திமிர்
Appearance
திமிர் (பெ)
ஒலிப்பு
(கோப்பு) |
பொருள்
- ஆணவம், மமதை, செருக்கு; மனக் கொழுப்பு
- தேகக் கொழுப்பு
- மரத்துப் போகை
- குளிராலுண்டாகும் விறைப்பு
- சோம்பல்
- திமிர்வாதம் - தேகம் மரத்துப் போவதால் உண்டாகும் நோய்வகை; உடற்கொழுப்பால் ஏற்படும் தாமத புத்தி
- அறிவுடல்களின் சோர்வு
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
- hauteur, wantonness, sauciness, impudence, insolence (Colloq)
- obesity
- numbness
- stiffness from cold
- dullness, sluggishness of the system from idleness
- A kind of spasm proceeding from numbness; mental sluggishness accompanying corpulence
- partial suspension of the bodily and mental powers, from consternation, from taking an anaesthetic, anaesthesia
விளக்கம்
பயன்பாடு
- பணக்காரத் திமிர் - impudence due to money/wealth
- அந்த சீமாட்டியைப் பாருங்கள்! திமிர் பிடித்தவள். பெரியவர்கள் மேடையில் அமர்ந்திருக்கும் போது, மரியாதை தெரியாமல் கால் மேல் கால் போட்டு அமர்ந்திருக்கிறாள் (மின்தமிழ் குழுமம்)
- உனக்கு எத்தனை திமிர் இருந்தால் முதன் முதலா நான் நிர்வாகியா வந்த ஒரு வாரத்துக்குள்ளேயே பையன்களை நீ இப்படிக் கலகம் பண்ணத் தூண்டி விட்டிருக்க முடியும்? (பொன் விலங்கு, நா. பார்த்தசாரதி)
- ரொம்பவும் திமிர் பிடித்துப் போய் அவன் இந்த வேலையைச் சரியாகப் பார்க்கவில்லையாம் (பொன் விலங்கு, நா. பார்த்தசாரதி)
- "இதோ இந்த நிமிஷமே உன்னை இந்த வீட்டை விட்டுத் துரத்திவிட்டு மறு காரியம் பார்க்கிறேன்! திமிர் பிடித்த கழுதை!" என்று சொல்லிக் கொண்டே லலிதாவின் கழுத்தில் கையைப் போட்டு வெளி வாசற்படியை நோக்கித் தள்ளத் தொடங்கினான். (அலை ஓசை, கல்கி)
(இலக்கியப் பயன்பாடு)
ஆதாரங்கள் ---திமிர்--- DDSA பதிப்பு + வின்சுலோ +