பிழை திருத்தம் (நூல்)
Appearance
இக்கட்டுரை பின்வரும் தலைப்பிலான தொடர்களில் ஒன்று: |
|
அச்சிடப்படும் நூல் தொடர்பில் பிழை திருத்தம் (திரைப்படம்|திருத்தம் என்பது, நூலை உருவாக்கும் போது ஏற்பட்ட பிழைகளையும் அவற்றுக்கான திருத்தத்தையும் கொண்ட ஒரு பட்டியல் ஆகும். இது பொதுவாக நூலின் உரைப்பகுதிக்குப் பின்னால் சேர்த்துக் கட்டப்பட்டிருக்கும்.
பிழைதிருத்தப் பக்கம்
[தொகு]நூலின் பக்கங்கள் அச்சிடப்பட்ட பின்னர் அல்லது திருத்துவதற்கு அதிக நேரம் அல்லது செலவு ஏற்படக்கூடும் என்னும் நிலையில் கண்டுபிடிக்கப்படும் பிழைகளையும் அதற்கான திருத்தங்களையும் இன்னொரு தாளில் அச்சிட்டு நூலுடன் சேர்த்து விடுவது பொதுவாக ஏற்றுக்கொள்ளப்பட்ட ஒரு முறையாகும். இப் பிழை திருத்தப் பக்கத்தில் பிழை ஏற்பட்டிருக்கும் பக்கமும், பிழையான பகுதியும், அதற்கெதிரே திருத்தப்பட்ட பகுதியும் ஒரு அட்டவணை வடிவில் தரப்பட்டிருக்கும்.