உள்ளடக்கத்துக்குச் செல்

மகாகௌரி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

மகாகௌரி என்பவள் துர்க்கையின் எட்டாவது அவதாரம் மற்றும் நவதுர்க்கைகளில் ஒருத்தியாவாள் . நவராத்திரியின் எட்டாவது நாளில் மகாகௌரி வழிபடப்படுகிறாள். இந்து மதத்தின் படி, மகாகௌரி தேவி தனது பக்தர்களின் அனைத்து விருப்பங்களையும் நிறைவேற்றும் சக்தி கொண்டவர்.

இவள் நான்கு கரம் கொண்டவள். ஒரு கரம் சூலத்தையும், மறு கரம் மணியையும் தங்கி நிற்கும். மற்ற இரு கரங்கள் பக்தருக்கு அபயம் தரும் வகையில் உள்ளன. இவளின் வாகனம் வெண்மையான காளை ஆகும்.

சொற்பிறப்பியல்

[தொகு]

மகாகௌரி என்பதற்கு அதிக வெளிச்சம் கொண்டவர், நிலவினைப் போல் மின்னுபவர் எனப் பொருள். (மகா-பெரிய, கௌரி-வெளிச்சம், தூய்மை)[1]

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Navratri 2022: Maha Ashtami today, devotees worship Goddess Mahagauri". https://economictimes.indiatimes.com/news/india/navratri-2022-maha-ashtami-today-devotees-worship-goddess-mahagauri/articleshow/94608664.cms. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=மகாகௌரி&oldid=4075331" இலிருந்து மீள்விக்கப்பட்டது