கோமெல்
கோமெல்
Гомель | |
---|---|
பெலரஸ் நாட்டில் கொமெல் நகரத்தின் அமைவிடம் | |
ஆள்கூறுகள்: 52°26′43″N 30°59′03″E / 52.44528°N 30.98417°E | |
நாடு | பெலருஸ் |
மாகாணம் | கோமெல் மாகாணம் |
நிறுவப்பட்டது | 1142 |
அரசு | |
• நகர் மன்றத் தலைவர் | பீட்டர் கிரிசென்கா |
பரப்பளவு | |
• மொத்தம் | 139.77 km2 (53.97 sq mi) |
ஏற்றம் | 138 m (453 ft) |
மக்கள்தொகை (2015) | |
• மொத்தம் | 5,26,872 |
• அடர்த்தி | 4,258.4/km2 (11,029/sq mi) |
[1] | |
நேர வலயம் | ஒசநே+3 (மாஸ்கோ நேரம்) |
அஞ்சல் சுட்டு எண் | 246xx, 247xxx |
இடக் குறியீடு | +375 232(2) |
வாகனத் தகடு எண் | 3 |
இணையதளம் | http://www.gorod.gomel.by |
கோமெல் (Gomel, (ரஷ்ய மொழி: Гомель, கோமெல், பெலருஸ் நாட்டின் முக்கிய நகரங்களில் ஒன்றாகும். இது பெலரஸ் நாட்டின் தெற்கில் உக்ரைன் நாட்டின் எல்லைப்புறத்தில் அமைந்துள்ளது. கோமெல் மாகாணத்தின் தலைநகரம் மற்றும் நகராட்சி ஆகும். 139.77 சதுர கிலோ மீட்டர் பரப்பளவு கொண்ட இந்நகரத்தின் 2015-ஆம் ஆண்டின் மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, கோமெல் நகரத்தின் மக்கள் தொகை 5,26,872 ஆகும்.
வரலாறு
[தொகு]பெலாரஸ் என தற்போது அழைக்கப்படும் பகுதிகள் பெரும்பாலும் லித்துவேனியா, போலந்து, ரஷ்யப்பேரரசு போன்ற நாடுகளின் பகுதிகளாகவே வரலாற்றுக் காலங்களில் இருந்து வந்தன. இறுதியில் பெலாரஸ் 1922 இல் சோவியத் யூனியனின் ஒரு குடியரசாக (பெலாரஸ்ஸியன் சோவியத் சோசலிசக் குடியரசு) மாறியது. 27 ஆகஸ்ட் 1990 இல் தனது தன்னாட்சி உரிமையை அரசுசார்பாக அறிவித்தது. சோவியத் யூனியனின் உடைவைத் தொடர்ந்து 25 ஆகஸ்ட் 1991 பெலாரஸ் குடியரசு என்ற நாடாக தம் விடுதலையை (சுதந்திரப்) அறிவிப்பு செய்துகொண்டது. 1994 இல் இருந்து அலெக்சாண்டர் லுகாசென்கோ இந்நாட்டின் குடியரசுத் தலைவராக உள்ளார். பெலாரஸ் தற்போது அயல்நாடான ரஷ்யாவுடன் ரஷ்யா பெலாரஸ் யூனியன் (Union of Russia and Belarus)என்னும் திட்டம் தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்திவருகிறது. இத்திட்டத்தில் இரு நாடுகளின் பொருளாதாரங்களை இணைப்பதுடன் மற்றும் பல விடயங்களும் அடங்கும். இதன் அயல்நாடான உக்ரைனில் 1986 இல் நடந்த செர்ணோபில் விபத்தினால் ஏற்பட்ட அணுக்கசிவு விளைவுகளினால் தொடர்ந்தும் இந்நாடு பாதிப்படைந்துவருகிறது
ருசியா-உக்ரைன் போர் நிறுத்தப் பேச்சு வார்த்தை
[தொகு]28 பிப்ரவரி 2022 அன்றுடன் ஐந்தாவது நாளாக ருசியா-உக்ரைன் போர் நடந்து கொண்டிருக்கும் வேளையில், போரை நிறுவத்துவதற்கு உருசியா மற்றும் உக்ரைன் நாட்டுப் பிரதிநிதிகள், கோமெல் நகரத்தில் 28 பிப்ரவரி 2022 அன்று கூடி பேச்சுவார்த்தை துவக்கியுள்ளனர்.[2][3]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Belarus - The regions of the Republic of Belarus as well as all cities and urban settlements of more than 10,000 inhabitants". City Population. பார்க்கப்பட்ட நாள் 2016-01-07.
- ↑ "பெலாரஸ் எல்லையில் ரஷியா-உக்ரைன் அமைதி பேச்சுவார்த்தை தொடங்கியது". Archived from the original on 2022-02-28. பார்க்கப்பட்ட நாள் 2022-02-28.
- ↑ Amid ongoing conflict, Moscow-Kyiv officials meet near Belarus border