உள்ளடக்கத்துக்குச் செல்

யி சிங்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
யி சிங்கின் ஓவியம்

யி சிங் (Yi Xing, சீனம்: 一行; பின்யின்: Yī Xíng; 683–727) ஒரு சீன வானியலாளரும், கணிதவியலாளரும், எந்திரப் பொறியாளரும், பௌத்த மதகுருவும் ஆவார். இவர் தாங் பேரரசு காலத்தவர் (618-907). அவரது விண்கோளம் ஒரு விடுவிப்பு இயங்கமைப்பு உள்ள கடிகாரத்தைக் கொண்டிருந்தது. இதுவே முதல் சீன மரபு வானியல் கடிகாரமாகும்.

அறிவியல் தொழில்நுட்பம்

[தொகு]

நில-வான் அளவையியல்

[தொகு]

கிபி எட்டாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் தாங் பேரரசு அரசவை யி சிங்குக்கு நில-வான் அளவைத் துறையின் பொறுப்பைத் தந்தது.[1] இந்த அளக்கைக்குப் பல நோக்கங்கள் இருந்தன. ஒரு நோக்கம் சூரிய ஒளி மறைப்புகளை முன்கணிக்கத் தேவையான புதிய வானியல் தரவுகளைப் பெறுதலாகும்.[1] மேலும் பழைய சீனக் காலந்தரலமைப்பில் உள்ள குறைகளை நீக்கி அண்மைப்படுத்தி அதனிடத்தில் புதிய காலந்தரலமைப்பை நிறுவுதல் ஆகும்.[1] இந்த அளக்கை வான்கோள நெடுவரை வில்லின் நீளத்தை அளந்து தீர்மானிக்கவும் தேவைப்பட்டது.[1] மேலும் புவி நெட்டாங்கில் உள்ள இரண்டு இடங்களின் தொலைவை அவ்விடங்களில் ஒரே நேரத்தில் விழும் சூரிய நிழல்களின் நீளவேறுபாட்டால் காணும் முந்தைய நடைமுறையில் நிலவிய குழப்பத்தைத் தீர்க்கவும் இந்த அளக்கை உதவியது.[1] இது பண்டைய கிரேக்கரான எராட்டோதெனீசு பயன்படுத்திய அதே வழிமுறையே ஆகும். (கிமு 276-196).[1]

யி சிங் வியட்நாமில் உள்ள யாவோழௌ, அகலாங்கு (17°வ) இலிருந்து அதற்குச் சற்றே தெற்கில் இருந்த பைக்கால் ஏரி, அகலாங்கு (50°வ) வரை பேரரசின் 13 இடங்களைத் தேர்ந்தெடுத்தார்.[2] ஒவ்வோரிடத்திலும் மூன்று நோக்கீடுகள் எடுக்கப்பட்டன. இதில் ஒன்று போலாரிசு உயரத்துக்காகவும் மற்றொன்று கோடை நிழல்களின் நீளங்களுக்காகவும் அடுத்தது குளிர்கால நிழல்களின் நீளங்களுக்காகவும் எடுக்கப்பட்டது.[2] இந்தத் தரவுகளில் இருந்து அகலாங்குகள் கண்டறியப்பட்டன. அவரது நெடுவரை (நெட்டாங்கு) வில்லின் ஒரு பாகைக்கான தொலைவு இக்கால அளவு மதிப்புக்கு மிக நெருக்கமாக இருந்தது.[2] யி சிங் ஒரு பாகை நெட்டாங்கின் நீளங்கள் வேறுபடும் என்பதை நன்கு உணர்ந்திருந்தார். சூரிய நிழல் அளவுகளும் ஒராண்டு முழுவதும் வேறுபடும் என்றார். எனவே அம்மதிப்புகளை மாறாத ஒரே அளவாகக் கருதிய முந்தைய சீன அறிஞர்களைக் கண்டித்தார்.[2]

புத்தவியற் புலமை

[தொகு]

மகாவைரோசன தந்திரா என்ற நூலுக்கு யி சிங் உரையொன்றை எழுதியுள்ளார். இந்நூல் சப்பானிய பிக்குவான கூகை என்பவர் மீது பெரும் தாக்கம் செலுத்தி ஷிங்கான் பௌத்தம் எனும் பிரிவை நிறுவிட வழிவகுத்தது.[3]

அவர் நினைவாக

[தொகு]

சேசியாங் மாநிலத்தில் உள்ள தியாந்தை மலை புத்த குவோகிங் கோயிலுக்கு வெளியே சீன விகாரை ஒன்று, யி சிங் பிக்கு விகாரை என இவரது நினைவாக நிறுவப்பட்டுள்ளது. மேலும் தியாந்தை மலையில் இவரது கல்லறை ஒன்றும் உள்ளது.

குறிப்புகள்

[தொகு]
  1. 1.0 1.1 1.2 1.3 1.4 1.5 Hsu, 98.
  2. 2.0 2.1 2.2 2.3 Hsu, 99.
  3. Rethinking Japan p.330

மேற்கோள்கள்

[தொகு]
  • Hsu, Mei-ling. "The Qin Maps: A Clue to Later Chinese Cartographic Development," Imago Mundi (Volume 45, 1993): 90-100.
  • Ju, Zan, "Yixing" பரணிடப்பட்டது 2007-09-29 at the வந்தவழி இயந்திரம். Encyclopedia of China (Religion Edition), 1st ed.
  • Needham, Joseph (1986). Science and Civilization in China: Volume 3. Taipei: Caves Books, Ltd.
  • Needham, Joseph (1986). Science and Civilization in China: Volume 4, Part 2. Taipei: Caves Books, Ltd.
  • Boscaro, Adriana (2003) Rethinking Japan: Social Sciences, Ideology and Thought. Routledge. 0-904404-79-x p. 330

வெளி இணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=யி_சிங்&oldid=4022661" இலிருந்து மீள்விக்கப்பட்டது