உள்ளடக்கத்துக்குச் செல்

ஸ்கர்டு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஸ்கர்டு நகர புத்தர் சிலைகள்
ஜில்ஜிட் - பால்டிஸ்தானில் ஸ்கர்டு நகரத்தின் அமைவிடம்
ஸ்கர்டு கோட்டை
சாங்கிரி லா பண்ணை வீடு

ஸ்கர்டு (Skardu) (உருது: سکردو‎, வார்ப்புரு:Lang-bft), இந்தியாவின் ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் கார்கில் பகுதிக்கு மேல் உள்ள ஜில்ஜிட் - பால்டிஸ்தானின் ஸ்கர்டு மாவட்டம் மற்றும் பல்திஸ்தான் கோட்டத்தின் [1]நிர்வாகத் தலைமையிட நகரம் ஆகும்.

அமைவிடம்

[தொகு]

இமயமலையின் காரகோரம் மலைத்தொடரில், கடல்மட்டத்திலிருந்து 2,500 மீட்டர் உயரத்தில், 10 கிமீ அகலமும்; 40 கிமீ நீளமும் கொண்ட உள்ள ஸ்கர்டு சமவெளியில், சிந்து ஆறு - சிகார் ஆறு கலக்குமிடத்தில் ஸ்கர்டு நகரம் அமைந்துள்ளது.

வரலாறு

[தொகு]

ஜம்மு காஷ்மீர் இராச்சியத்தின் ஜில்ஜிட் பால்டிஸ்தான் பகுதியில் உள்ள ஸ்கர்டு மாவட்டத்தின் தலைமையிட நகரம் ஆகும். ஆகஸ்டு, 1947, இந்திய பாகிஸ்தான் பிரிவினையின் போது நடைபெற்ற காஷ்மீர் ஆக்கிரமிப்பு போரில், பாகிஸ்தான் நாடு, ஜில்ஜில்-பால்டிஸ்தான் பகுதிகளை தன்னுடன் இணைத்துக் கொண்டது. காஷ்மீரத்திலிருந்து பாகிஸ்தான் இணைத்துக் கொண்ட பகுதிகளுக்கு தன்னாட்சி வழங்கியுள்ளது. [2]

தட்பவெப்பம்

[தொகு]

ஸ்கர்டு நகரத்தில் கோடைக்காலத்தில் அதிக பட்ச வெப்பம் 27 °C (81 °F), குறைந்த வெப்பம் 8 °C (46 °F) கொண்டிருக்கும். குளிர்காலத்தில் −10 °C (14 °F) முதல் −24.1 °C (−11 °F) வரை வெப்பம் கொண்டிருக்கும். [3]

இதனையும் காண்க

[தொகு]

மேற்கோள்கள

[தொகு]
  1. Skardu, District. "Skardu District". www.skardu.pk. Skardu.pk. Archived from the original on 24 நவம்பர் 2016. பார்க்கப்பட்ட நாள் 23 November 2016.
  2. Nawaz, Shuja (May 2008), "The First Kashmir War Revisited", India Review, 7 (2): 115–154, எண்ணிம ஆவணச் சுட்டி:10.1080/14736480802055455
  3. "Skardu Climate Data". web.archive.org. 2014. Archived from the original on 13 June 2010. பார்க்கப்பட்ட நாள் 18 February 2014.
Bibliography

மேலும் படிக்க

[தொகு]
  • Jettmar, Karl et al. (1985): Zwischen Gandhara und den Seidenstrassen: Felsbilder am Karakorum Highway: Entdeckungen deutsch-pakistanischer Expeditionen 1979–1984. 1985. Mainz am Rhein, Philipp von Zabern.
  • Jettmar. Karl (1980): Bolor & Dardistan. Karl Jettmar. Islamabad, National Institute of Folk Heritage.

வெளி இணைப்புகள்

[தொகு]
விக்கிமீடியா பொதுவகத்தில்,
Skardu
என்பதில் ஊடகங்கள் உள்ளன.
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஸ்கர்டு&oldid=3573542" இலிருந்து மீள்விக்கப்பட்டது