தங்கம்
Appearance
தங்கம் அல்லது பொன் (Gold) என்பது மஞ்சள் நிறமுள்ள பார்ப்பதற்கு எளிதான ஓர் உலோகமாகும்.
மேற்கோள்கள்
[தொகு]- தங்கமோ, நகையோ, உற்பத்தி ஆற்றல் அற்றவை, பலனற்றவை. அவற்றை அணிவதெல்லாம் வெறும் பெருமைக்காகத்தான். —தாரகேஸ்வரி சின்கா (18-9-1960, இந்திய நடுவண் துணையமைச்சர்)[1]
- அழகு மனிதர்களை இழுக்கின்றது. அத்துடன் தங்கமோ வெள்ளியோ சேர்ந்துவிட்டால், கவர்ச்சி பத்து மடங்காகி விடும். -ரிக்டெர்[2]
- அருவருப்பான இந்த உலகத்தில் எந்த விஷயத்தைக்காட்டிலும் அதிகமான கொலைகளைத் தங்கம் செய்துள்ளது.விஷங்களைக் காட்டிலும் கொடிய தங்கம் மனிதர்களின் ஆன்மாக்களையே வதைப்பதாகும். -ஷேக்ஸ்பியர்[3]
- மூடனை மறைக்கும் திரை.பொன். அதனால் அவனுடைய குறைகளை உலகம் கண்டுகொள்ள முடியாது. - ஃபெல்ட்ஹாம்[4]
- தானியேலைப் போலத் தங்கத்தையும் இறைவனையும் சேர்த்து வைத்துக்கொள்ளக்கூடியவர் எத்தனை பேர் இருக்கின்றனர்? - பிஷப் வில்லியர்ஸ்[4]
- உரைகல் தங்கத்தைச் சோதிப்பதுபோல், தங்கம் மனிதனைச் சோதிக்கிறது. - சிலோ[4]
பழமொழிகள்
[தொகு]- மாமியார் உடைத்தால் மண்குடம், மருமகள் உடைத்தால் பொன்குடம்
குறிப்புகள்
[தொகு]- ↑ சுரதா (பிப்ரவரி, 1977). சொன்னார்கள். நூல் 101-110. சுரதா பதிப்பகம். Retrieved on 17 ஆகத்து 2019.
- ↑ ப. ராமசாமி (2004). உலக அறிஞர் சிந்தனைக் களஞ்சியம். நூல் 58-61. நாதன் பதிப்பகம். Retrieved on 14 ஏப்ரல் 2020.
- ↑ ப. ராமசாமி (2004). உலக அறிஞர் சிந்தனைக் களஞ்சியம். நூல் 194-197. நாதன் பதிப்பகம். Retrieved on 14 ஏப்ரல் 2020.
- ↑ 4.0 4.1 4.2 4.3 ப. ராமசாமி (2004). உலக அறிஞர் சிந்தனைக் களஞ்சியம். நூல் 292. நாதன் பதிப்பகம். Retrieved on 14 ஏப்ரல் 2020.