பண்பாடு
Appearance
பண்பாடு, கலாச்சாரம் அல்லது கலாசாரம் (culture) என்பது பொதுவாக மனித செயற்பாட்டுக் கோலங்களையும்; அத்தகைய செயற்பாடுகளுக்குச் சிறப்புத் தன்மைகளையும், முக்கியத்துவத்தையும் கொடுக்கும் குறியீட்டு அமைப்புக்களையும் குறிக்கின்றது.
மேற்கோள்கள்
[தொகு]- அரைகுறை பண்பாடு ஆடம்பரத்தை விரும்பும்; நிறைந்த பண்பாடு எளிமையை விரும்பும். —போவீ
- தமிழ் நாகரிகம் உலகம் முழுமையும் பரவி இருந்ததற்கும் போதிய சான்றுகள் பலவுள. பண்பாடு என்பது தமிழில்தான் உண்டு. அதன் கவிதை உயர் நோக்கங்கள் கொண்டவை.—டி. கே. சிதம்பரநாத முதலியார் (25-10-1911, தேவகோட்டையில் நடைபெற்ற தமிழிசை மாநாட்டில்)[1]
- நீதிநெறி எங்கும் நிறைந்து தோற்றமளிப்பதைச் சாதாரண மக்களால் புரிந்து கொள்வது மிகக்கடினம்; கடவுளால் அளிக்கப்பட்டதைக் கூட மனித இயல்பு என்று கூறிவிடுகின்றோம். அந்த மனித இயல்பின் கடமையை நிறைவேற்ற உதவுவதைத்தான் நீதிநெறி என்கிறோம். அந்த நீதிநெறிகளின்படி நடப்பதைத்தான் நாம் பண்பாடு என்று போற்றுகிறோம். கான்பூசியசு[2]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ சுரதா (பிப்ரவரி, 1977). சொன்னார்கள். நூல் 91-100. சுரதா பதிப்பகம். Retrieved on 17 ஆகத்து 2019.
- ↑ என். வி. கலைமணி (2000). கன்பூசியஸின் நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள். நூல் 7-25. சாந்தி நிலையம். Retrieved on 7 ஏப்ரல் 2020.