சிவகாசி மாநகராட்சி
Appearance
சிவகாசி மாநகராட்சி | |
---|---|
வரலாறு | |
தோற்றுவிப்பு | 21 அக்டோபர் 2021 |
தலைமை | |
மேயர் | சங்கீதா இன்பம் (திமுக) 2022 |
துணை மேயர் | விக்னேஷ் பிரியா (திமுக) 2022 |
உறுப்பினர்கள் | 48 |
தேர்தல்கள் | |
அண்மைய தேர்தல் | 2022 |
சிவகாசி மாநகராட்சி, தமிழ்நாட்டின் விருதுநகர் மாவட்டத்திலுள்ள சிவகாசி சிறப்புநிலை நகராட்சி மற்றும் திருத்தங்கல் நகராட்சிப் பகுதிகளை இணைத்து 48 வார்டுகளுடன் 21 அக்டோபர் 2021 அன்று சிவகாசி மாநகராட்சி நிறுவப்பட்டது. [1][2][3]
சிவகாட்சி மாநகராட்சியின் முதல் தேர்தல்
[தொகு]2022 தமிழ்நாடு நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலின் போது சிவகாசி மாநகராட்சிக்கு முதல் முறையாக 48 வார்டுகளுக்கு தேர்தல் நடைபெற்றது. தேர்தலில் திமுக கூட்டணி 32 வார்டுகளிலும், அதிமுக 11 வார்டுகளிலும், பாரதிய ஜனதா கட்சி 1 வார்டையும், பிறர் 4 வார்டுகளிலும் வென்றனர். இம்மாநகராட்சிக்கு முதன்முறையாக நடைபெற்ற மேயர் தேர்தலில் திமுகவின் சங்கீதா இன்பமும், துணை மேயர் தேர்தலில் விக்னேஷ் பிரியாவும் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.[4]