ராயன்
ராயன் | |
---|---|
பட வெளியீட்டுச் சுவரொட்டி | |
இயக்கம் | தனுஷ் |
தயாரிப்பு | கலாநிதி மாறன் |
கதை | தனுஷ் |
இசை | ஏ. ஆர். ரகுமான் |
நடிப்பு | |
ஒளிப்பதிவு | ஓம் பிரகாஷ் |
படத்தொகுப்பு | பிரசன்னா ஜி. கே. |
கலையகம் | சன் படங்கள் |
வெளியீடு | 26 சூலை 2024 |
ஓட்டம் | 145 நிமிடங்கள் |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
ஆக்கச்செலவு | ₹85 கோடி[1][2] |
ராயன் (Raayan)[3][4] என்பது தனுஷ் இயக்கி சன் படங்கள் நிறுவனத்தின் கீழ் கலாநிதி மாறன் தயாரிப்பில் சூலை 2024இல் வெளிவந்த தமிழ் திரைப்படமாகும்.[5] இதில் தனுஷ் தலைப்புப் பாத்திரத்தில் நடிக்கிறார். இவருடன் எஸ்.ஜே.சூர்யா, பிரகாஷ் ராஜ், செல்வராகவன், சந்தீப் கிசன், காளிதாஸ் ஜெயராம், துசாரா விச்சயன், அபர்ணா பாலமுரளி, வரலட்சுமி சரத்குமார் ஆகியோர் நடித்துள்ளனர்.
தனுஷ் முன்னணி நடிகராக நடிக்கும் 50வது படம் என்பதால் , D50 [a][8] என்ற தற்காலிகத் தலைப்பில் ஜனவரி 2023 இல் இப்படம் அறிவிக்கப்பட்டது. பின்னர், அதிகாரப்பூர்வ தலைப்பு பிப்ரவரி 2024 இல் வெளியிடப்பட்டது. முதன்மை புகைப்படம் எடுத்தல் ஜூலை 2023 இல் தொடங்கியது. இது முக்கியமாக சென்னை மற்றும் காரைக்குடியில் படமாக்கப்பட்டது. 2023 டிசம்பர் நடுப்பகுதியில் படப்பிடிப்பு முடிவடைந்தது. இந்தப் படத்திற்கு ஏ. ஆர். ரகுமான் இசையமைத்துள்ளார். ஓம் பிரகாஷ் ஒளிப்பதிவு செய்துள்ளார். பிரசன்னா ஜி. கே. படத்தொகுப்பு செய்துள்ளார்.
'ராயன்' 2024 சூன் 13 அன்று திரையரங்குகளில் வெளியிட திட்டமிடப்பட்டது. ஆனால் அறியப்படாத காரணங்களால் ஒத்திவைக்கப்பட்டது. தனுஷின் பிறந்தநாளை ஒட்டி, 2024 சூலை 26 அன்று உலகம் முழுவதும் வெளியானது.[9][10]
கதை சுருக்கம்
[தொகு]பெற்றோர் இல்லாத “ராயன்” என்கிற காத்தவராயன் தனது நான்கு உடன்பிறந்தவர்களுடன் வாழ்ந்து வருகிறான். அவன் வசிக்கும் இடத்தில் பல வன்முறை கும்பல் செயல்பட்டு வருகிறது. அதிலிருந்து தனது உடன்பிறந்தவர்களை விலகியிருக்க முயர்சி மேற்கொள்கிறான். ஆனாலும் ஒரு கட்டத்தில் தனது சகோதரன் செய்யும் ஒரு தவறால் ராயனும் வன்முறையில் ஈட்டுபட வேண்டியதாகிறது. அதன் பிறகு ராயனின் வாழ்க்கை எவ்வாறு போகிறது? அவனது சகோதரர்கள் என்ன செய்கிறார்கள் என்பதே மீதிக் கதை.
நடிகர்கள்
[தொகு]தயாரிப்பு
[தொகு]தனுஷ், 2017 திசம்பர் 29 அன்று, ப. பாண்டி (2017) படத்திற்குப் பிறகு தனது இரண்டாவது இயக்கத்தில், தேனாண்டாள் படங்கள் நிறுவனத்தின் நிர்வாகிகள் ஹேமா ருக்மணி மற்றும் முரளி ராமசாமியுடன் இணைந்து பணியாற்றப் போவதாக அறிவித்தார்.[11][12][13] தமிழ், தெலுங்கு என இருமொழித் திரைப்படமான இதில் நாகார்ஜுனா, அதிதி ராவ் ஹைதாரி, எஸ். ஜே. சூர்யா, சரத்குமார், ஸ்ரீகாந்த் ஆகியோர் நடித்துள்ளனர்.[14][15][16] இசையமைப்பாளர் ஷான் ரோல்டன், ஒளிப்பதிவாளர் ஓம் பிரகாஷ், படத்தொகுப்பாளர் பிரசன்னா ஜி. கே. ஆகியோர் குழுவில் சேர்க்கப்பட்டனர்.[17]
விமர்சனம்
[தொகு]திரைப்படம் விமர்சகர்களிடமிருந்து நேர்மறையான விமர்சனங்களைப் பெற்றது. தனுஷின் நடிப்பு, இயக்கம் மற்றும் திரைக்கதை மற்றும் ஏ. ஆர். ரகுமானின் பின்னணி இசை ஆகியவற்றைப் பாராட்டினர். அதே நேரத்தில் இடைவேளைக்குப் பிந்தைய பகுதிகளில் கதைக்களம் மற்றும் உரையாடல் விமர்சனங்களைப் பெற்றது.[18]
குறிப்புகள்
[தொகு]- ↑ The project was also referred under the working title DD2, as it also is Dhanush's second directorial venture.[6][7]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Kollywood, Only (2023-04-08). "D50: Dhanush's next directorial to be made on a budget of 100 crores". Only Kollywood (in அமெரிக்க ஆங்கிலம்). Archived from the original on 15 May 2024. பார்க்கப்பட்ட நாள் 2024-05-15.
