உள்ளடக்கத்துக்குச் செல்

முகவை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
முகவைBeaker
வெவ்வேறு அளவுகளில் முகவைகள்
பயன்பாடுதிரவ அளவு கட்டுப்பாடு
அளத்தல்
தொடர்புடைய கருவிகள்ஆய்வுக்கூட கொள்கலன்

முகவை (beaker) என்பது ஆய்வக்கூடங்களில் பயன்படுத்தப்படும் தட்டையான அடிப்பகுதியுடன் உருளை வடிவம் கொண்ட கொள்கலனாகும்.[1] பெரும்பாலான முகவைகள் படத்தில் காட்டப்பட்டுள்ளபடி, பக்கவாட்டில் ஒரு சிறிய மூக்குக் குழாய் அமைப்பு வைக்கப்பட்டிருக்கும். ஒரு மில்லிலிட்டர் முதல் பல லிட்டர்கள் வரை அளவு கொண்ட பரந்த அளவிலான அளவுகளில் முகவைகள் கிடைக்கின்றன. குடுவைக்கும் முகவைக்கும் உள்ள வேறுபாடு யாதெனில் குடுவைகள் சாய்வான பக்கங்களைக் கொண்டிருக்கும். முகவையின் பக்கங்கள் சாய்வில்லாமல் நேராக இருக்கும்.[2] இந்த வரையறைக்கு விதிவிலக்கு பிலிப்சு முகவைகள் ஆகும். இவை சற்றே கூம்பு-பக்க வகை முகவையாகும்.

முகவைகள் பொதுவாக கண்ணாடியால் செய்யப்படுகின்றன.[3] நவீன முகவைகள் பொதுவாக போரோசிலிக்கேட்டு கண்ணாடியால் செய்யப்படுகின்றன. ஆனால் துருப்பிடிக்காத எஃகு அல்லது அலுமினியம் போன்ற உலோகங்களிலும் அல்லது பாலித்தீன், பாலிபுரோப்பைலீன் போன்ற சில வகை நெகிழிகளாலும் உருவாக்கப்படுகின்றன. பாலிபுரோப்பைலீன் வகை பீக்கர்களுக்கான பொதுவான பயன்பாடு திரவ மற்றும் திட மாதிரிகளின் காமா நிறமாலை பகுப்பாய்வு ஆகும்.

மேற்கோள்கள்

[தொகு]
  1. Oxford English Dictionary 1989 edition
  2. "Understanding Lab Beakers: A Comprehensive Exploration".
  3. British Standard 6523 (1984) Glass beakers for original experiments use
"https://ta.wikipedia.org/w/index.php?title=முகவை&oldid=4208308" இலிருந்து மீள்விக்கப்பட்டது