உள்ளடக்கத்துக்குச் செல்

படோன்

ஆள்கூறுகள்: 5°3′S 122°53′E / 5.050°S 122.883°E / -5.050; 122.883
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
படோன்
Buton
புவியியல்
அமைவிடம்தென் கிழக்கு ஆசியா
ஆள்கூறுகள்5°3′S 122°53′E / 5.050°S 122.883°E / -5.050; 122.883
பரப்பளவு4,408 km2 (1,702 sq mi)
நிர்வாகம்
இந்தோனேசியா
Provinceதென்கிழக்கு சுலாவெசி
பெரிய குடியிருப்புபாவ்-பாவ் (மக். 137,118)
மக்கள்
மக்கள்தொகை447,408 (2010)
இனக்குழுக்கள்படோனியர்கள்

படோன் (Buton) இந்தோனேசியாவிலுள்ள சுலாவெசித் தீவின் தென்கிழக்கு தீபகற்பத்தில் அமைந்துள்ள ஒரு தீவாகும். இத்தீவு படங்கு, போயிடன், பட்டன் என்ற பெயர்களாலும் அழைக்கப்படுகிறது. பரப்பளவில் மதுரா தீவிற்குச் சமமாக 4.408 சதுர கிலோமீட்டர்களை உள்ளடக்கியுள்ளது. இந்தோனேசியாவில் 19 ஆவது பெரிய தீவான இது உலக அளவில் 129 ஆவது பெரிய தீவாக உள்ளது.

வரலாறு

[தொகு]
படோனின் முதலாவது அமைச்சர்

குடியேற்ற சகாப்தத்திற்கு முன்பு அக்காலத்தில் இத்தீவு படங்கு என்று அழைக்கப்பட்டது. கிழக்கு இந்தோனேசியாவின் தெர்னேட்டுத் தீவின் செயலெல்லைக்கு உட்பட்டே படங்கு தீவு இருந்தது. குறிப்பாக பதினாறாம் நூற்றாண்டில், தெர்னேட்டுப் பேரரசின் முக்கியமான இரண்டாம்நிலை மண்டல மையமாக விளங்கியது. மண்டல அளவிலான வியாபத்தைக் கட்டுப்படுத்தியதோடு, தெர்னேட்டுப் பேரரசிற்குச் செலுத்தவேண்டிய கப்பத்தை வசூலிக்கும் பணியும் இத்தீவில் மேற்கொள்ளப்பட்டது.

தீவின் முதலாவது இசுலாமிய மன்னரான சுல்தான் முர்கம், இத்தீவின் பிரதானமான துறைமுகத்தின் பெயரால் நினைவுகூரப்படுகிறார். பாவ்பாவ் நகரில் இந்த முர்கம் துறைமுகம் இருக்கிறது.

புவியியல்

[தொகு]

படோன் தீவில் இடம்பெற்றுள்ள மிகப்பெரிய நகரம் பாவ்பாவ் ஆகும். இந்நகரில் வோலியோ, சியாசியா மொழிகள் பேசப்படுகின்றன. வடக்கில் வாவோனை, மேற்கில் முனா மற்றும் கபயீனா, தென்மேற்கில் சியும்பு போன்ற தீவுகள் இத்திவுக்கு அருகில் அமைந்துள்ள முக்கியத் தீவுகளாகும். துகாங்கு பேசி என்ற மொழி பேசப்படும் துகாங்கு பேசித் தீவு படோனுக்குக் கிழக்கில் கொலோவானா வாடாபோ வளைகுடாவினால் பிரிக்கப்பட்டு அமைந்துள்ளது.

தீவுக்கு தெற்கே படுவாடாசு தீவு உள்ளது. சுதந்திரத்துக்கு முந்தைய காலத்தில் பவுடன் செல்வழி என்ற பெயரில் படுவாடாசு தீவு பிரபலமானதாக இருந்தது. வடக்கு புலோரெசு கடலில் தீவிடை கடற்பயணத்திற்கான ஒரு முக்கிய அமைவிடமாகவும் படுவாடாசு தீவு சிறந்து விளங்கியது[1].

