ஜாம்பி
ஜாம்பி | |
---|---|
மாகாணம் | |
ஜாம்பி மாகாணம் | |
இந்தோனேசியா நாட்டின் சமத்திரா தீவில் ஜாம்பி மாகாணத்தின் அமைவிடம் | |
ஆள்கூறுகள்: 1°35′S 103°37′E / 1.583°S 103.617°E | |
நிறுவிய ஆண்டு | 6 சனவரி 1957 |
தலைநகரம் | ஜாம்பி |
அரசு | |
• நிர்வாகம் | ஜாம்பி மாகாண அரசு |
• ஆளுநர் | அல் ஹரிஸ், (தேசிய சாசன கட்சி) |
• துணை ஆளுநர் | அப்துல்லா சஞ்சித் |
பரப்பளவு | |
• மொத்தம் | 49,026.58 km2 (18,929.27 sq mi) |
• பரப்பளவு தரவரிசை | 11வது |
ஏற்றம் | 500 m (1,600 ft) |
உயர் புள்ளி (கெரிஞ்சி மலை) | 3,805 m (12,484 ft) |
மக்கள்தொகை (2023 மதிப்பீடு)[1] | |
• மொத்தம் | 36,79,169 |
• தரவரிசை | 19வது |
• அடர்த்தி | 75/km2 (190/sq mi) |
அடர்த்தி தரவரிசை | 23வது |
மக்கள் தொகை பரம்பல் | |
• இனக்குழுக்கள் | ஜாம்பி மலாய் மக்கள் 43.57% ஜாவா மக்கள் 29.10% பிற இந்தோனேசிய மலாய் மக்கள் 5.37% மியாங்கபௌ மக்கள் 5.33% பதாக் மக்கள் 3.46% பஞ்சார் மக்கள் 3.33% பக்கீ மக்கள் 3.13% சுந்தானிய மக்கள் 2.58% பலேங்பாங் மக்கள் 1.88% சீன இந்தோனேசிய மக்கள் 1.215 பிறர் 1.04% [2] |
• சமயங்கள் | இஸ்லாம் 95.08% கிறிஸ்தவம் 3.88% புராட்டஸ்டண்ட் 3.31% கத்தோலிக்கம்- 0.58% பௌத்தம் 0.94% நாட்டுப்புற மதம் 0.06% கன்பூசியம் 0.02% இந்து சமயம் 0.013% [3] |
மொத்த உள்நாட்டு உற்பத்தி (மதிப்பீடு) | 2022 |
- மொத்தம்[4] | இந்தோனேசிய ரூபாய் 276.3 டிரில்லியன் |
தனி நபர் வருமானம்[5] | இந்தோனேசிய ரூபாய் 76.1 மில்லியன் |
- மொத்த வளர்ச்சி[6] | 5.13% |
மனித மேம்பாட்டுச் சுட்டெண் | 0.728 |
இணையதளம் | jambiprov |
ஜாம்பி மாகாணம் (Jambi) என்பது இந்தோனேசியா நாட்டின் 38 மாகாணங்களில் ஒன்றாகும். இம்மாகாணம் மத்திய சமத்திரா தீவில் அமைந்துள்ளது.இதன் தலைநகரம் ஜாம்பி நகரம் ஆகும். இதன் மேற்கில் பார்சான் மலைகள் உள்ளது. ஜாம்பி மாகாணம் 49,026.58 சதுர கிலோ மீட்டர் பரப்பளவும்; 2010 கணக்கெடுப்பின்படி 30,92,265 மக்கள் தொகையும் கொண்டது.[2] 2023ஆம் ஆண்டின் கணக்கெடுப்பின் தற்காலிக மதிப்பீடின்படி, இதன் மக்கள் தொகை 3,679,169 ஆக உயர்ந்துள்ளது.[7]
இனம், சமயம் & மொழிகள்
[தொகு]ஜாம்பி மாகாணத்தில் ஜாம்பி மலாய் மக்கள் 43.57%, ஜாவா மக்கள் 29.10%, பிற இந்தோனேசிய மலாய் மக்கள் 5.37%, மியாங்கபௌ மக்கள் 5.33%, பதாக் மக்கள் 3.46%, பாஞ்சார் மக்கள் 3.33%, பக்கீ மக்கள் 3.13%, சுந்தானிய மக்கள் 2.58%, பலேங்பாங் மக்கள் 1.88%, சீன இந்தோனேசிய மக்கள் 1.215 மற்றும் பிற மொழி பேசுபவர்கள் 1.04% ஆகவுள்ளனர். ஜாம்பி மாகாண மக்களில் இஸ்லாம் 95.08%, கிறிஸ்தவம் 3.88% (புராட்டஸ்டண்ட் 3.31% மற்றும் கத்தோலிக்கம்- 0.58%), பௌத்தம் 0.94%, நாட்டுப்புற மதம் 0.06%, கன்பூசியம் 0.02% மற்றும் இந்து சமயம் 0.013% பேர் பின்பற்றுகின்றனர். ஜாம்பி மாகாணத்தில் பெரும்பான்மையாக இந்தோனேசிய மொழியும், பிரதேச மொழிகளாக ஜாம்பி மலாய் மொழி, கெரிஞ்சி மொழி மற்றும் குபி மொழிகள் பேசப்படுகிறது.
