பகளாமுகி
பகளாமுகி | |
---|---|
அதிபதி | எதிரிகளைக் கட்டுப்படுத்தல் |
வகை | மகாவித்யா |
மந்திரம் | ஓம் ஹ்ரீம் பகளாமுகி சர்வதுஷ்டானாம் வசம் முகம் படம் ஸ்தம்பய ஜிஹ்வம் கீலய பூதம் விநாசய ஹ்ரீம் ஓம் ஸ்வாஹா |
ஆயுதம் | தண்டம் |
துணை | சிவன் (பகளாமுகன் வடிவில்) |
பகளாமுகி பத்து மகாவித்யா தேவியரில் ஒருவர்.[1] தன் கையிலுள்ள தண்டத்தின் மூலம், பகளா, தன் அடியவர்களின் தீய எண்ணங்களையும் அவர்களது எதிரிகளையும் அழித்தொழிப்பதாகச் சொல்லப்படுகிறது. வடநாட்டில் "பீதாம்பரி அம்மை" என்ற பெயரில் இவள் வழிபடப்பட்டு வருகிறாள்.
வேர்ப்பெயரியல்
[தொகு]"பகளா" "முகம்" என்ற இரு சொற்களின் கூட்டாலானது, இத்தேவியின் பெயர். பகளா என்பது, "வல்கா" என்ற சமசுகிருத வேர்ச்சொல்ல்லில் இருந்து உருவான "கடிவாளம்" எனும் பொருளைத் தரும் சொல்லாகும். கட்டுப்படுத்தக்கூடிய வல்லமையைத் தரும் முகத்தைக் கொண்டவள் என்பது பகளாமுகி என்ற பெயரின் பொருளாகின்றது. எனவே, தேவியின் மயக்கும் மாய ஆற்றலின் வடிவினள் ஆகின்றாள்.[2]
சிற்பவியல்
[தொகு]மஞ்சளாடை உடுத்து, இளம்பிறை சூடி, மஞ்சட் தாமரைகள் பூக்கும், தேன்கடல் நடுவேயுள்ள பொற்சிம்மாசனத்தில் பகளாமு்கி அன்னை வீற்றிருக்கிறாள். பொதுவாக இருகரத்தவளாக சித்தரிக்கப்படும் அன்னையின் வடிவம், ஒருகரத்தால், அசுரன் ஒருவனைத் தாக்கும் தண்டத்தையும், மறுகரத்தால், அவன் நாவைப் பிடித்து இழுத்தபடியும் காட்சிதரும். அன்னையவள் எதிரிக்கு ஏற்படுத்தும் செயலிழப்பை இவ்வடிவம் சுட்டிக்காட்டுகின்றது. நாற்கரத்தவளாக விளங்கும் பகளாவின் திருவுருவம் பற்றியும் சில நூல்கள் சொல்கின்றன.
"பீதாம்பரா தேவி", "பிரம்மஸ்திர ரூபிணி" என்ற பெயர்கள் தாங்கும் பகளா, எந்தப் பொருளையும் அதன் எதிர்மாறு நிலைக்கு மாற்றும் வல்லமை கொண்டவள். பேசுவோரை ஊமையாக்குவாள். அறிவை அஞ்ஞானம் ஆக்குவாள், தோல்வியை வெற்றி ஆக்குவாள். வெற்றியி மறைந்துள்ள்ளா தோல்வியையும், வாழ்க்கையில் மறைந்துள்ள மரணத்தையும், துன்பத்தில் மறைந்துள்ள இன்பத்தையும் சுட்டிக் காட்டி, அவளது பக்தர்களுக்கு, பேரறிவூட்ட அவளால் முடியும்.
வழிபாடு
[தொகு]பெரும்புயலொன்றிலிருந்து தேவர்களைக் காப்பதற்காக, பகளாமுகி அன்னை அவதரித்ததாகச் சொல்லப்படும், சௌராட்டிர நாட்டின் "ஹரித்ர சரோவர்" பற்றிய விவரணங்களை, மத்திய பிரதேசத்திலுள்ள பீதாம்பர பீடத்தில் காணமுடியும். தாந்திரிகநெறியின் மையமாகக் கொள்ளப்படும் கவுகாத்தி காமாக்யா கோயிலிலுக்கருகில் பகளாமுகிக்கும்ஆலயம் உள்ளது. இமாச்சலப் பிரதேசத்திலுள்ள பான்கண்டி, தமிழகத்திலுள்ள கல்லிடைக்குறிச்சி பாப்பான்குளம்[3] நேபாளத்தின் பதான் முதலான இடங்களில் பகளாமுகிக்கு ஆலயம் அமைந்துள்ளது.
மேலும் பார்க்க
[தொகு]உசாத்துணைகள்
[தொகு]- ↑ Who Is Bagalamukhi?
- ↑ Frawley, p.130
- ↑ "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2014-12-21. பார்க்கப்பட்ட நாள் 2015-08-23.
நூல்கள்
[தொகு]- David R. Kinsley (1998). Tantric Visions of the Divine Feminine: The Ten Mahāvidyās. Motilal Banarsidass Publ. pp. 196–207. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-81-208-1522-3.
- David R. Kinsley (1988). Hindu Goddesses: Visions of the Divine Feminine in the Hindu Religious Tradition. University of California Press. pp. 161–164. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-520-90883-3.
- David Frawley (1996). Tantric Yoga and the Wisdom Goddesses: Spiritual Secrets of Ayurveda. Motilal Banarsidass Publ. pp. 130–135. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-81-208-1357-1.