- ↑ "'Raayan': Dhanush's 50th film gets A certificate, check out its runtime". India Today (in ஆங்கிலம்). 2024-07-10. பார்க்கப்பட்ட நாள் 2024-07-10.
- ↑ "Dhanush's directorial 'Raayan' is a revenge action drama". The Times of India. 2024-05-09 இம் மூலத்தில் இருந்து 16 May 2024 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20240516160005/https://timesofindia.indiatimes.com/entertainment/tamil/movies/news/dhanushs-directorial-raayan-is-a-revenge-action-drama/articleshow/109982953.cms.
- ↑ "Sun Pictures's D50 'Rayaan': Dhanush Unveils 'Raayan' with a Fiery First Look - Tamil News". IndiaGlitz.com. 2024-02-19. பார்க்கப்பட்ட நாள் 2024-07-10.
- ↑ "Dhanush's second directorial goes on the floors". The Times of India. 2018-09-07 இம் மூலத்தில் இருந்து 28 November 2022 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20221128100013/https://timesofindia.indiatimes.com/entertainment/tamil/movies/news/dhanushs-second-directorial-goes-on-the-floors/articleshow/65716549.cms.
- ↑ "D50: Dhanush is Bald, Poses Shirtless in DD2 Poster, Movie Commences Filming". News18 (in ஆங்கிலம்). 2023-07-06. Archived from the original on 2 August 2023. பார்க்கப்பட்ட நாள் 2024-05-15.
- ↑ "Dhanush Announces D50 Shoot With Special Poster; Fans Can't Keep Calm | India.com". www.india.com (in ஆங்கிலம்). Archived from the original on 15 May 2024. பார்க்கப்பட்ட நாள் 2024-05-15.
- ↑ "Anu Emmanuel roped in to Dhanush's second directorial". தி டைம்ஸ் ஆஃப் இந்தியா. 12 October 2018 இம் மூலத்தில் இருந்து 27 ஜூலை 2024 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20240727062556/https://currentserial.net/raayan-movie-review/.
- ↑ "Raayan: Release date of Dhanush's film gets postponed". www.moviecrow.com. Archived from the original on 1 June 2024. பார்க்கப்பட்ட நாள் 2024-06-05.
- ↑ "Raayan new release date: Dhanush-led action thriller to arrive in theaters two weeks after Kamal Haasan's Indian 2". PINKVILLA (in ஆங்கிலம்). 2024-06-10. பார்க்கப்பட்ட நாள் 2024-06-10.
- ↑ IANS (2017-12-29). "Dhanush's next directorial with Sri Thenandal Films" (in en-IN). The Hindu இம் மூலத்தில் இருந்து 14 December 2022 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20221214200520/https://www.thehindu.com/entertainment/movies/dhanushs-next-directorial-with-sri-thenandal-films/article22326386.ece.
- ↑ Native, Digital (2017-12-29). "Dhanush to play the lead in second directorial venture". The News Minute (in ஆங்கிலம்). Archived from the original on 17 May 2024. பார்க்கப்பட்ட நாள் 2024-05-15.
- ↑ "Dhanush spills the beans on his second directorial venture". India Today (in ஆங்கிலம்). 2017-12-29. Archived from the original on 25 December 2023. பார்க்கப்பட்ட நாள் 2024-05-15.
- ↑ Native, Digital (2018-09-07). "Nagarjuna to star in Dhanush's second directorial". The News Minute (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2024-05-28.
- ↑ "Details of Dhanush's second directorial bi-lingual venture #DD2 revealed!". தி டைம்ஸ் ஆஃப் இந்தியா. 7 September 2018 இம் மூலத்தில் இருந்து 25 December 2023 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20231225054020/https://timesofindia.indiatimes.com/entertainment/telugu/movies/news/details-of-dhanushs-second-directorial-bi-lingual-venture-dd2-revealed/articleshow/65717168.cms?from=mdr.
- ↑ "Dhanush's second directorial starring Nagarjuna, Sarath Kumar goes on floors". தி நியூ இந்தியன் எக்சுபிரசு. 8 September 2018. Archived from the original on 5 September 2019. பார்க்கப்பட்ட நாள் 20 December 2023.
- ↑ "Dhanush's second directorial starring Nagarjuna, Sarath Kumar goes on floors". தி நியூ இந்தியன் எக்சுபிரசு. 8 September 2018. Archived from the original on 5 September 2019. பார்க்கப்பட்ட நாள் 20 December 2023.
- ↑ "403 unauthorized". www.latestly.com (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2024-07-26.