இரக்கம்
Appearance
இரக்கம் (pity) என்பது வேறொருவர் சோகத்தில் ஆழ்ந்திருக்கும் போது அவர்பால் காட்டும் உணர்வாகும். இரக்க உணர்வு இல்லாத வேளைகளிலும் தன் ஆளுமையினை காட்ட இவ்வுணர்வினை உபயோகப்படுத்துவர்.
மேற்கோள்கள்
[தொகு]- மனிதன் கருணையைக் கைவிட்டாலும், கடவுள் ஒருகாலும் கைவிடுவதில்லை. - கௌப்பர்[1]
- இரக்கம் கொள்வது நம்மைத் தேவர்களுக்கு நிகராகச் செய்யும்.
- நற்பண்புகள் என்ற நட்சத்திரங்களிடையே இரக்கம் சந்திரனைப் போன்றது. -சேப்பின்[1]
- கடவுளுடைய சக்திகள் யாவும் ஒன்றுபோல் சமமாக இருந்த போதிலும், அவருடைய நீதியைப் பார்க்கினும் இரக்கம் அதிகப் பிரகாசமாக விளங்குகின்றது. -செர்வான்டிஸ்[1]
- மக்கள் இறைவனிடம் இரக்கம் பெற நாம் அனுப்பிவிடுகிறோமே அன்றி. நாமாக இரக்கம் காட்டுவதில்லை. - ஜியார்ஜ் எலியட்[1]