லிஸ்டு நகரம்
லிஸ்டு | |
---|---|
ஆள்கூறுகள்: 29°34′13″N 31°13′52″E / 29.57028°N 31.23111°E | |
நாடு | எகிப்து |
மாநிலம் | கீசா |
நேர வலயம் | ஒசநே+2 (எகிப்திய சீர் நேரம்) |
• கோடை (பசேநே) | +3 |
லிஸ்டு அல்லது எல் லிஸ்டு (Lisht or el-Lisht) (அரபு மொழி: اللشت, romanized: Al-Lišt), எகிப்து நாட்டின் தெற்கில் உள்ள கீசா மாநிலத்தில் உள்ள பண்டைய கிராமம் மற்றும் தொல்லியல் களம் ஆகும்.[1] இது எகிப்தின் தலைநகரான கெய்ரோ நகரத்திற்கு தெற்கே 91 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ளது. இதனருகில் பண்டைய இட்ஜ்தாவி நகரம் உள்ளது.
பண்டைய எகிப்தை ஆண்ட மத்தியகால இராச்சியத்தை ஆண்ட் 12-ஆம் வம்சத்தின் (கிமு 1991 – கிமு 1802) மன்னர்களான முதலாம் அமெனம்ஹத் மற்றும் முதலாம் செனுஸ்ரெத் ஆகியோரின் பிரமிடுகள் லிஸ்டு நகரத்தில் உள்ளது. இம்மன்னர்களின் பிரமிடு வளாகங்களைச் சுற்றி அரச குடும்பத்தினரின் சிறிய பிரமிடுகள் மற்றும் அரச அலுவலர்களின் மஸ்தபா எனும் நினைவுக்கட்டிடங்கள் உள்ளது.
அகழாய்வுகள்
[தொகு]லிஸ்டு தொல்லியல் களத்தை பிரான்சு நாட்டு எகிப்தியவியல் அறிஞர் கஸ்டோன் மாபிரே என்பவர் 1882 முதல் 1885 வரை அகழாய்வு செய்தார். பின்னர் நியூயார்க் நகர பெருநகரக் கலை அருங்காட்சியகத்தினர் 1906 முதல் 1934 முடிய அகழாய்வு செய்தனர்.[2]
இதனையும் காண்க
[தொகு]மேற்கோள்கள்
[தொகு]- ↑ Peust, Carsten (2010). Die Toponyme vorarabischen Ursprungs im modernen Ägypte. Göttingen. p. 57.
{{cite book}}
: CS1 maint: location missing publisher (link) - ↑ "Middle Kingdom Tomb Architecture at Lisht: The Metropolitan Museum of Art Egyptian Expedition | MetPublications | The Metropolitan Museum of Art". www.metmuseum.org. பார்க்கப்பட்ட நாள் 2018-02-26.
உசாத்துணை
[தொகு]- Hayes, William C. (1953). The Scepter of Egypt- A Background for the Study of the Egyptian Antiquities in the Metropolitan Museum of Art. Vol. 1.
- Mace, Arthur Cruttenden; Winlock, Herbert Eustis; Smith, Grafton Elliot (1916). The Tomb of Senebtisi at Lisht. New York: The Gilliss.
- Arthur Cruttenden Mace (1921). "Excavations at Lisht". Bulletin of the Metropolitan Museum of Art (New York: The Gilliss) (Egyptian Expedition for MCMXX–MCMXXI): 5–19. doi:10.2307/3254484.