உள்ளடக்கத்துக்குச் செல்

மகிழ்ச்சி

விக்கிமேற்கோள் இலிருந்து

மகிழ்ச்சி என்பது சந்தோசமான உணர்வைக் குறிக்கும் சொல்லாகும்.

மேற்கோள்கள்

[தொகு]
  • பாடிக்கொண்டே வேலை செய்யும் மனிதனே நமக்கு வேண்டும்! - கார்லைல்[1]
  • திடமான, ஆரோக்கியமுள்ள மனிதனுக்குக் கன்னங்களில் நிறம் எப்படிச் சிவந்திருக்குமோ, அது போலவே இதயத்திலும் இயற்கையாக மகிழ்ச்சி நிறைந்திருக்கும். எங்கெங்கு வழக்கமாகச் சோகம் படர்ந்துள்ளதோ அங்கெல்லாம் காற்று கெட்டிருக்க வேண்டும். அல்லது அளவுக்கதிகமாகக் கடுமையான வேலையிருக்க வேண்டும் அல்லது தவறான பழக்க வழக்கங்கள் இருக்க வேண்டும். - ரஸ்கின்[1]
  • மகிழ்ச்சி ஆரோக்கியம். அதறகு எதிராயுள்ள சோகம், பிணி. - ஹாலிபர்டன்[1]
  • மகிழ்ச்சியோடு சுமந்தால் எந்தப் பாரமும் குறைவாயிருக்கும். ஒவிட்[1]
  • இன்பமே வாழ்வின் இலட்சியம். - ஜே. ஜி லாஸன்[1]
  • படைப்பிலே தலைசிறந்த இன்பமுள்ளவன் மனிதன்தான். அவனுக்கு மேலும் கீழும் உள்ளவை அனைத்தும் விசனமுள்ளவை. - அடிஸன்[1]
  • கவலை நமது சவப்பெட்டியில் ஒர் ஆணியை அறைகின்றது இன்பமாகச் சிரிக்கும் ஒவ்வொரு சிரிப்பும் ஓர் ஆணியைக் கழற்றுகின்றது. - வால்காட்[1]
  • அநித்தியமான மக்களுக்கு மகிழ்ச்சியைவிட வேறு என். வேண்டும்? மகிழ்ச்சியுள்ள மனிதனே அரசன். - ஐபிக்காஸ்டாஃட்[1]

குறிப்புகள்

[தொகு]
  1. 1.00 1.01 1.02 1.03 1.04 1.05 1.06 1.07 1.08 1.09 ப. ராமசாமி (2004). உலக அறிஞர் சிந்தனைக் களஞ்சியம். நூல் 293-294. நாதன் பதிப்பகம். Retrieved on 14 ஏப்ரல் 2020.
"https://ta.wikiquote.org/w/index.php?title=மகிழ்ச்சி&oldid=36773" இலிருந்து மீள்விக்கப்பட்டது