்கீதம்
மேற்கோள்கள்
[தொகு]- ↑ 1.0 1.1 1.2 1.3 1.4 தேவதாஸ், தம்பிஐயா (7 சூன் 2015). "இலங்கை சினிமாவை வளர்த்தவர்கள்". வீரகேசரி.
- ↑ 2.0 2.1 "சிலோன் சின்னையா". Our Jaffna. Archived from the original on 2016-03-05. பார்க்கப்பட்ட நாள் 8 சூன் 2015.
- ↑ 3.0 3.1 3.2 3.3 "திரைப்பட கலைஞர் "சிலோன் சின்னையா"". ஈழத்திரை. 16 டிசம்பர் 2013. பார்க்கப்பட்ட நாள் 8 சூன் 2015.
{{cite web}}
: Check date values in:|date=
(help) - ↑ "பழம்பெரும் நடிகர் சிலோன் சின்னையா காலமானார்". தினமலர். 13 சனவரி 2013. பார்க்கப்பட்ட நாள் 8 சூன் 2015.