சேணேவி
![]() | இக்கட்டுரையின் தலைப்பு விக்கிப்பீடியாவின் பெயரிடல் மரபுக்கோ, கலைக்களஞ்சிய பெயரிடல் மரபுக்கோ ஒவ்வாததாக இருக்கலாம் இக்கட்டுரையின் தலைப்பினை பெயரிடல் மரபுக்கு ஏற்றவாறு மாற்றக் கோரப்பட்டுள்ளது. உங்கள் கருத்துக்களை உரையாடல் பக்கத்தில் தெரிவியுங்கள். |
![](http://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/4/45/Royal_Artillery_Firing_105mm_Light_Guns_MOD_45155621.jpg/220px-Royal_Artillery_Firing_105mm_Light_Guns_MOD_45155621.jpg)
சேணேவி[சான்று தேவை] (artillery) என்பது காலாட்படையின் துப்பாக்கிகளால் தாக்க முடியாத வரம்புகளையும் ஆற்றலையும் தாண்டி தாக்கக்கூடிய தன்மை கொண்ட கனரக இராணுவ ஆயுதங்களாகும். ஆரம்ப கால சேணேவிகள் இராணுவ முற்றுகையின் போது தற்காப்புச் சுவர்களையும், கோட்டைகளையும் தகர்க்கும் திறன் கொண்டதாக இருந்ததோடு, கனரக, அசைவிலா ஆயுதங்களின் உருவாக்கத்திற்கும் வழி வகுத்தது.
உண்மையில், "சேணேவி" என்ற சொல் சுடுகலன் (Gun) மற்றும் கவசம் கொண்ட எந்தவொரு படைவீரர்களையும் குறிக்கிறது.[1][2].[not in citation given] துப்பாக்கி குண்டு மற்றும் தெறோச்சி[தெளிவுபடுத்துக] அறிமுகப்படுத்தப்பட்டதிலிருந்து, "சேணேவிகள்" என்பது பெரும்பாலும் தெறோச்சிகளைக் குறிக்கிறது.[சான்று தேவை] மேலும் தற்கால பயன்பாட்டில், பொதுவாக எறிகணை பயன்படுத்தும் பெருந்துப்பாக்கிகள், தெறோச்சிகள் கணையெக்கி மற்றும் உந்துகணை சேணேவிகள் ஆகியவற்றைக் குறிக்கிறது.
பொதுவான பேச்சில், "பீரங்கி" என்ற சொல் பெரும்பாலும் தனிப்பட்ட சாதனங்களைக் குறிக்க பயன்படுகிறது.[சான்று தேவை] இந்த பீரங்கி என்னும் சொல்லின் உண்மையான அடிப்படைப் பொருள் அயலான் என்பதே ஆகும்.[சான்று தேவை] எறிகணையினைச் செலுத்தும் பொறி அல்ல. அயலான் என்னும் பொருள்படும் போர்த்துக்கீசரின் விரங்கி (firangi) என்னும் சொல்லின் தமிழ்ப்படுத்தப்பட்ட வடிவமான பீரங்கி என்பதை இதற்கான தமிழ்ச்சொல்லாக வழங்கினர். இச்சொலானது தெலுங்கு, கன்னடம் ஆகிய மொழிகளிலும் இதே பொருளிலே வழங்கப்படுகிறது. அவற்றின் பாகங்கள் மற்றும் பொருத்துதல்களுடன் கூட்டாக, "உபகரணங்கள்" என்றழைக்கப்படுகின்றன.
மேலும் காண்க
[தொகு]மேற்கோள்கள்
[தொகு]- ↑ "artillery | Definition, History, Types, & Facts". Encyclopedia Britannica (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2020-09-24.
- ↑ Bellamy, Christopher (2001), "artillery", The Oxford Companion to Military History (in ஆங்கிலம்), Oxford University Press, எண்ணிம ஆவணச் சுட்டி:10.1093/acref/9780198606963.001.0001/acref-9780198606963-e-97, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-19-860696-3, பார்க்கப்பட்ட நாள் 2020-09-24