உள்ளடக்கத்துக்குச் செல்

பாப் சோதனை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பாப் சோதனை
இடையீடு
ICD-9-CM795.00
MeSHD014626

பேபேசு-பாபனிகொலாவு சோதனை (Babeș–Papanicolaou test) அல்லது சுருக்கி பாப் சோதனை, பாப் பூச்சு, கருப்பை வாய் பூச்சு, பூச்சு சோதனை என்று அழைக்கப்படும் மருத்துவச் சோதனை பெண் இனப்பெருக்கத் தொகுதியின் கருப்பை வாயின் உள்புறத்தில் உள்ள நிலைமாற்ற வழியில் புற்றுநோய் மற்றும் புற்றுநோய்க்கு வித்திட வாய்ப்புள்ள செயல்பாடுகளை முன்ன்றிவதற்காக நடத்தப்படுவதாகும். ஏற்படுகின்ற மாற்றங்களுக்கு மருத்துவச் சிகிட்சை அளிப்பதன் மூலம் கருப்பை வாய்ப் புற்றுநோய் தவிர்க்கப்படுகிறது. இம்முறையைக் கண்டறிந்த கிரேக்க மருத்துவர் ஜியார்ஜியோ பாபனிகொலாவு நினைவாக இந்தச் சோதனை பெயரிடப்பட்டுள்ளது.

கருப்பை வாய் மற்றும் உட்புற கருப்பை வாயின் வெளிப்புற துளைகளிலிருந்து உயிரணுக்களை பாப் பூச்சிற்காக எடுக்க வாகாக யோனியின் வழி உடற்கூறு உட்காட்டி ஒன்றின் உதவியால் விரிவுபடுத்தப்படுகிறது. இவ்வாறு எடுக்கப்பட்ட உயிரணுக்களில் ஏதேனும் இயல்பு மாற்றம் உள்ளதா என நுண்ணோக்கி மூலம் ஆராயப்படுகிறது. புற்றுநோய் வர வாய்ப்பு நல்கும் மாற்றங்களை கண்டறிவதே இந்த சோதனையின் நோக்கமாகும். பால்வினையால் தொற்றிய மனித சடைப்புத்துத் தீ நுண்மங்களால் வழமையாக ஏற்படும் இந்த மாற்றங்கள் கருப்பைவாய் புறவணியிழையிடை புதுப்பெருக்கு (CIN) அல்லது கருப்பைவாய் இயல்பிறழ் வளர்ச்சி என அழைக்கப்படுகிறது. வரவிருக்கும் புற்றுநோய் மற்றும் கருப்பைவாய் புற்றுநோயைக் கண்டறிவதற்காக பரவலாக பயன்படுத்தப்படும் திறனான சோதனையாக பாப் சோதனை உள்ளது. இந்தச் சோதனை மூலம் உட்புற கருப்பைவாய் மற்றும் கருப்பை உட்சளி படலத்தில் உள்ள இயல்பு மாற்றங்களையும் தொற்றுக்களையும் கண்டறிய முடியும்.

பொதுவாக, பாப் பூச்சு வடிகட்டலை வழமையாக நிகழ்த்தும் நாடுகளில், பாலுறவு கொண்ட மகளிர் முறையாக பாப் சோதனையை நாட பரிந்துரைக்கப்படுகிறார்கள். கால இடைவெளியாக மூன்று முதல் ஐந்தாண்டுகளுக்கு ஒருமுறை என பரியப்பட்டுள்ளது.[1][2][3][4] சோதனை முடிவுகள் இயல்பாக இல்லாதிருந்தால், இயல்பு பிறழ்வின் தன்மையைப் பொறுத்து, இந்தச் சோதனை ஆறிலிருந்து பன்னிரெண்டு மாதங்களுக்குள் திரும்பவும் செய்து கொள்ள வேண்டும்.[5] இயல்புப் பிறழ்வு குறித்து ஆழ்ந்த ஆய்வு தேவைப்பட்டால் கருப்பைவாயை விவரமாகப் பார்வையிட அல்குல் அக நோக்கல் செயல்பாட்டிற்கு அனுப்பப் படுகிறார்கள். மேலும் நோயாளி எச்பிவி டிஎன்ஏ சோதனைக்கு உட்படுத்தப்படலாம். பாப் சோதனைக்குத் துணையாக பயன்படுத்தக்கூடிய கூடுதல் உயிரியல் அறிகுறிகள் குறித்த ஆய்வுகள் மேம்பட்டு வருகின்றன.[6]

வடிகட்டல் சோதனை வகைகள்

[தொகு]
  • வழக்கமான பாப் சோதனை—வழக்கமான முறையில் சேகரிக்கப்பட்ட பிறகு மாதிரிகள் நேரடியாக நுண்ணோக்கியின் காட்சிவில்லையில் பூசப்படுதல்
  • நீர்மம் அடிப்படை உயிரணுவியல்—பாப் சோதனை மாதிரி ஒரு குப்பியில் காப்பு வேதிப்பொருளுடன் ஆய்வகத்திற்கு எடுத்துச்செல்லப்பட்டு அங்கு காட்சிவில்லையில் பூசப்படுதல்.

தேவையைப் பொறுத்து கூடுதலாக எச்பிவி சோதனையும் நடத்தப்படலாம்.

மேற்கோள்கள்

[தொகு]
  1. Saslow, D, et al. (2012). "American Cancer Society, American Society for Colposcopy and Cervical Pathology, and American Society for Clinical Pathology Screening Guidelines for the Prevention and Early Detection of Cervical Cancer". Journal of Lower Genital Tract Disease 16. http://journals.lww.com/jlgtd/PublishingImages/ASCCP%20Guidelines.pdf. 
  2. ACOG Committee on Gynecological Practice (2009). "ACOG Committee on Gynecologic Practice; Routine Pelvic Examination and Cervical Cytology Screening, Opinion #413". Obstetrics and Gynecology 113 (5): 1190–1193. doi:10.1097/AOG.0b013e3181a6d022. பப்மெட்:19384150. https://archive.org/details/sim_obstetrics-and-gynecology_2009-05_113_5/page/1190. 
  3. U.S. Preventive Services Task Force (2003). "Screening for Cervical Cancer: Recommendations and Rationale. AHRQ Publication No. 03-515A". Rockville, MD.: Agency for Healthcare Research and Quality. பார்க்கப்பட்ட நாள் June 5, 2010.. {{cite web}}: Check date values in: |accessdate= (help)
  4. American Cancer Society. (2010). Detailed Guide: Cervical Cancer. Can cervical cancer be prevented? Retrieved August 8, 2011.
  5. The American College of Obstetricians and Gynecologists (2009). "ACOG Education Pamphlet AP085 -- The Pap Test". Washington, DC. பார்க்கப்பட்ட நாள் June 5, 2010.. {{cite web}}: Check date values in: |accessdate= (help)
  6. Shidham VB, Mehrotra R, Varsegi G, D'Amore KL, Hunt B, Narayan R. p16 INK4a immunocytochemistry on cell blocks as an adjunct to cervical cytology: Potential reflex testing on specially prepared cell blocks from residual liquid-based cytology specimens. CytoJournal [serial online] 2011 [cited 2011 Apr 17];8:1. Available from: http://www.cytojournal.com/text.asp?2011/8/1/1/76379 பரணிடப்பட்டது 2018-06-02 at the வந்தவழி இயந்திரம்

வெளி இணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=பாப்_சோதனை&oldid=3520357" இலிருந்து மீள்விக்கப்பட்டது