உள்ளடக்கத்துக்குச் செல்

மிதாசு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
மிதாசு தொன்மத்தின் நதானியேல் ஹாவ்தோர்ன் பதிப்பில், மிதாசு தன் மகளைத் தொடும்போது அவள் தங்கச் சிலையாக மாறுகிறாள் (1893 பதிப்பிற்கான வால்டர் கிரேனின் சித்தரிப்பு)

மிதாசு (Midas, (/ˈmdəs/; கிரேக்கம்: Μίδας) என்பவர் பிரிஜியாவின் அரச மரபில் குறைந்தபட்சம் மூன்று நபர்களில் ஒருவரின் பெயராகும்.

மிகவும் பிரபலமான அரசர் மிதாசு கிரேக்கத் தொன்மவியலில் தொட்டதெல்லாம் தங்கமாக்கும் வரம் பெற்றதாற்காக பிரபலமாக அறியப்படுகிறார். இது கோல்டன் டச் அல்லது மிடாஸ் டச் என்று அழைக்கப்பட்டது. [1] பிரிஜியன் நகரமான மிடேயம் இவரது நினைவாக பெயரிடப்பட்டது. பௌசானியாஸின் கூற்றுப்படி, அன்சிராவை ( இன்று அங்காரா என்று அறியப்படுகிறது) நிறுவிய மிதாசு இவராக இருக்கலாம். [2] அரிசுடாட்டிலின் கூற்றுப்படி, மிதாசு தான் தொட்டதெல்லாம் தங்கமாக மாற வரம் பெற்று அதன் விளைவாக பட்டினியால் இறந்தார் என்று தொன்மக்கதை கூறுகிறது. [3] பிரிஜியன் தலைநகரான கோர்டியத்தை நிறுவிய பெருமை மிதாசு மற்றும் இவரது தந்தை கோர்டியாசு ஆகியோரைச் சேரும் என்று தொன்மங்கள் குறிப்பிடுகின்றன. இவர்கள் திரோயன் போருக்கு முன்பே கிமு 2 ஆம் ஆயிரமாண்டில் வாழ்ந்ததாக நம்பப்படுகிறது. இருப்பினும், ஓமர் மிதாசு அல்லது கோர்டியாசைக் குறிப்பிடவில்லை, அதற்குப் பதிலாக மற்ற இரண்டு பிரிஜியன் மன்னர்களான மைக்டன் மற்றும் ஓட்ரியசைக் குறிப்பிடுகிறார் .

கிமு 8 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் மற்றொரு மன்னரான மிதாசு பிரிஜியாவை ஆட்சி செய்தார். பெரும்பாலான வரலாற்றாசிரியர்கள் இந்த மிதாசு, அசிரிய நூல்களில் முஷ்கியின் அரசர் என்று அழைக்கப்படும் மிடாவின் எனப்படும் நபர் என்று நம்புகிறார்கள். இவர் அதே காலகட்டத்தில் அசிரியா மற்றும் அதன் அனடோலியன் மாகாணங்களுடன் போரிட்டார். [4]

மூன்றாவது மிதாசு, பிரிஜியாவின் அரச குடும்பத்தின் உறுப்பினரும், கிரீசசின் ஆட்சியின் போது தற்செயலாக தனது சகோதரனைக் கொன்று பிரிஜியாவிலிருந்து தப்பி ஓடி லிடியாவில் தஞ்சம் புகுந்த அட்ராஸ்டசின் தாத்தா என எரோடோடசால் குறிப்பிடப்படுகிறார்.

குறிப்புகள்

[தொகு]
  1. In alchemy, the transmutation of an object into gold is known as chrysopoeia.
  2. Pausanias 1.4.5.
  3. Aristotle, Politics, 1.1257b.
  4. See for example Encyclopædia Britannica; also: "Virtually the only figure in Phrygian history who can be recognized as a distinct individual", begins Lynn E. Roller, "The Legend of Midas", Classical Antiquity, 22 (October 1983):299–313.
"https://ta.wikipedia.org/w/index.php?title=மிதாசு&oldid=3404444" இலிருந்து மீள்விக்கப்பட்டது