1926
Appearance
ஆயிரமாண்டு: | 2-ஆம் ஆயிரமாண்டு |
---|---|
நூற்றாண்டுகள்: | |
பத்தாண்டுகள்: | |
ஆண்டுகள்: |
1926 | |
கிரெகொரியின் நாட்காட்டி | 1926 MCMXXVI |
திருவள்ளுவர் ஆண்டு | 1957 |
அப் ஊர்பி கொண்டிட்டா | 2679 |
அர்மீனிய நாட்காட்டி | 1375 ԹՎ ՌՅՀԵ |
சீன நாட்காட்டி | 4622-4623 |
எபிரேய நாட்காட்டி | 5685-5686 |
இந்து நாட்காட்டிகள் - விக்ரம் ஆண்டு - சக ஆண்டு - கலி யுகம் |
1981-1982 1848-1849 5027-5028 |
இரானிய நாட்காட்டி | 1304-1305 |
இசுலாமிய நாட்காட்டி | 1344 – 1345 |
சப்பானிய நாட்காட்டி | Taishō 15Shōwa 1 (昭和元年) |
வட கொரிய நாட்காட்டி | 15 |
ரூனிக் நாட்காட்டி | 2176 |
யூலியன் நாட்காட்டி | கிரகோரியன் நாட்காட்டி 13 நாட்கள் குறைக்கப்பட்டு |
கொரிய நாட்காட்டி | 4259 |
1926 (MCMXXVI) ஒரு வெள்ளிக்கிழமையில் ஆரம்பமான ஒரு சாதாரண கிரிகோரியன் ஆண்டாகும்.
நிகழ்வுகள்
[தொகு]- ஜனவரி 1 - துருக்கி கிரிகோரியன் நாட்காட்டிக்கு மாறியது.
- ஜனவரி 3 - தியோடோரஸ் பங்காலொஸ் கிரேக்கத்தின் சர்வாதிகாரியாக தன்னை அறிவித்தான்.
- ஜனவரி 6 - அன்னை தெரேசா கல்கத்தாவிற்கு வந்தார்.
- ஜனவரி 8 - அப்துல்-அசீஸ் இபன் சாவுட் ஹெஜாஸ் நாட்டின் மன்னராக முடிசூடி அதன் பெயரை சவுதி அரேபியா என மாற்றினார்.
- ஜனவரி 26 - ஜோன் லோகி பெயர்ட் தொலைக்காட்சிப் பெட்டி யை காட்சிப்படுத்தினார்.
- ஏப்ரல் 7 - முசோலினி மீதான கொலை முயற்சி தோல்வியடைந்தது.
- ஏப்ரல் 16 - கொஸ்டா ரிக்காவில் தொடருந்து விபத்துக்குள்ளாகியதில் 178 பேர் கொல்லப்பட்டனர்.
- மே 12 -ருவால் அமுன்சென் வட துருவம் மீது பறந்தார்.
- மே 12–14 - இராணுவப் புரட்சியை அடுத்து ஜோசெப் பில்சூட்ஸ்கி போலந்தின் ஆட்சியைக் கைப்பற்றினார்.
- சூலை 9 - இராணுவப் புரட்சியை அடுத்து இராணுவத் தளபதி அந்தோனியோ கார்மோனா போர்த்துக்கலின் ஆட்சியைக் கைப்பற்றினார்.
- ஆகத்து 22 - கிரேக்கத்தில் தியோடோரஸ் பங்காலொஸ் ஆட்சியில் இருந்து அகற்றப்பட்டார்.
- அக்டோபர் 20 - கியூபாவில் கிளம்பிய சூறாவளியினால் 650 பேர் கொல்லப்பட்டனர்.
- நவம்பர் 10 - ஹிரோஹிட்டோ ஜப்பானின் 124வது பேரரசராக முடிசூடினார்.
- நவம்பர் 24 - பாண்டிச்சேரியில் உள்ள ஸ்ரீ அரவிந்தர் ஆசிரமத்தின் பொறுப்பை அன்னையிடம் ஒப்படைத்து விட்டு அரவிந்தர் இளைப்பாறினார்.
- டிசம்பர் 17 - லித்துவேனியாவில் இடம்பெற்ற இராணுவப் புரட்சியை அடுத்து மக்களாட்சி அரசு கலைக்கப்பட்டு அண்டானஸ் சிமெத்தோனா ஆட்சியைப் பிடித்தார்.
- டிசம்பர் 18 - துருக்கி கிரிகோரியன் நாட்காட்டிக்கு மாறியது. 'நாளை' ஜனவரி 1 1926க்கு மாற்றப்பட்டது.
நாள் அறியப்படாதவை
[தொகு]- ஒலியுடன் கூடிய முதலாவது திரைப்படம் Don Juan வெளியிடப்பட்டது.
பிறப்புகள்
[தொகு]- ஜனவரி 5 - ஜோசுவா பெஞ்சமின் ஜெயரத்தினம், சிங்கப்பூரின் அரசியல்வாதி (இ. 2008)
- ஜனவரி 15 - காசாபா தாதாசாகேப் சாதவ், இந்தியா ஒலிம்பிக் வீரர் (இ. 1984)
- ஜனவரி 22 - தி. வே. கோபாலையர், தமிழறிஞர் (இ. 2007)
- பெப்ரவரி 18 - வ. ஐ. சுப்பிரமணியம், மொழியியல் அறிஞர் (இ. 2009)
- ஏப்ரல் 21 - ஐக்கிய இராச்சியத்தின் இரண்டாம் எலிசபெத்
- ஜூன் 1 - மர்லின் மன்றோ அமெரிக்க நடிகை (இ. 1962)
- ஜூன் 8 - சுகார்ட்டோ, இந்தோனேசியாவின் அதிபர் (இ. 2008)
- ஆகத்து 2 - ஜோர்ஜ் ஹபாஷ், பாலஸ்தீன அரசியல்வாதி (இ. 2008)
- ஆகத்து 13 - பிடல் காஸ்ட்ரோ, கியூபாவின் அரசுத்தலைவர், புரட்சியாளர் (இ. 2016)
- அக்டோபர் 15 - மிஷேல் ஃபூக்கோ, சிந்தனையாளர் (இ. 2984)
- நவம்பர் 23 - சத்திய சாயி பாபா, தென்னிந்தியச் சமயத் தலைவர்
இறப்புகள்
[தொகு]- டிசம்பர் 5 - கிளாடு மோனெ, பிரெஞ்சு ஓவியர் (பி. 1840)
நோபல் பரிசுகள்
[தொகு]- இயற்பியல் - ஜான் பப்டிஸ்ட் பெரின்
- வேதியியல் - தியோடர் சுவெட்பேர்க்
- மருத்துவம் - ஜொகான்னஸ் அண்ட்ரியாஸ் கிரிப் ஃபிபிகர்
- இலக்கியம் - கிரேசியா டெலெடா
- அமைதி - அரிஸ்டிட் பிரயாண்ட், குஸ்டாவ் ஸ்ட்ரெஸ்மன்