எல்லைகள்
[தொகு]ஜாம்பி மாகாணத்தின் வடக்கில் ரியாவு மாகாணம், மேற்கில் மேற்கு சுமாத்திராவும், தென்மேற்கில் பெங்குலு, தெற்கில் தெற்கு சுமாத்திரா மாகாணம்; கிழக்கில் பசிபிக் பெருங்கடலில் உள்ள ரியாவு தீவுகள் அமைந்துள்ளது.
மாகாண நிர்வாகம்
[தொகு]ஜாம்பி மாகாணம் நிர்வாக வசதிக்காக 9 பகுதிகள் மற்றும் 2 நகரங்களாகப் பிரிக்கப்பட்டுள்ள்து. அவைகள் வருமாறு:
சுட்டெண் | பகுதி அல்லது நகரத்தின் பெயர் |
பரப்பளவு சகிமீ2 |
மக்கள் தொகை கணக்கெடுப்பு ஆண்டு 2010 |
மக்கள் தொகை கணக்கெடுப்பு 2020 |
மக்கள் தொகை தற்காலிக மதிப்பீடு 2023 |
தலைமையிடம் | மனித மேம்பாட்டுச் சுட்டெண்[8] 2018 மதிப்பீடு |
---|---|---|---|---|---|---|---|
15.01 | கெரிஞ்சி பகுதி | 3,445.20 | 229,495 | 250,259 | 255,120 | சியுலாக் | 0.705 (High) |
15.02 | மெரஞ்சின் பகுதி | 7,540.12 | 333,206 | 354,052 | 368,390 | பாங்கோலி | 0.688 (Medium) |
15.03 | சரோலங்குன் பகுதி | 5,935.89 | 246,245 | 290,047 | 302,240 | சரோலாங்குன் | 0.694 (Medium) |
15.04 | பதாங் ஹரி பகுதி | 5,387.52 | 241,334 | 301,700 | 312,730 | முவாராபுளியான் | 0.693 (Medium) |
15.05 | முவாரோ ஜாம்பி பகுதி | 5,225.80 | 342,952 | 402,017 | 418,800 | செங்கெட்டி | 0.683 (Medium) |
15.06 | மேற்கு தன்சுங் ஜபூங் பகுதி | 5,546.06 | 278,741 | 317,498 | 330,470 | குவாலா துங்கல் | 0.671 (Medium) |
15.07 | கிழக்கு தன்சுங் ஜபூங் பகுதி | 4,546.62 | 205,272 | 229,813 | 236,730 | முவாரா சாபாக் | 0.633 (Medium) |
15.08 | பூங்கோ பகுதி | 4,760.83 | 303,135 | 362,363 | 376,380 | முவாரா பூங்கோ | 0.694 (Medium) |
15.09 | தெபோ பகுதி | 6,103.74 | 297,735 | 337,669 | 350,760 | முவாரா தெபோ | 0.686 (Medium) |
15.71 | ஜாம்பி நகரம் | 169.89 | 531,857 | 606,200 | 627,770 | - | 0.774 (High) |
15.72 | சுங்கை பெனுக் நகரம் | 364.92 | 82,293 | 96,610 | 99,770 | - | 0.746 (High) |
மொத்தம் | 49,026.58 | 3,092,265 | 3,548,228 | 3,679,169 | ஜாம்பி | 0.705 (High) |
உலகப் பாரம்பரியக் களங்கள்
[தொகு]- கெரிஞ்சி செப்லாத் தேசியப் பூங்கா
- முவாரோ ஜாம்பி கோயில்கள் வளாகம், 7 மற்றும் 8ம் நூற்றாண்டுகளில் கட்டப்பட்ட இவ்வளாகம் பௌத்த சமயக் கல்வி நிலையமாக உள்ளது.[9]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Badan Pusat Statistik, Jakarta, 28 February 2024, Provinsi Jambi Dalam Angka 2024 (Katalog-BPS 1102001.15)
- ↑ 2.0 2.1 Badan Pusat Statistik, Jakarta, 2021.
- ↑ "ArcGIS Web Application".
- ↑ Badan Pusat Statistik (2023). "Produk Domestik Regional Bruto (Milyar Rupiah), 2022" (in இந்தோனேஷியன்). Jakarta: Badan Pusat Statistik.
- ↑ Badan Pusat Statistik (2023). "Produk Domestik Regional Bruto Per Kapita (Ribu Rupiah), 2022" (in இந்தோனேஷியன்). Jakarta: Badan Pusat Statistik.
- ↑ Badan Pembangunan Nasional (2023). "Capaian Indikator Utama Pembangunan" (in இந்தோனேஷியன்). Jakarta: Badan Pembangunan Nasional.
- ↑ "Jumlah Penduduk Menurut Agama" (in இந்தோனேஷியன்). Ministry of Religious Affairs. 31 August 2022. பார்க்கப்பட்ட நாள் 29 October 2023.
- ↑ All Stats search பரணிடப்பட்டது 2017-08-09 at the வந்தவழி இயந்திரம் jambi.bps.go.id
- ↑ "Waspada Online – Pusat Berita dan Informasi Medan Sumut Aceh". waspada.co.id. பார்க்கப்பட்ட நாள் 22 March 2018.
ஆதார நூற்கள்
[தொகு]- Locher-Scholten, Elsbeth. 1993. Rivals and rituals in Jambi, South Sumatra. Modern Asian Studies 27(3):573-591.