சீற்றா
கிரேக்க நெடுங்கணக்கு | |||
---|---|---|---|
Αα | அல்ஃபா | Νν | நியூ |
Ββ | பீற்றா | Ξξ | இக்சய் |
Γγ | காமா | Οο | ஒமிக்ரோன் |
Δδ | தெலுத்தா | Ππ | பை |
Εε | எச்சைலன் | Ρρ | உரோ |
Ζζ | சீற்றா | Σσς | சிகுமா |
Ηη | ஈற்றா | Ττ | உட்டோ |
Θθ | தீற்றா | Υυ | உப்சிலோன் |
Ιι | அயோற்றா | Φφ | வை |
Κκ | காப்பா | Χχ | கை |
Λλ | இலமிடா | Ψψ | இப்சை |
Μμ | மியூ | Ωω | ஒமேகா |
அநாதையாய் | |||
Ϝϝ | டிகாமா | Ϟϟ | கோப்பா |
Ϛϛ | சிடீகுமா | Ϡϡ | சாம்பை |
Ͱͱ | ஹஈற்றா | Ϸϸ | உஷோ |
Ϻϻ | சான் |
சீற்றா (Zeta, கிரேக்கம்: ζήτα) அல்லது சீட்டா (தமிழக வழக்கு) என்பது கிரேக்க நெடுங்கணக்கின் ஆறாவது எழுத்து ஆகும்.[1] கிரேக்க எண்களில் இவ்வெழுத்தானது ஏழு என்ற பெறுமானத்தை உடையது.[2] பினீசிய எழுத்தான சயினிலிருந்தே () சீற்றா பெறப்பட்டது. சீற்றாவிலிருந்து தோன்றிய எழுத்துகள் உரோம எழுத்து Z, சிரில்லிய எழுத்து З என்பனவாகும்.
பெயர்
[தொகு]ஏனைய கிரேக்க எழுத்துகளைப் போல் இவ்வெழுத்து பினீசிய எழுத்தின் பெயரிலிருந்து தனது பெயரை எடுக்கவில்லை. பீற்றா, ஈற்றா, தீற்றா என்பன போன்ற ஒலியுடன் சீற்றா என்ற பெயரைப் பெற்றுள்ளது.
சீற்றா என்பது உரோம எழுத்து Zஐக் குறிக்கவும் பயன்படுத்தப்படுகின்றது.
பயன்பாடுகள்
[தொகு]எண்
[தொகு]கிரேக்க எண்களில், அல்ஃபா, பீற்றா, காமா, தெலுத்தா, எச்சைலன் முதலியவை முறையே ஒன்று, இரண்டு, மூன்று, நான்கு, ஐந்து ஆகிய பெறுமானங்களைக் குறி்த்தாலும் சீற்றா என்பது வேறுபட்டு ஏழு என்ற பெறுமானத்தையே குறிக்கிறது.[3] திகம்மா என்ற எழுத்தே ஆறு என்ற பெறுமானத்தை உடையது.[4]
கணிதம்
[தொகு]கணிதத்தில் இரீமன் சீற்றாச் சார்பியத்தைக் குறிப்பதற்குச் சீற்றா பயன்படுத்தப்படுகின்றது.
வானியல்
[தொகு]சீற்றாப் புயல் எனும் பெயர் 2005 அத்திலாந்திக்குப் புயற்காலநிலையின்போது பயன்படுத்தப்பட்டது.[5]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ கிரேக்க நெடுங்கணக்கு (ஆங்கில மொழியில்)
- ↑ கிரேக்க எண்கள் (ஆங்கில மொழியில்)
- ↑ கிரேக்க எண் முறைமைகள் (ஆங்கில மொழியில்)
- ↑ ["பண்டைய கிரேக்க எண்கள் (ஆங்கில மொழியில்)". Archived from the original on 2012-06-16. பார்க்கப்பட்ட நாள் 2012-04-26. பண்டைய கிரேக்க எண்கள் (ஆங்கில மொழியில்)]
- ↑ 2005-சீற்றாப் புயல் (ஆங்கில மொழியில்)