சூழலியல்

[தொகு]

தீவின் பெரும்பகுதி மழைக்காடுகளால் சூழப்பட்டு கானக விலங்குகள் வாழுமிடமாக உள்ளது. மற்றும் அதன் வன அறியப்படுகிறது. அது அனோவா மட்டுமே இரண்டு வாழ்விடங்களில் ஒன்று, எருமை ஒரு வகை உள்ளது. எருமை வகையைச் சேர்ந்த தாழ்நில அனோவா மற்றும் கானக அனோவாக்களுக்கு மட்டும் வாழிடமாக இத்தீவு உள்ளது.

மக்கள்

[தொகு]

படோன் தீவில் வோலியோ, சியா-சியா மொழிகள் பேசப்படுகின்றன. இவைதவிர முனா, துகாங்கு பேசி, கும்பேவாகா, இலாசாலிமு, கமாரு, பசோவா, தாலோகி, குலிசுசு மற்றும் கியோகோ[2][3] போன்ற பல்வேறு கிளைமொழிகளும் இங்கு பேசப்படுகின்றன. தேசிய மொழியான இந்தோனேசிய மொழியும் பள்ளிகளில் பரவலாகப் போதிக்கப்படுகிறது.

தென்கொரியாவின் சியோல் நகரத்தைச் சார்ந்த அன்மின்சியோங்கியும் மொழியியல் கழகம் உருவாக்கிய பாடப்புத்தகங்களின் அடிப்படையில், பாவ்-பாவ் நகரத்து சியா-சியா பழங்குடியினர் கொரிய அங்குல் எழுத்துக்களைப் பயன்படுத்தத் தொடங்கினர்[4].

பொருளாதாரம்

[தொகு]

இயற்கை நிலக்கீல் எனப்படும் கரிப்பிசின் மற்றும் பல்வேறு வகையான கனிமங்கள் இத்தீவில் மிகப் பெருமளவில் காணப்படுகிறது. படோனிலிருந்து கிடைக்கும் அசுபால்டை தார் மாற்றிகளாகவும் [5]பெட்ரோலிய அசுபால்ட்டுக்கு மாற்றாகவும் பயன்படுத்த முடியும். இதன் விளைவாக, வழக்கமான படிமம் சார்ந்த வளங்களை நம்பியிருக்கும் நிலையை இவ்வசுபால்ட்டு குறைக்கிறது

நிர்வாகம்

[தொகு]

பாவ்-பாவ் நகரம், படோன் நிர்வாக அலுவலகம், வடக்கு படோன் நிர்வாக அலுவலகம் என்ற மூன்று இரண்டாம் நிலை நிர்வாகப் பிரிவுகளின் கட்டுப்பாட்டில் படோன் தீவு செயற்பட்டது. தீவுக்கூட்டம் என்ற இனப்பெயரை முன்வைத்து முனா நிர்வாக அலுவலகம், வாகாடோபி நிர்வாக அலுவலகம், போம்பனா நிர்வாக அலுவலகத்தின் ஒரு பகுதி போன்ற கூடுதலான மேலும் மூன்று நிர்வாக அலுவலகங்கள் படோன் தீவை கட்டுப்படுத்துகின்றன.

மேற்கோள்கள்

[தொகு]
  1. Goodall, George (Editor)(1943) Philips' International Atlas London, George Philip and Son map 'East Indies' pp.91-92
  2. van den Berg, Rene. "Preliminary Notes on the Cia-Cia language (South Buton)". Excursies in Celebes. p. 305. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 90-6718-032-7.
  3. "Ethnologue". பார்க்கப்பட்ட நாள் 2009-10-11.
  4. "Cia-Cia adopts Hangul to preserve spoken language". 7 August 2009.
  5. "Buton Asphalt Indonesia".
"https://ta.wikipedia.org/w/index.php?title=படோன்&oldid=2141752" இலிருந்து மீள்விக்கப்பட்டது