உள்ளடக்கத்துக்குச் செல்

32 இருமம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

32-இருமம் என்பது கணினி கட்டுமானத்தில், 32 இலக்க இருமங்களை அடிப்படையாகக் கொண்டு நினைவகங்களையும், தரவுகளையும் கொண்டுள்ள நுண்செயலிகளையும், நுண்கணினியும் இவ்வகையான கட்டுமானத்தில் இயங்கி வருகின்றவை 32-இருமம் கணினி எனவும் அதற்கு பயன்படுத்தப்படும் மென்பொருட்களும் இதனை அடிப்படையாகக் கொண்டு செயல்படும் மென்பொருட்களை, 32 - இரும மென்பொருள் (ஆங்கிலத்தில் 32 - bit application) என அழைப்பார்கள்.

இந்த 32-இருமத்தினாலான இன்டிசரினுடைய மதிப்பு, 0 முதல் 4 294 967 295 வரை இருக்கும். இவ்வாறு, ஒரு 32-இரும நினைவக முகவரி நுண்சயலியானது நேரடியாக 4 ஜிகாபைட் வரை நினைவகத்தில் இயக்க முடியும்.

கட்டுமானம்

[தொகு]

நினைவகம், பிற எண்ணிமசுசுற்று பலகைகள், கணினி மின்/மின்னணு வடங்கள் என முக்கியமானவை அனைத்தும், 32-இரும கணியக் கட்டகத்தின், முதல் பத்தாண்டுகள் (the 1960s to the 1980s) விலை மிக்கதாக இருந்தன.[1] Older 32-இரும முறை பயன்படுத்தப்பட்ட கட்டுமானங்களில் ஐ.பி.எம் நிறுவனத்தின் ஐபிஎம் சிஸ்டம்/360 வகை மிகவும் முன்னோடியானது, அதன்பிறகு டி.இ.சி. நிறுவனத்தின் வேக்ஸ் (VAX), மோட்டோரோலா நிறுவனத்தின் மோட்டோரோலா 68கெ, ஏ.ஆர். எம் கட்டுமானம், இன்டெல் நிறுவனத்தின் ஐஏ-32, மற்றும் ஸ்பார்க் (SPARC)32- இரும பதிப்பு, மிப்ஸ் கட்டுமானம் (MIPS architecture), பவர்பிசி (PowerPC), மற்றும் பிஏ-ரிஸ்க் (PA-RISC) கட்டுமானம் உள்ளிட்டவை 32 - இருமத்தை அடிப்படையாகக் கொண்டு வடிவமைக்கப்பட்டன.

படிமங்கள்

[தொகு]

எண்முறை படிமங்களில், 32-இருமம் என்பது 24-இருமம் வண்ணத்தின் ஆழத்தினையும், 8-இருமம் ஆல்பா கலவையையும் குறிக்கிறது.

32- இரும கோப்பு வடிவம்

[தொகு]

32-இரும கோப்பு வடிவமானது, 32- இருமத்தை(அல்லது 4 பைட்டுகளை) அடிப்படையாகக் கொண்ட ஒரு இரும கோப்பு வடிவமாகும். எ.கா. மேம்படுத்தப்பட்ட மீக்கோப்பு வடிவம் (வின்டோசு மீக்கோப்பு வடிவம்).

மேற்கோள்கள்

[தொகு]
  1. Patterson, David; Ditzel, David (2000). Readings in Computer Architecture. San Diego: Academic Press. p. 136. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9781558605398.

இவற்றையும் பார்க்கவும்

[தொகு]
  • 16 இருமம்
  • 16 இரும மென்பொருள்
  • 32 இரும மென்பொருள்
  • 64 இருமம்

குறிப்புகளும் மேற்கோள்களும்

[தொகு]

வெளி இணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=32_இருமம்&oldid=3622618" இலிருந்து மீள்விக்கப்பட்டது