தோரமணன்
Appearance
தோரமணன் | |
---|---|
ஹெப்பதலைட்டுகளின் பேரரசன் | |
பின்னையவர் | மிகிரகுலன் |
குழந்தைகளின் பெயர்கள் | மிகிரகுலன் |
தோரமணன் (Toramana) ஹெப்தலைட்டுகளின் ஒரு பிரிவினரான வெள்ளை ஹூணர்களின் பேரரசர் ஆவார். இவர் பண்டைய இந்தியாவின் வடமேற்குப் பகுதிகளை ஐந்தாம் நூற்றாண்டு முதல் ஆறாம் நூற்றாண்டின் முற்பகுதி வரை ஆண்டவர்.[1] ஹூணர்களின் படைபலத்தை ஒன்றுசேர்த்து பஞ்சாப், ஆப்கானித்தான், கந்தகார், மேற்கு இந்தியாப் பகுதிகளைக் கைப்பற்றினார். சஞ்செலி கல்வெட்டுக் குறிப்புகள் தோரமணனின் மால்வா மற்றும் குஜராத் வெற்றிகளைக் கூறுகிறது. தோரமணனின் ஆட்சிப் பகுதியில் தற்கால உத்தரப் பிரதேசம், இராஜஸ்தான் மற்றும் காஷ்மீரின் பகுதிகளும் இருந்தன.[2]
கி பி 510-இல் குப்தப் பேரரசர் பானுகுப்தர் தோரமணனை போரில் வென்றார்.[3][4] இவரது மகன் மிகிரகுலனும் [5] குப்தப் பேரரசர் நரசிம்ம குப்தர் மற்றும் மால்வா மன்னர் யசோதர்மனால் தோற்கடிப்பட்டார்.
இதனையும் காண்க
[தொகு]மேற்கோள்கள்
[தொகு]- ↑ Grousset, Rene (1970). The Empire of the Steppes. Rutgers University Press. pp. 70-71. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-8135-1304-9.
- ↑ Dani, Ahmad Hasan (1999). History of Civilizations of Central Asia: The crossroads of civilizations, A.D. 250 to 750. Motilal Banarsidass Publ. p. 142. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 8120815408. பார்க்கப்பட்ட நாள் November 5, 2012.
- ↑ Encyclopaedia of Indian Events & Dates by S. B. Bhattacherje A15
- ↑ The Classical Age by R.K. Pruthi p.262
- ↑ "Gwalior Stone Inscription of Mihirakula" (PDF). Project South Asia. Archived from the original (PDF) on 2011-08-12. பார்க்கப்பட்ட நாள் 2009-04-05.